Wednesday, July 18, 2012

தமிழக மீனவர்கள் மீது அமெரிக்கக் கடற்படை துப்பாக்கிச் சூடு


மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை
சென்னை, ஜூலை 18- தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கைக் கடற் படை தாக்குதலுக்குப் பயந்து, துபாய்க்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர், துபாய் கடல் பகுதியில் நேற்றைய தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது-அந்த வழியாக ரோந்து சென்ற அமெரிக்கக் கடற்படை வீரர்கள் இவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். அதில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் பலியாகியுள்ளார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இந்திய அரசு, அமெரிக்கக் கடற்படையின் செயலுக்கெதிராக தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அமெரிக்கக் கடற்படையின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சேகரின் குடும்பத்துக்கும், மற்றும் படுகாய மடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கும் அவற்றின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதி உதவி வழங்கிடவும்- அந்த நாட்டை வலியுறுத்தி இழப்பீடு பெற்றிடவும்- இந்திய அரசு ஆவன செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...