Tuesday, August 21, 2012

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்


செய்யாறு
இர. செங்கல்வராயன்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எங்ஙனம் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்து மதக் கொடுமைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்து ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வந்தாரோ அதைப் போலவே அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்துவ மதத்தின் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நாற்பது ஆண்டு காலம் தீவிர எதிர்ப்புக்கிடையே பிரச்சாரம் செய்து வந்தார்.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் எங்ஙனம் மூடநம்பிக்கையாளர்களிடம்  தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியி ருந்ததோ, சிறந்த சொற்பொழிவாள ராக இங்கர்சால் அமெரிக்காவில் கிறித்தவ மதவெறியர்களிடம் இருந்து தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி இருந்தது. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால், உன் தலை அட் லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.
மதததை நீ கண்டித்துப் பேசினால் உன் வீட்டிற்குத் தீ வைத்து உன் னையும் உன் குடும்பத்தையும் சாம்பலாக்கி விடுவோம்.
கிறித்துவ மதவெறியர்களின் எதிர்ப்பைத் துச்சமாக மதித்து அமெரிக்காவில் சிறிய பெரிய நகரங்களில், பட்டி தொட்டிகளில் அவரது பகுத்தறிவுப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடந்தது.
ஜான் இங்கர்சால் என்ற பாதிரி யாருக்கும் மேரி லிவிங்ஸ்டன் என்ற அம்மையாருக்கும் 1833 ஆகஸ்ட் 11 ஆம் நாள் நியூயார்க்  மாநகரத்தில் திரிஸ்டன் என்ற ஊரில் ராபர்ட் கிரீன் இங்கர்சால் பிறந்தார்.
தந்தையாரின் வேத நூலான பைபள் மகனின் பாடபுத்தகமாக சிறு வயதில் விளங்கியது! ஆனால் மத நூல்களைப் படித்ததனால் இளமை யிலேயே இங்கர்சால் பிஞ்சு உள்ளத் தில் கிறித்தவ மதக் கொள்கைகளில் அவநம்பிக்கை ஏற்படத் தொடங் கியது!
தந்தை பெரியாரின் ஈரோட்டு இல்லத்தில் வைணவ மத பிரச் சாரகர்கள் பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். பெரியார் சிறு பையனாக இருந்தபோதே இந்து மதப் புராணக் கதைகளைப் பற்றி கேள்விகள் எழுப்பத் தொடங்கினார் இங்கர்சாலைப் போல. இங்கர்சால் மத நம்பிக்கை அற்ற முறையில் பேசி வருவதைக் கேட்டு அவர் தந்தையார் ஜான் கவலை அடைந்தார்.
மகனை அறியாமை இருள் கவ்விக் கொண்டிருப்பதாக எண்ணி இருந்த ஜான் நாளடைவில் இங்கர் சாலின் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க தான்தான் மூட நம்பிக்கை எனும் இருளில் தத் தளிப்பதாக உணரத் தொடங்கினார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஜான் ஒருபுது மனிதராகத் தன் மகனால் மாற்றப் பட்டுவிட்டார்!
இங்கர்சால் தன் இளமைக் காலத்தில் இலினாய்ஸ் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற ஊரிலும் பின்னர் மெட்ரோபோலிஸ் என்ற ஊரிலும் ஆசிரியராக வேலை பார்த் தார். அவர் தங்கியிருந்த வீட்டில் சில மத  போதகர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் மத போதகர்கள் ஞானஸ்நானம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
ஞான ஸ்நானத்தை விட சோப்புக் குளியல் நல்லதென்பதே என் கருத்து என்று இங்கர்சால் கூறினார்.
மதவெறியர்கள் இங்கர்சாலை ஒரு நாத்திகர் என்று ஊர் முழுதும் பிரச்சாரம் செய்தனர். பாடசாலை அதிகாரிகள் இங்கர்சாலை உடனே ஆசிரியர் வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப் பட்டதும் இங்கர்சால் சட்டப்படிப்பு படித்து வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞர் ஆன சில ஆண்டு களிலேயே தன் அறிவாற்றலாலும், உழைப்பாலும் இலினாய்ஸ் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) நியமிக்கப் பட்டார். 1878 இல் அவர் தன் குடும் பத்தை தலைநகர் வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார். வாஷிங்டனில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு 1885 இல் தன் குடும்பத்தை நியூயார்க்குக்கு மாற்றிவிட்டார்.
1864 ஆம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கனின் குடியரசுக் கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநில ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சியில் இருந்த மத வெறியர்கள் இங்கர்சால் ஒரு தீவிர நாத்திகர்; அவருக்கு வாக்களிக்காதீர் என்று மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்து அவரைத் தேர்தலில் தோற் கடித்தனர். பிறகு அவர் அரசியலில் இருந்து விலகி தன் கடைசி முப்பது ஆண்டுகளில் பகுத்தறிவுப் பிரச் சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
கிரேக்க மொழிக்கு சாக்ரடீஸ் என்ன செய்தாரோ, தமிழ் மொழிக்கு பெரியார் என்ன செய்தாரோ, அதையே ஆங்கிலத்திற்கு இங்கர்சால் செய்தார். பெரியார் எப்படி தான் மறைவு எய்திய 24-12-1973 வரை ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாரோ (தியாகராயநகரில் 19-12-1973 அன்று இறுதிப் பேருரை ஆற்றினார்.) அதைப் போலவே இங்கர்சால் தான் இயற்கை எய்திய 1899 ஜூலை 20 வரை சுமார் நாற்பது ஆண்டு காலம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.
இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.
  • மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
  • உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
  • உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
  • உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
  • உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
  • சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
  • அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
  • மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
  • சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
  • கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.
  • குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
  • மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
  • இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
பகுத்தறிவாளர்களாகிய நாம் தந்தை பெரியார், அறிஞர் இங்கர்சால் ஆகியோரின் பொன்மொழிகளை உள்ளத்தில் பதிய வைத்து வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோமாக!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...