Thursday, August 9, 2012

சீயோன் பள்ளிகளை இழுத்து மூட வேண்டுமா?


தாம்பரம் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீயோன் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பள்ளி நிருவாகத்தில் உள்ள பேருந்து ஒன்றில் ஓட்டை வழியாகச் சிறுமி விழுந்து மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. அந்த நிகழ்வுக்கும் பிறகு பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டன. பள்ளிகளும் சில நாட்கள் மூடப்பட்டன. 5000 மாணவ - மாணவிகளுக்கு மேல் கல்வி பயிலும் சீயோன் கல்வி நிறுவனங்களை நிரந்தரமாக மூடவேண் டும் என்று இந்து முன்னணி சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டு வெளியீடுகள் மூலமாகவும் பிரச்சாரம் செய்வது ஏன்? இதன் பின்னணி என்ன? சட்டப்படியான நடவடிக் கைகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்படட்டும்! அதற்காக பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லுவது ஏன்? இதில் இந்து முன்னணி ஆர்வம் காட்டுவது ஏன்? கல்விக் கண் களைக் குத்தும் மனுதர்மப் பாதையா?
கும்பகோணத்தில் சிறீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சின்னஞ்சிறு மலர்கள் கருகினவே - அதற்குப் பின் அப்பள்ளி இழுத்து மூடப்பட்டதா?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...