Tuesday, July 17, 2012

பி.ஜே.பி.யின் தந்திரம்


2014-இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற - குறிப்பாக 80 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் அதிகமான இடங்களைப் பெற்றிட பி.ஜே.பி. இப்பொழுதே தந்திர வலைகளைப் பின்ன ஆரம்பித்துவிட்டது.
முதற்கட்டமாக கட்சி அமைப்புகளில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி என்றாலே அது பார்ப்பன ஜனதா கட்சி என்பது பாமர மக்கள் உள்பட அறிந்த பச்சையான உண்மையாகும். பெரும்பான்மை மக்களின் எண்ணத்தில் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் சம் பாதித்துக் கொடுக்கும் யதார்த்தமான நிலையாகும்.
பெரும்பான்மை மக்களின் இந்தக் கண் ணோட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உ.பி.யில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ள யாதவர் களுக்கு 20 விழுக்காடு உள்ள முசுலிம்களுக்கு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்சி அமைப்பில் கணிசமான அளவுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்று தீர்மானித்துள்ளது.
முசுலிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்களைக் கணிசமாக ஈர்த்துவிட்டால் ஏற்கெனவே தம் பக்கம் உறுதியாக இருக்கும் 10 விழுக்காடு பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று, உத்தரப் பிரதேசத்தில் பழம் தின்னலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட முசுலிம் பெண்களின் மாநாடு ஒன்றை பி.ஜே.பி. முன்னின்று டில்லியில் கூட்டவில்லையா? (13-7-2008) அம்மாநாட்டில் எல்.கே. அத்வானி என்ன பேசினார்?
முசுலிம்களில் எத்தனை சதவிகிதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முசுலிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று பேசவில்லையா?
தேர்தல் அறிக்கையில் கூட ராமநவமி நாள் பார்த்து வெளியிடும் இந்தக் கூட்டம்தான் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கப் போகிறதாம்!
சிறுபான்மையினர் தங்கள் மதத்தையும், வணங்கும் கடவுள்களையும் கூட இந்திய மயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியவர்களின் சந்தர்ப்பவாத வலையில் சிறுபான்மையினர் விழ ஒன்றும் ஏமாளிகளல்ல.
ஒரு குஜராத் கலவரம் நடந்து முடிந்த பிறகு, அதுவும் அந்த நடப்புக்கு மூலகர்த்தாவாகிய நரேந்திர மோடியையே பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை பி.ஜே.பி. எடுக்கும் ஒரு கால கட்டத்தில், சிறுபான்மை மக்கள் சீறி எழமாட்டார்களா? இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பி.ஜே.பி.யை மண்ணுடனும், மண்ணடி வேருடனும் கெல்லி எறியமாட்டார்களா?
கல்யாண்சிங், உமாபாரதி போன்ற பிற்படுத்தப் பட்டோர்களைக் கறிவேப்பிலையாக பி.ஜே.பி. பயன்படுத்திக் கொண்டதை பிற்படுத்தப்பட்ட மக்கள் உணரமாட்டார்களா?
எந்தத் தைரியத்தில் சிறுபான்மை மக்களை, பிற்படுத்தப்பட்டோரை தாஜா செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
பார்ப்பனிய ஜனதா கட்சியல்லவா! அந்தப் பார்ப்பனத்தனம் அவர்களை விட்டு விலகி ஓடிவிடுமா? வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து, நெளிய வேண்டிய நேரத்தில் நெளிந்து, குனியவேண்டிய நேரத்தில் குனிந்து தேவைப் பட்டால் கால்களில் சரணடைந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் பரம்பரையாயிற்றே!
2014-இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல்தான் பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை கடைசித் தேர்தலாக இருக்கப் போகிறது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். வாழ்வா, சாவா என்ற நிலையில், எந்த எல்லைக்கும் சென்று எல்லாவித வேடங்களும் போடுவார்கள்! அவற்றில் மக்கள் ஏமாறாமல் பார்த்துக் கொள்வது மதச் சார்பற்ற சக்திகளின் முக்கிய கடமையாகும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>




JULY 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...