சென்னை காசிச் செட்டித் தெரு - சந்தில் உள்ள (சவுக்கார்பேட்டைப் பகுதி) கடந்த 2006 செப்டம்பர் 6ஆம் தேதி (ஆறு ஆண்டுகளுக்குமுன்) அங்குள்ள ஒரு கோயிலின் அர்ச்சகரான கே. தேவேந்திரகுமார் என்ற தேவசங்கர் என்பவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும், அடிஷனல் செஷன்ஸ் கோர்ட் I நீதிபதி M. மோனி என்பவர் கடந்த திங்கள் 15.10.2012 அன்று விதித்து தண்டித்தார்.
இந்த அர்ச்சகர் தேவ சங்கர் என்ற பார்ப்பனரிடம் (NIB Narcotics Intelligence Bureau) அதிகாரிகள் திடீர் என்று சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பையில் 7 கிலோ கஞ்சாவை (பிரசாதம் என்று கூறியிருப்பார் போலும்) ஒளித்து வைத்து விற்பனை செய்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு அப்பால் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்!
என்னே பக்தி! என்னே பக்தி வியாபார நேர்த்தி! சிறைக்கஞ்சா பக்தி வியாபாரியான அர்ச்சகப் பார்ப்பனர் அங்கும் தொழிலைத் துவக்குவாரோ என்னவோ?
சென்னை மத்திய சிறையில் 1976இல் மிசா கைதியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருந்த போது, நடிகவேள் எம்.ஆர். ராதாவும் இருந்தவர். அங்கே அர்ச்சகர் வேடத்தில் வெளியே இருந்து வாரா வாரம் கைதிகளுக்கு பக்தி போதிப்பது போன்ற வேடத்தில், விபூதிப் பொட்டலம், குங்குமப் பொட்டலம் போன்ற பொட்டலங்களைக் கொண்டு சிறைக் கைதிகளிடமே விற்றுத் திரும்புவார்கள். இதை தான் கண்டுபிடித்ததாக கூறினார் என்று ஒருமுறை கூறியது இப்போது நினைவுக்கு வந்தது!
பக்திப் போதையும், கஞ்சா போதையும் எவ்வளவு இணையர்களாகி விட்டார்கள் பார்த்தீர்களா?
No comments:
Post a Comment