Friday, July 13, 2012

உக்ரைனைப் பாரீர்!


ருசியாவின் கூட்டமைப்பில் இருந்த உக்ரைன் 1990-இல் பிரிந்து சென்றது.
உக்ரைன் 27 மாநிலங்களைக் கொண்ட தாகும். 13 மாநிலங்களில் ருசிய மொழி பேசும் மக்கள் 30  விழுக்காடு உள்ளனர். பெரும் பான்மையான மக்களின் தாய்மொழியோ உக்ரைன்.
நீண்ட காலம் ருசியாவின் கூட்டமைப்பில் உக்ரைன் இருந்ததால் ருசிய மொழியின் ஆதிக்கமும், தாக்கமும் இருக்கவே செய்தது.
இந்த நிலையில் உக்ரைன் மொழியோடு ருசிய மொழியையும் அலுவலக மொழியாக ஆக்க வேண்டும் என்ற மசோதாவை அதிபர் விக்டர் யானுகோவிக் தாக்கல் செய்தார்.
450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் 248 பேர் ஆதரவாக வாக்களித்த தன் காரணமாக சட்டம் நிறைவேற்றப் பட்டதுதான் தாமதம் - உக்ரைன் மக்கள் எரிமலையாக வெடித்துக் கிளம்பிவிட்டனர்.
இந்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன் பதவியையும் தூக்கி எறிந்தார் - போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துகிறார்.
அதிபரோ நாடாளுமன்றத்தையே கலைத்து விடப் போவதாக எச்சரித்துள்ளார்.
இவ்வளவுக்கும், ருசிய மொழி மட்டுமே அலுவலக மொழி என்று கூட சட்டம் செய்ய வில்லை - உக்ரைன் மொழியோடு ருசிய மொழியும் அலுவலக மொழியாக இருக்கும் என்பதற்கே கடும் எதிர்ப்பு! உக்ரைன் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது ருசிய மொழிக்காரர்களின் கடமையாகும்.
துணைக் கண்டமாகிய இந்தியா இதில் பாடம் பெறவேண்டும். இந்தியா ஒரு நாடு அல்ல. ஒரே மொழி கொண்ட நாடும் அல்ல.
பல மொழிகள், பல மாநிலங்கள், பல இனங்கள், பல கலாச்சாரங்களைக் கொண்ட துணைக் கண்டமாகும்.
மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் தி.க., தி.மு.க., அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் தீர்மானங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் உள்ளன.
இது குறித்து ஆய்வு செய்ய சீதா காந்த மகாபத்திரா தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அந்தக் குழுவும் சாதகமான வகையில் கருத்தினைக் கொடுத்துள்ளதாகவே தெரி கிறது. ஆனாலும் அந்தக் குழுவின் அறிக்கை அதிகார பூர்வமாக வெளியிடப்படாதது ஏன்?
மத அடிப்படையில் மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும்  ஒன்று என்றாலும், மொழி அடிப்படையில் மாறுபட்ட காரணத்தால் பிரிந்து சென்று விடவில்லையா?
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சூடானில் என்ன நடந்தது?
பிரிட்டனின் பிடியிலிருந்து விலகிய பிறகும், அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த அரேபி யர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்தி, உங்களின் உறவே வேண்டாம் என்று கூறி தெற்குச் சூடான் எனும் தனி நாட்டினை உருவாக்கிக் கொண்டனர் என்பதுதான் வரலாறு.
இதே கண்ணோட்டத்தோடு இலங்கைத் தீவையும் பார்க்க வேண்டாமா? அங்கு நிலைமை என்ன? சிங்களம்தானே ஆட்சி மொழி? சிங்கள இனத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர்தானே அதிபராக வரமுடியும் சட்ட ரீதியாக!
தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நீதியா? உலகம் சிந்திக்கட்டும் - தனித் தமிழர் ஈழக்கொடியைப் பறக்கவிட ஆவன செய்யட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...