நமது ஜனநாயகம் என்பது சாணிக் குவியலின் மீது கட்டப்பட்ட அரண் மனையாக மாறாமல் இருக்க, சமூக, பொருளா தார, அரசியல் ரீதியாகப் பின்தள்ளப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க இட ஒதுக்கீடு அவசியம்.
இதற்காக சட்டங்களுக் கும், விதிகளுக்கும் புதிய விளக்கங்களை அளித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களுக்கக் கிடைக்காமல் தடுக்கும் எதிர்ப் புரட்சிப்போக்கு காணப்படுகிறது. இது மக ளிர், தலித்துகள், இதர நலி வுள்ள பகுதியினர் ஆகியோ ரின் நலன்களுக்கு எதிரானது. சமூகத்தில் ஏற்படக்கூடிய பதற்றங்களைப் பயன் படுத்தி ரத்த ருசி பார்க்க, வன்முறை தன் நாக்கைத் தொங்கவிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறியிருப்பவர் அசாதாரணமானவர் - இந்தி யாவின் முதல் குடிமகன் - முப்படைக்குத் தலைவராக இயங்கக் கூடிய இந்தியாவின் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்தான்.
அதுவும் எங்குப் பேசினார்? எப்பொழுது பேசினார்? என்பதுதான் மிக முக்கியம்.
குடியரசுப் பொன்விழாப் (26.1.2000) பேருரையில் காத் திருந்து கூறியது போல் சமூக நீதிக் கல்வெட்டாகச் செதுக் கினார்.
அதிகம் பேசாதவர் - சிக்கல் வழுக்கு நிலத்தில் காலூன் றாதவர் - ஒரு சரியான நிகழ்வை மனதில் தேக்கி வைத்து சொல்லவேண்டிய நிகழ்ச்சியில் நச் என்று நவின் றிருக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கு முத லிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த ஆரியர் இந்தச் சமூக நீதிக்குச் சவுண்டித் தனமான வியாக்கியானங் களைக் கூறி, அரசமைப்புச் சட்டத்தின் ஆணிவேரையே அசைத்து வந்திருக்கின்றனர்.
திரு. கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு முன் அதே குடி யரசுத் தலைவர் மாளிகையில் வாசம் செய்த சங்கர்தயாள் சர்மா என்ன கூறினார்?
பிராமணர்களிடமிருந்து இடங்களை நீங்கள் எடுத்துச் செல்லலாமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பச்சையாகப் பார்ப்பனத் தனத்தின் திமிர் குறித்துச் சொல்லவில்லையா!
இப்பொழுது கூட பிற்படுத் தப்பட்டவர்களுக்கான கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை (சட்டம் அனு மதித்தும்) அளிப்பதில் எந்த வகையில் காலதாமதம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்பதைத் தேடிப் பிடித்து அந்த வேலை யைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு ஒன் பது சதவிகிதமாக மூன்றாண்டு களில் நிறைவு செய்யப்படும் என்று சொல்ல வில்லையா? அதனை இப்பொழுது ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கவில் லையா?
கல்வியைப் பொதுப் பட்டி யலுக்குக் கொண்டு சென்றதன் நோக்கமே இட ஒதுக்கீட்டைக் கொத்திக் குதறுவதற்கே!
குறிப்பு: முதல் தாழ்த்தப்பட்ட குடிமகனாக இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் அவர்கள் வெற்றி பெற்ற நாள் இப் பொன்னாள் (1997). - மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment