Saturday, September 1, 2012

பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!


பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!


புதுடெல்லி, ஆக.31- நடுத்தர குடும்பத்து பெண்கள், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர் என்று நரேந்திர மோடி கூறிய தற்கு மத்திய அமைச்சர்களும், பல்வேறு கட்சியினரும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.
(மேல் தட்டுப் பெண்கள் விதி விலக்கோ! இதில்கூட வருணப் பார்வைதானா?)
குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி, ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, `குஜராத் மக்களிடையே ஊட் டச்சத்து பற்றாக்குறை அதிகமாக காணப் படுவது ஏன்?' என்று நிருபர் கேட்டார்.
அதற்கு மோடி கூறியதாவது:-
குஜராத் மாநிலம் நடுத்தர வர்க்கம் நிறைந்த மாநிலம். நடுத்தர குடும்பத்தினர், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு தாய், பால் குடிக்குமாறு தன் மகளிடம் சொன்னால், அங்கு சண்டைதான் வரும். `பால் வேண்டாம். அதை குடித்தால் நான் குண்டாகி விடுவேன்' என்று மகள் மறுத்து விடுவாள். அது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
- இவ்வாறு மோடி கூறினார்.
அம்பிகாசோனி கண்டனம்
மோடியின் இக்கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:-
உலகிலேயே சிறந்த நிர்வாகி என தன்னை கூறிக் கொள்ளும் மோடி, இத்தகைய குழந்தைத் தனமான கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வரும் வேளையில், அவர் இதுபோன்ற மென்மை யான பிரச்சினைகளில் `பிசி'யாக இருக்கிறார்.
பெண்கள், தங்கள் குடும்பத்துக்காக சாப்பாட்டை துறந்து உழைத்து வருவது அவருக்கு தெரியாது போலும். அதனால்தான், அழகுக்காக பெண்கள் சாப்பிடாமல் இருப் பதாக கூறுகிறார். அவர் மீண்டும் முதல் அமைச்சராக போட்டி யிடவே தகுதி இல்லை.
- இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
கிருஷ்ணா திரத்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறிய தாவது:-
மோடியின் கருத்து தவறானது. அழகில் அக்கறை செலுத்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. அதற்கு மாறாக யாராவது நினைத்தால், அவருக்கு அறிவு இல்லை என்றே அர்த்தம்.
- இவ்வாறு அவர் கூறினார்.
லாலுபிரசாத் யாதவ் கண்டனம்
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறிய தாவது:-
பாசிச சக்திகள் இப்படித்தான் பேசும். பா.ஜனதா ஆளும் பீகாரில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. குஜராத் கலவர வழக்கில் மோடியின் அமைச் சர் சிக்கி உள்ளதால், மோடி பதவி விலகி மன்னிப்பு கேட்க வேண் டும்.
- இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. கிரிஜா வியாஸ் கூறுகையில், `ஊட்டச் சத்து பற்றாக்குறையை மறைக்க முயற்சிப்பதுடன், பெண்களை கேலி செய்திருக்கிறார், மோடி. பெண்கள், அழகில் அக்கறை செலுத்தினால் என்ன தவறு?' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், `சுகாதார துறையில் ஏற் பட்ட தவறை மறைக்க மோடி இப்படி பேசி இருக்கிறார். இது ஒரு முதல் அமைச்சருக்கு அழகல்ல' என்றார்.
இந்த குற்றச்சாட் டுகள் குறித்து பா.ஜனதா செய் தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு `மோடி போபியா' பீடித்து இருக்கிறது. அதனால்தான், மோடியின் பெயரை கேட்டாலே விமர்சிக் கிறது. அரசியல் சம்பந்தப் படாத விஷயங்களுக்கு கூட மோடியை விமர்சிக்கும் அள வுக்கு மோடியை நினைத்து பயப்படுகிறது.
- இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...