இலங்கையின் இன்னொரு பக்கம்
இந்தத் தலைப்பை விடுதலை கொடுக்கவில்லை. தீக்கதிர் ஏட்டில் (19.7.2012) தோழர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி. கொடுத்த தலைப்பு.
அந்தக் கட்டுரையில் என்ன கூற விரும்புகிறார்? டெசோ மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியும் இதைத் தானே கூறி வருகிறது. இதற்காக தி.மு.க. உள்ளிட்ட தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று கூறிய கட்சிகள் வசைமாரி பொழிந்துள்ளன என்று ஆதங்கப்படுகிறார் தோழர் டி.கே. ரெங்கராஜன்.
சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்பார்கள். அதனைத் தான் இவர்களும் செய்கிறார்கள்.
டெசோ சார்பில் நடக்க இருக்கும் மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெற வில்லையே தவிர, தனியீழம் தேவையில்லை என்று என்றைக்கும் சொல்லவில்லை. மாநாட்டின் கருத்துருவை செய்தியாளர்களிடம் வெளியிட்ட நேரத்தில்கூட டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தனி யீழம் தான் எங்கள் நிலைப்பாடு என்பதைத் தெரிவிக்கவும் தவற வில்லை.
உண்மை இவ்வாறு இருக்க, சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டை டெசோ ஏற்றுக் கொண்டு விட்டது என்ற தன்மையில் கட்டுரை எழுது வது நல்லதோர் நகைச்சுவையே!
உண்மை இவ்வாறு இருக்க, சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டை டெசோ ஏற்றுக் கொண்டு விட்டது என்ற தன்மையில் கட்டுரை எழுது வது நல்லதோர் நகைச்சுவையே!
தனியீழம் தேவை என்பதைத் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய தி.க. தி.மு.க. போன்ற அமைப்புகள் எதனையும் திணிக்கவில்லை.
இந்த முடிவை எடுத்தவர்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள்தான் என்பதை தீக்கதிர் ஏனோ மறந்தது அல்லது மறைக்கிறது?
சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்று இலங்கையில் 1956இல் சட்டம் இயற்றப்பட்டபோது அதனை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் வெறும் உண்ணாவிர தம் தான் நடத்தப்பட்டது. அத னையே அனுமதிக்கவில்லை சிங் கள இனவெறியர்கள். உண்ணா விரதம் இருந்தவர்களை அடித்துத் துவைக்கவில்லையா? பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் பலரையும் தூக்கி எறியவில்லையா?
சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்று இலங்கையில் 1956இல் சட்டம் இயற்றப்பட்டபோது அதனை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் வெறும் உண்ணாவிர தம் தான் நடத்தப்பட்டது. அத னையே அனுமதிக்கவில்லை சிங் கள இனவெறியர்கள். உண்ணா விரதம் இருந்தவர்களை அடித்துத் துவைக்கவில்லையா? பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் பலரையும் தூக்கி எறியவில்லையா?
எல்லா வகையிலும் அறப்போர், ஜனநாயக வழியாக சட்டமன்ற பிரவேசம் எல்லாவற்றையும் நடத்திப் பார்த்துவிட்டுத் தான் - இனி ஒன்றி வாழ்வது என்கிற பேச்சுக்கே இட மில்லை என்று அனைத்து அமைப் புகளும் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஒன்றுகூடி தனியீழம்தான் ஒரே வழி என்று தீர்மானம் செய்தனர்.
இந்த வரலாற்றை எல்லாம் நுணுக்கமாக கருத்தில் கொள்ளா மல், ஏதோ தி.க. - தி.மு.க. மற்றும் சில தமிழ் அமைப்புகள்தான் தனி யீழம் கோருகின்றன என்று சொல் லுவது நேர்மையான கருத்தாகாது. இன்னொன்றையும் புதிதாகக் கண்டுபிடித்து கூறியுள்ளார் தோழர் டி.கே.ஆர். இனப் பிரச்சினையையும் கடந்து இலங்கையில் வருக்கப் போராட்ட மும் நடந்து கொண்டுள்ளதாம். அப்படியா சேதி? ஈழத் தமிழர்களும், சிங்களவர்களும் வருக்கப் பார்வை யோடு ஒன்றிணைந்து எந்தெந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்? பட்டியல் போட்டுக் காட்டுமா சி.பி.எம்? இலங்கையில் நடப்பது இனப் பிரச்சினையா? வர்க்கப் பிரச் சனையா? வறட்டுப் பிடிவாதத் தோடு எழுதுகோல் பிடித்தால் இப்படிப்பட்ட தடுமாற்றம்தான் ஏற்படும்.
இலங்கையில் உள்ள கம்யூனிஸ் டுக் கட்சிகூட அதனைச் சுட்டிக் காட்டியதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மார்க் ஸியம் பேசும் இலங்கை ஜெ.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுனா) என்ற அமைப்புதான் சிங்கள இனவாதத் தின் முழு வடிவம் கொண்டதாகும்.
இந்த ஜெ.வி.பி. பற்றி இலங்கை யின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்து ஏட்டுக்கு (9.11.2005) அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
ஜனதா விமுக்தி பெரமுனா (ஜெவிபி) ஜாதிகா ஹெவர் உருமயா மற்றும் சிங்கள உருமயா ஆகிய கட்சிகளுடன் ராஜபக்சே கூட்டணி வைத்திருப்பது - அடால்ஃப் ஹிட்லருடன் கூட்டு வைப்பதற்குச் சமம் என்று கூறினாரே! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும் என்று சரத்து இடம் பெற்றிருந்ததல்லவா - அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்து தங்களுக் குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றது - இதே மார்க்ஸிஸ்டு கட்சியான ஜெ.வி.பி.தான்.
இந்தக் கட்சியின் பிரதிநிதி களைத்தான் இந்தியாவில் மார்க் ஸிஸ்டு கம்யூனிஸ்டு நடத்தும் மாநாடுகளுக்குச் சிறப்பு விருந்தி னர்களாக அழைத்து, பொன்னா டையும் போர்த்துகின்றது.
ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசு மிகப் பெரிய இனப்படு கொலையை நடத்தியதற்குப் பிறகும், முதலாளித்துவ நாடுகள் கூடக் கண்ணீர் சிந்தும் நிலையில், பொதுவுடைமை பேசும் நாடுகள், தேசிய இனவுரிமை பற்றிப் பேச வேண்டியவர்கள் இலங்கை இன வாத அரசின் பக்கம் நிற்பது பரிதா பத்துக்குரிய சறுக்கலே! இந்தி யாவில் உள்ள ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி கல்லானாலும் கணவன் புல் லானாலும் புருசன் எனும் போக்கில் பழம் பத்தாம் பசலித்தனமாக, இணைந்து வாழுங்கள் என்று இதோபதேசம் செய்வதும் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தலைக் குனிவாகும்.
டெசோ சார்பில் நடத்தப்படும் மாநாடு உடனடியான பிரச்சினை களுக்குத் தீர்வு காணப்பட அழுத் தங்களை கொடுக்கக் கூடியது தான்! அதே நேரத்தில் தனியீழம் என்பது டெசோவிலே இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்!
- கலி. பூங்குன்றன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- நான்கு செய்திகள் மீதான விவாதங்கள்!
- இன்னும் எத்தனை நாள்?
- மூன்று பிரச்சினைகள் மீதானவிவாதங்கள்
- வெட்டிப்பேச்சு வீரர்கள்!
- உதவாதினி ஒரு தாமதம்
அடுத்து >>
ஆகஸ்ட் 01-15
"விடுதலை" நமக்கு ஓர் போர்வாள்
அந்நாளில்...
அய்யா - ஆசிரியர் உறவு
இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்
இணையத்தில் விடுதலையின் போராட்டம்
கடவுள் கடத்தல் கலை
கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!
கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்
கவிதை - ஆசிரியரின் முகம் "விடுதலை"
சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் 'விடுதலை"
சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!
தன்னிகரற்ற பன்முக ஆற்றல்
திரிபுவாதிகளுக்கு பதிலடி
தோழர் வீரமணியின் சேவை!
நாளேட்டின் நாயகர்
நிகழ்ந்தவை
நினைவில் நிற்பவை
பெரியார் ஒப்படைத்த பெரும்பணி
முகநூல் பேசுகிறது
வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்
வரவேற்கிறேன் - தந்தை பெரியார்
விடுதலை "லை"
விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!
விடுதலை வாசித்தால் திருப்தி
No comments:
Post a Comment