Wednesday, July 11, 2012

மோடி ஆட்சியில் பெஸ்ட் பேக்கரியில் சிறுபான்மையினர் கொல்லப்பட்ட வழக்கு!


கொலைகாரர்கள் நால்வருக்கு ஆயுள் தண்டனை! மும்பை, ஜூலை 10-குஜராத் தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பெஸ்ட் பேக்கரியை தீக்கிரை யாக்கி 14 பேரை கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ராம பக்தர்கள் வந்த ரயில் தீக்கிரையாக்கப்பட்டதில் 59 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் பயங்கர கலவரம் ஏற்பட்டது.
வடோதரா நகரில் உள்ள பெஸ்ட் பேக்கரியை மார்ச் ஒன் றாம் தேதி வன்முறைக் கும்பல் சூறையாடி தீவைத்தது.
இதில், பேக்கரியின் உரிமையா ளர் ஷேக் மற்றும் அவரது குடும் பத்தினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், 17 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2006இல் 9 பேருக்கு ஆயுள் தண் டனை விதித்தது. இதை எதிர்த்து 9 பேரும் மும்பை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் தனர். இந்த வழக்கை நீதிபதிகள் கண்ணடே, பி.டி.கோடே ஆகி யோர் விசாரித்து கடந்த 3ஆம் தேதி தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில், சஞ்சய் தாக்கர், பகதூர் சிங் சவுகான், சனாபாய் பாரியா, தினேஷ் ராஜ் பார் ஆகிய 4 பேருக்கு விதிக்கப் பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். அதே நேரத்தில், மீதமுள்ள 5 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க சாட்சி கள் யாரும் இல்லாததால் அவர் களை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ஜஹீராவின் தந்தை காலஞ் சென்ற ஹபிபுல்லா கானுக்குச் சொந்தமான ஹனுமான் தேகரி பகுதியில் இருந்த பெஸ்ட் பேக்கரி பகுதியில் வசித்து வந்த ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்தினை தாக்கும் நோக்கத்துடன் வந்த 1500க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கலவர கும்பல் பேக்கரிக்கு தீ வைத்தது. இரவெல்லாம் எரிந்த இத்தீயில் பலர் கருகி மடிந்தனர். உயிர் பிழைத்தவர்களும் மாடியில் இருந்து கீழே வரச் செய்யப்பட்டு தடிகளாலும், கத்திகளாலும் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலி லும் உயிர் பிழைத்த டாஃபில் சித்திக், ரயீஸ் கான், ஷெகாட் கான் பதான்,  ஷாலியுன் பதான் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்தக் கலவர நிகழ்ச் சியைப் பற்றி மிகத் தெளிவாக சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கத்திகள், சோடா பாட்டில்கள், கெரோசின் பாட்டில்களை எடுத்து வந்து தாக்கியதைக் கண்ணால் கண்ட இந்த சாட்சிகள் அளித்த சாட் சியமே அவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்தது. அவர்கள் உட லில் இருந்த காயத் தழும்பு அடை யாளங்களே அவர்கள் பட்ட துன்பங்களுக்கு சாட்சியாக விளங்கின.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...