பகுத்தறிவுப் பிரச்சாரம் வெறும் மேடைப் பேச்சுகளாக அமையாமல் கலை வடிவத்தில் அளிக்கப்பட்டால் அதன் வீச்சு அடித்தட்டு அடிப்படை மக்கள் வரை பேராறாகப் போய்ப் பாய்ந்திடும் என்பது உளவியல் ரீதியான உயர்ந்த கணிப்பாகும்.
எல்லாம் வல்லவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, சாமி ஊர்வலம், தேர்த் திருவிழா, இசைக் கச்சேரி (இப்பொழுது டப்பாங்குத்து, சினிமா பாடல்கள் வரை) என்றுதான் பரப்ப வேண்டியுள்ளது. பரப்பாவிட்டால் பக்தி படுத்துவிடும் என்பது அவர் களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் காட்டு கிறேன் என்றார் தந்தை பெரியார்.
உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை தானே! ஆன்மீகவாதிகளோ மக்களை மடையர்களாக்கி இத்தகு பிரச்சாரம் எனும் தூண்டிலைப் போட்டு சுரண்டல் தொழிலை நடத்துகின்றனர்.
மதங்களுக்குச் சீவநாடியாக இருந்து வருவது பணமும், பிரச்சார மும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங்களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது என்றார் தந்தை பெரியார்.
(தென்னிந்திய சீர்திருத்தக்காரர் கள் மாநாட்டில், 26, 27.11.1928)
நாமோ அந்தச் சுரண்டலின் சூளினை அறுக்க, மூடநம்பிக்கைப் படுகுழியில் தலைகுப்புற வீழ்ந்து கிடக்கும் மக்களைக் கரையேற்ற, பகுத் தறிவைப் பலி கொடுத்து நடைமுறை வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருக்கும் பரிதாப நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க, தன்னம் பிக்கை ஊன்றுகோலைக் கொடுக்க, கரியாகும் காலத்தைத் தடுக்க.
தந்தை பெரியார் கருத்துகளை நெஞ்சில் தாங்கி, மக்கள் மத்தியில் பகுத்தறிவு ஒளியைக் கொண்டு செல்ல கலை வடிவம் தேவைப்படுகிறது; இலக் கிய மறுமலர்ச்சியும் அவசியமாகிறது.
இதனை மனதில் கொண்டுதான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வரும் 6.10.2012 சனி காலை 10 மணிக்கு சென்னை - பெரியார் திடலில் மாநில அளவிலான தந்தை பெரியார் பகுத்தறிவு - கலை இலக்கிய அணி ஒன்றினை உருவாக்கும் வகை யில் இவற்றில் ஆர்வம் உள்ள, திறமை யுள்ள, இன உணர்வுள்ள, பகுத்தறிவா ளர்களின், கலைஞர்களின் கலந்துரையாடல் கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.
நமது கழகப் பொறுப்பாளர்கள் தத்தம் பகுதிகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
பத்திரிகை ஊடகங்கள் ஒரு பக்கம்; தொ(ல்)லைக் காட்சி ஊடகங்களோ விடியற்காலம் முதல் நள்ளிரவு வரை போட்டிப் போட்டுக் கொண்டு மூடத் தனக் குப்பைகளை ஒளிபரப்பிக் கொண்டு மக்களை மடமைக் குழியில் தள்ளும் மூர்க்கமான மோசடி வேலை களில் இறங்கிவிட்டன.
விஞ்ஞானக் கருவிகளின் மூலம் அஞ்ஞான ஊசிப் போன சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள். இதில் அறிவு நாணயம் கிஞ் சிற்றும் உண்டா?
ஏடுகளும், ஆன்மிக இதழ்களை வாரந்தோறும் நோய்க் கிருமிகளாக வெளியிட்டு வருகின்றன. இந்தக் கேடு கெட்டதுகளால் பழி வாங்கப்படும் இந்த மக்களை - பகுத்தறிவு துணை கொண்டு கரையேற்ற வேண்டாமா?
பகுத்தறிவோடும்; மனித நேயத் தோடும் இந்தப் பணியை மேற்கொள்ள நம்மைவிட்டால் வேறு நாதி ஏது?
மதம் - மதத்தைச் சேர்ந்தவர்களி டம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண் டிருக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் பெரியார். (விடுதலை, 14.10.1971)
இனவுணர்வு - பகுத்தறிவு இரண் டையும் விழிகள் என நினைக்கும் எழுத்தாளர்களே, கலைஞர்களே, காலத்தாற் கழகம் மேற்கொள்ள விருக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவுக் கரங்களை நீட்டுவீர்!
பயன் பெறுவீர்! பயன் படுவீர்!!
பயன் பெறுவீர்! பயன் படுவீர்!!
தமிழர் தலைவர் வழி காட்ட இருக் கிறார் - வாருங்கள்! வாருங்கள்!!
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.10.2012
3.10.2012
No comments:
Post a Comment