விண்வெளி ஆய்வு மய்யத்தில் நான்கு மாதம் தங்கி
ஆய்வுகள் செய்வார் சுனிதா வில்லியம்ஸ்
ஆய்வுகள் செய்வார் சுனிதா வில்லியம்ஸ்
வீழ்ச்சியுற்றது மத மூட நம்பிக்கைகள்!
வாஷிங்டன், ஜூலை 18- மத மூட நம்பிக்கைகள் வீழ்ச்சி அடையும் வண்ணம் விண்வெளி ஆய்வில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன
விண்வெளியில் நான்கு மாதங்கள் தங்கி ஆய்வு செய்வார் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்கா, ரஷ்யா உள்பட சில நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்துள்ளன. விண்வெளி வீடு என்றழைக்கப்படும் இந்த மய்யத் தில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் சுழற்சி முறையில் இருந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த ஆய்வு மய்யத்துக்கு இந் திய வம்சாவளி வீராங் கனை சுனிதா வில்லி யம்சை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் சுனிதா புறப்பட்டார். கஜகஸ்தான் நாட்டில் இருந்து சென்ற அவருடன் ஜப்பான் விஞ்ஞானி அகிகிகோ மற்றும் ரஷ்யா விஞ்ஞானி யூரி ஆகியோரும் சென்ற னர்.
2 நாள்கள் பயணத்துக்கு பிறகு அவர்களது விண்கலம் நேற்று காலை சர்வதேச விண்வெளி மய்யத்தை நெருங்கியது. இந்திய நேரப்படி நேற்று காலை 10.21 மணிக்கு சோயுஸ் விண்கலம் ஆய்வு மய்யத்தை சென் றடைந்தது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆய்வு மய்யத்துக்குள் சென்றனர். அந்த ஆய்வு மய்யத்தில் ஏற்கெனவே 32 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
அவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் இணைந்தனர். அவர்களை ஆய்வு மய்யத்தினர் வரவேற்றனர். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு சென்றிருப்பது இது 2 ஆவது முறையாகும். கடந்த முறை அவர் 6 மாதம் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அது இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. இந்த நிலையில் இந்த முறை 4 மாதம் தங்கியிருந்து சுனிதா ஆய்வுகள் செய்யவுள்ளார். இந்த காலக் கட்டத்தில் சுனிதா விண்ணில் நடந்து ஆய்வு செய்ய இருக்கிறார். விண்வெளி வீட்டில் இருந்தபடி லண்டன் ஒலிம்பிக் போட்டி களை கண்டுகளிக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கிருந்தபடி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கூடங்குளத்தில் மேலும் 2 பெரிய அணு உலைகள்: ரஷியாவுடன் புதிய ஒப்பந்தம்
- தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மய்யம் தகவல்
- துணை குடியரசு தலைவர் தேர்தல்: ஹமீத் அன்சாரி வேட்புமனு தாக்கல்
- வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா?: மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி
- மிக மன வேதனையுடன் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு : மம்தா பானர்ஜி அறிவிப்பு
No comments:
Post a Comment