Wednesday, July 18, 2012

இடஒதுக்கீடு: பஸ்வான் எச்சரிக்கை


பாட்னா, ஜூலை 16- லோக் ஜனசக்தியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை வலியுறுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தொழிலாளர் நலசங்கம் காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய் திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நிதிஷ் குமார் அரசு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழ்மை நிலையில் உள்ளோர் ஆகியோருக்கு எதிரான அரசு எனவும் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த இந்த கொள்கையை தேசிய ஜனநாயக கூட்டணி அழித் தொழித்தது, இதனை உடனடியாக அரசு நடைமுறைப் படுத்தாவிட்டால் லோக் ஜனசக்தி ஆகஸ்டு 9 அன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நிகழ்த்தும் எனவும் அவர் கூறினார். இது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிடம் தான் விளக்கிக் கூறியதாகவும். நாடாளுமன்றத் திலும் இது குறித்து பேசப் போவதாகவும் அவர் தெரி வித்தார், பீகாரில் வாழும் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சிறப்புத் திட்டத்தையும், மலைவாழ் மக்களுக்கான துணைத் திட்டத்தையும் அதற்கான நிதி ஆதாரத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...