காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு
புதுடெல்லி, ஜூலை 22-தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்காக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டில் காவிரி நதி நீர் ஆணையம், வறட்சி காலத்தில் எந்த அளவின் அடிப் படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற வரன் முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளை கர்நாடக அரசு முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை.
இதே நிலைதான் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசன விவசாயப் பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின் படி கடந்த ஜூன் மாதம் தமிழகத் துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் விவசாயி கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின் அடிப் படையில் தமிழகத்துக்கு தண் ணீரைத் திறந்துவிடுமாறு கர் நாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உட னடியாக கூட்டுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தலைக் காவிரியிலி ருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணை களைக் கட்டி தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைப்படுகிறது. அந்த தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு தேக்கப்படாமலிருந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே, கர்நாடக அரசு தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கிவைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மம்தா பானர்ஜி விலகினால் கவலை இல்லை: காங்கிரஸ் பதிலடி
- ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு
- லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்
- மருத்துவ கல்லூரிக்கு சட்ட விரோத அனுமதி: டெல்லி சி.பி.அய். நீதிமன்றம் உத்தரவு
- பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிந்தது
No comments:
Post a Comment