Saturday, August 18, 2012

வடமாநிலத்தவர்களை விரட்ட நினைப்பது எவ்வகையிலும் நியாயமில்லை; வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று


மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

தவறாகப் பரப்பப்படும் வதந்திகளால்  கருநாடக, மராட்டியம், பிகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து வட மாநிலத்தவர்கள் தன் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இவ்வதந்திகளைப் பரப்பியது ஒரு மதவாத அமைப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டறிவும், தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கடும் நடவடிக்கை

தென் மாநிலங்களான கருநாடகம், தமிழ்நாடு போன்ற வட மாநிலங்களிலிருந்து (குறிப்பாக, பீகார், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும்) வந்து மாணவர்களாவும், பணியாளர்களாகவும் பணிபுரியும் அந்த மக்களை கருநாடகாவில் அச்சுறுத்தலை - கைத்தொலைப்பேசி மற்றும் வதந்திகள்மூலம் பரப்பிட்டதன் விளைவாக, அப்படி வந்த பலரும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கில் பெங்களூருவிலிருந்து தனி ரயில்களில் புறப்பட்டுச் செல்வது குறித்து மத்திய அரசும், பிரதமரும், நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், உள்துறை அமைச்சர் ஆகியோர் நேற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

தமிழ்நாட்டில் அப்படி எந்த வதந்தியும் பரவியதாகத் தெரியவில்லை. தமிழக முதல்வரும் யாரும் அச்சப்படத் தேவையில்லை; அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

வந்தவர்கள் ஒன்று கல்வி பெறுவதற்காக; மற்றொன்று பணியாற்றுவதற்காக (பெரும்பாலும் கட்டுமானப் பணி போன்ற பணிகளுக்காக) வந்தவர்கள்.

அவர்கள் சுரண்ட வந்தவர்கள் அல்ல; அவர்கள் செய்யும் பணிகளுக்கு நம் நாட்டில் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற நிலையிலேயே அவர்கள் பணி தேவைப்படுவதாகும்.

நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே!


கலாச்சார ரீதியாகவே அவர்கள் பூர்வீக திராவிடர் இனத்தவர்களே; நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவரது அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றில் (Who are untouchables, whe they are untouchable) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களை விரட்டவோ முனைவது எவ்வகையிலும் நியாயமல்ல; வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மதவாத கட்சி ஒன்றினால்தான்...

கருநாடகத்தில் தான் இப்படி வதந்தி கிளப்பிவிடப்பட்டது. இதற்கு மூலகாரணமான குற்றவாளிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்டறிந்து தண்டிக்கவும், உடனே நடவடிக்கை எடுக்கவும் தவறக்கூடாது;  மதவாத கட்சி ஒன்றுதான் இந்த திருப்பணி செய்த அமைப்பு என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசின் உளவுத்துறை கண்டறிந்து, தெளிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவேண்டும்.

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்


மனிதநேய அடிப்படையிலும் நாம் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது அவசர, அவசியமாகும். மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது; இதனை முளையிலே கிள்ளி எறிய அரசுகள் முன்வரவேண்டியது முக்கியமாகும்.

கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...