சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. பி. தனபால் அவர்கள் ராசிபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். அவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
முன்பு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சிவ சண்முகம் (பிள்ளை) அவர்கள் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி வகித்து சிறந்த பெயர் எடுத்தவர். அவர் தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவான பறையர் பிரிவைச் சார்ந்தவர். அதுவே அப்போது சமூகப் புரட்சிதான்!
ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே வாய்ப்பற்ற பிரிவினரான அருந்ததியர் என்ற பிரிவைச் சார்ந்தவர் சட்டமன்றத் தலைவராவது இதுவே முதல் முறை.
அவருக்கும், அவரை இந்தப் பொறுப்பில் அமர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர் களுக்கும் திராவிடர் கழகம் சார்பில் மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்! இது சமூகநீதி யின் வெற்றிகளில் ஒன்றாகும்.
அனைவருக்கும் பொது வாக நடந்து நற்பெயர் எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் புதிய சட்டமன்றத் தலைவருக்கு உண்டு என்பதையும் இந்நேரத்தில் நாம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை கி. வீரமணி
10.10.2012 தலைவர், திராவிடர் கழகம்
10.10.2012 தலைவர், திராவிடர் கழகம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஏற்கெனவே ஆசிரியர் பணிக்குத் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு - தேவையற்றது
- காந்தியார் பிறந்த நாளில் சில முக்கிய சிந்தனைகள் - கி.வீரமணி
- நாடாளுமன்ற குழுவிடம் திராவிடர் கழகத் தலைவர் அளித்த மனுவின் முழு விவரம்
- சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது! : திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
- சமூக நீதியாளர்களின் முக்கிய கவனத்துக்கு: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
No comments:
Post a Comment