Wednesday, July 25, 2012

அமெரிக்க விசுவாசம் அன்று; தமிழர்களின் மீதான வெறுப்பே தினமணிக்கு!


தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற அமெரிக்காவுக்கு லாலி பாடும் தினமணியைக் கடுமையாகக் கண்டித்து, 'தினமணியின் அமெரிக்க விசுவாசம்' என்னும் தலைப்பில், இன்றைய தீக்கதிர் நாளேட்டில் (23/07/12) ஒரு சீறும் சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது;  தீக்கதிருக்குப் பாராட்டுகள்!
".....இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமே உணர்ச்சிவசப்படத் தேவையில்லை; துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மீது கூட தவறு இருக்கலாம்! யாருடைய தவறு என்பது உறுதிப்படாத நிலையிலேயே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை அறிவிக்கப் படுவது அரசுகளின் வழக்கமாகிவிட்டது! மீனவர்கள் மீதுதான் தவறு என்று  நாளை விசாரணையில் தெரிய வந்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியுமா?.........." இது தினமணியின் வெறும் ஆதங்கம் மட்டுமல்ல; ஆத்திரம்! தமிழர்கள் மீதான வெறுப்பு!
தீக்கதிர் நாளேடு ஒரு விஷயத்தை நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேட்டுள்ளது. 'அந்த மீனவர்களின் பெயர்கள் மட்டும் இஸ்லாமியப் பெயர்களாக இருந்திருந்தால்.... இந்நேரம் அவர்களை அல்-கொய்தாவுடன் முடிச்சுப் போட்டு, "பின்லேடனின் கூட்டாளிகள்..." என்று கதை கட்டியிருக்கும்; இங்குள்ள பத்திரிகைகளும் அதை பக்கம் பக்கமாக வாந்தி எடுத்திருக்கும்! அமெரிக்காவின் அட்டூழியத்தை நியாயப்படுத்தித் தலையங்கம் எழுதி, தமிழர்களிடமே விற்பனை செய்கிறது தினமணி! நம் விடுதலை நாளேடு என்றும் சொல்லிவருவதை, இன்று தீக்கதிரும் சொல்கிறது; நல்லதொரு மாற்றமே!
(தமிழர்களுக்கு எதிரான இதைப்போன்ற கொடுமையை இன்னும் பல மடங்கு செய்யும் 'தினமலர்', துக்ளக்' போன்ற பத்திரிகைகள்!) தீக்கதிர் சொல்லத் தவறிய இன்னொரு அம்சத்தை நாம்(தான்) இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தாயுள்ளது.
இறந்தவர்களின் முதுகில் பூணூல் மட்டும் தொங்கியிருந்திருக்குமேயானால், ஆர்.எஸ்.எஸ். வைத்தியநாத அய்யரின் தினமணி தலையங்கம் இந்த வகையிலா இருந்திருக்கும்?
அமெரிக்காவை சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அல்லவா நிறுத்தி யிருக்கும்?
செத்துப்போனது கிள்ளுக்கீரை' தமிழர்கள் தானே?
பார்ப்பனர்களுக்கு...
அதுவும் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பானுக்கு தமிழர்கள் என்றாலே வேப்பங்காய்தானே? அந்த வெறுப்பு உமிழும் பார்ப்பன பத்திரிகைகளான தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளைத்தானே நம் பாழாய்ப்போன தமிழர்களும் காசு கொடுத்து வாங்கிப் படித்து, தம் மூளையைத் துருப்பிடிக்கச் செய்துகொள்வதோடு, அந்தப் பார்ப்பன ஏடுகளையும் வாழ வைத்துக் கொண்டுள்ளனர்? 'செஸ்' ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆகியுள்ளார் திரு.விஸ்வநாதன் ஆனந்த்! ஏற்கெனவே கோடீஸ்வர பிரபுவான ஆனந்துக்கு, தமிழக மக்களின் வரிப் பணத்தில்... சும்மா அஞ்சு லட்சமோ...பத்து லட்சமோ அல்ல; சொளையாக இருநூறு லட்சம் ரூபாய்களை (2 கோடி ரூபாய்) வாரிக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.
நம் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டு களிலும், பன்மடங்கு திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம் தமிழர் குடும்பத்துப் பிள்ளைகள் தேசிய அளவில் - உலக அளவில் - ஒலிம்பிக்கில் பங்கேற்க வசதி வாய்ப்பின்றி, அரசின் உதவி கிடைத்திடாதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்துக்கு இவ்வளவு பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க வேண்டுமா? ஏழை வீரர்களுக்குக் கிள்ளிக் கிள்ளி கொடுத்து ஊக்குவித்திருந் தாலும், இன்று தமிழக வீரர்கள் தேசிய அள விலும், உலக அளவிலும், நடைபெறப்போகும் ஒலிம்பிக்கிலும் ஒளிவிடும் நட்சத்திரங்களாய்ப் பிரகாசிப்பார்களே என்று இந்தத் தினமணி, தினமலர், துக்ளக் பார்ப்பனக் கும்பல் எழுது கோலைச் சுழற்றியதா? இதே விஸ்வநாதன் ஆனந்த் ஒரு தமிழனாய் இருந்திருந்தால், இந்தத் தினமணிக் கும்பல் மேற்கூறிய ரீதியில் குரைத்துக் குதறியிருக்காது?
ஏன்? பரமக்குடியில் ஜெயலலிதாவின் போலிசால் இன்னுயிரை இழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 லட்சம் என்பதை 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்தபோது, அசைந்துகொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. அப்போது(ம்) இந்தப் பார்ப்பன தினமணி வகையறா தம் எல்லாத் துளைகளையும் பொத்திக் கொண்டு மவுனித்துக் கிடந்தனவே? அதுவே பார்ப்பான் வீட்டில் விழுந்த எழவாய் இருந்திருந்தால், தினமணி கும்பல் தம் சிண்டை அவிழ்த்துப்போட்டு, வீதியில் இறங்கி தாண்டவ மாடியிருக்காதா?
ஆக, தினமணியின் அந்தத் தலையங்கத்தின் நோக்கம் அமெரிக்காவுக்கு லாலி பாடுவது என்பது அன்று; செத்துப்போன தமிழர்களின் - சூத்திரர்களின் பிணங்களை அப்படி ஓரமாய்க் கூட்டித் தள்ளிவிட்டுப் போ......ய்க்கிட்டே இருக் காமல், அதென்ன அஞ்சு லட்ச ரூபாயை அள்ளிக் கொடுப்பது?' என்கிற ஆத்திரமே!
- மதுரை அன்புமதி

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...