சின்னமனூர், ஆக.16- குச்சனூர் கருப்பண்ணசாமிக்கு 4 ஆயிரம் மது பாட்டில்களை பக்தர்கள் படைய லிட்டு நேர்த்தி கடன் செலுத்தினார் களாம். மேலும் 13 ஆடுகள், 10 சேவல் களை பலியிட்டு விடிய, விடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட தாம்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோயிலில் தனி சன்னதியாக சோனைக் கருப்பண்ணசாமி கோயில் இருக்கிறது.
ஆடி நான்காவது வாரம் சனிக் கிழமை முடிந்து இரண்டாவது நாளில் சோணை கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்து திரு விழா நடத்தப்பட்டது. கருப் பண்ண சாமிக்கு நேர்த்திகடனாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மது பாட் டில்களை காணிக்கையாக செலுத் தினார்களாம்.
பக்தர்கள் வழங்கிய குவார்ட்டர், ஆப், புல் என சுமார் 4 ஆயிரம் பாட்டில்கள் சுவாமிக்கு படையலிடப் பட்டனவாம். பூசாரி ஜெயபாலமுத்து வாயில் துணியை கட்டிக்கொண்டு பூஜைகள் செய்தாராம். பின்னர் கதவினை பூட்டிக்கொண்டு சுவா மிக்கு பின்புறம் உள்ள துவாரத்தின் வழியாக மதுவை ஊற்றினாராம். அந்த மதுவை சுவாமி துவாரம் வழியாக ஏற்றுக்கொள்வாராம்.
அப்போது வெளியில் நின்றவாறே பக்தர்கள் பிரார்த்தனை செய்தார் களாம். இவ்விழாவையொட்டி 13 ஆடுகள், 10 சேவல்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டனவாம். இதைய டுத்து 2 ஆயிரம் பேருக்கு கறிச் சோறு வழங்கப்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா, இரவு ஒரு மணிக்கு முடிந் ததாம். விழா ஏற் பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் செய்திருந்தார்.
நேர்த்தி கடனாக வழங்கிய மது பாட்டில்கள் கருவறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- 90 சதவிகிதம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது
- சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் உள்ள வர்த்தக
- 35 ஏக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் கண்டுபிடிப்பு
- புலிகள் சரணாலயங்கள் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பு
- 5 ஆண்டுக்கு ஒரு முறை எல்.அய்.சி கட்டடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் அய்.அய்.டி நிபுணர்கள் ஆலோசனை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- 6 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
- நெல்லை -- -தென்காசி இடையிலான அகல ரயில்பாதையில் புதிய ரயில் இயக்கப்பட உள்ளது
- சென்னை கிண்டி அண்ணாபல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு
- ஜப்பானிய மூளைக்காய்ச்சலை பரப்பும் கொசுவில் வைரஸை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி
- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்டுள்ள
No comments:
Post a Comment