Friday, July 27, 2012

தமிழ்மொழியின் தனித்தன்மையும் 'தனிமை'த்தன்மையும்


பகுதி |- தமிழின் தனித்தன்மைகள் பொய்யா? போலியா?
தமிழ் நம் மொழி; அது செம்மொழித் தகுதியை நடுவண் அரசு மூலம் ஒப்பாணை பெற்றுத் திகழ்வது தமிழர்க்கெல்லாம் பெருமையும் பேருவகையும் தருகிறது.

செம்மொழி என்று சொல்வதைவிட, தமிழ் உயர்தனிச் செம்மொழி என வழங்கப்படுதல் மேலும் சிறப்பளிப்பதாகும்.
இத்தகு, பெருமையும் பெரும்புகழும் தமிழுக்கு இயல்பாக, இயற்கையாக, மெய்ம்மையாக இருத்தல் வேண்டும்.
பொய்யான புகழோ, போலியான புகழோ தமிழ் பற்றிய உணர்ச்சிப் பெருக்கத்தைத் தான் காட்டுமே தவிர, அறிவு வெளிப்பாட்டினைக் காட்டாது. விழைவோ வேணவாவோ நம் தமிழுக்குப் பெருமை தாராது.
போற்றப்படும் புனைந்துரை
கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி... என,  நம் தமிழினத்தையோ, தமிழ்மொழியையோ குறிப்பிடுவது அறிவியலுக்கு முற்றிலும் மாறானது.
கல்தோன்றி மண் தோன்றாக்காலம் உயிர் தோன்றாத 300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.
அந்தக் காலத்தே, அதாவது, ஓருயிரணு (Mono cell) உயிரியே (Organism) உருவாகாத காலத்தே உயிரியின் உருவாக்கி (Evolution) யின் உச்சகட்டமான மாந்த இனத்தின் ஒரு பகுதியான தமிழினம் தோன்றியது என்பது புனைந்துரையேயாகும்.
இத்தகைய புகழ், தமிழுக்கு மெய்யான புகழினைத் தருமா? தாராது! அது, வெற்றுப்புகழே; வீண்புகழேயாகும்.
உண்மையான, இயல்பான, நிலையான புகழ் ஒன்றுமட்டுமே நம்மருமைச் செந்தமிழுக்கு, பெருமையும் தகைமையும் அளிக்கவல்லது.
இவ்வாறு, கூறுவது, தமிழைக் குறைத்து மதிப்பிடுவது என அறிஞர்கள் கருதக்கூடாது. உண்மையான புகழே உறுதியான, உயர்வான, நிலையான, நெடிய புகழ் ஆகும். இத்தகைய மெய்யான பெருமைகளுள் சிலவற்றை இனி நாம் எடுத்துக்காட்ட இருக்கிறோம்.
தமிழ் பெற்ற தகைமை
தொன்மை, முன்மை,
எண்மை, ஒண்மை,
இளமை, வலிமை,
தாய்மை, தூய்மை,
செம்மை, மும்மை,
தனிமை, இனிமை,
பெருமை, திருமை,
இயன்மை, வியன்மை.
(மொழிஞாயிறு பாவாணர்)
ஆகிய 16பேறுகளும் நம் பைந்தமிழ் மொழிக்கு உரியன.
(எண்மை -_ எளிமை; மும்மை _ மூன்றுதன்மை இயல், இசை, கூத்து;
தனிமை _ தனித்தன்மை;
திருமை _ சொல்வளம்;
இயன்மை _ இயற்கை;
வியன்மை _ பரந்துபட்ட தன்மை;
ஒண்மை _ விளக்கம் தரும் தன்மை.)
இங்கே, தனிமை என்ற சொல் நாம் நம் கட்டுரையில் வழங்கும் தனிமை என்பதனின்றும் வேறானது: மேலே குறித்ததில் தனிமை - ‘Speciality’ என்பது. நாம் குறிப்பிடுவது ‘Isolation’ _ என்ற பொருளில்.
இலையின் நிலை
இலை என்ற பொருளில், பயிருக்கெல்லாம், இந்த ஒரு சொல்லே இல்லாமல் (Leaf) பயிர் வேறுபாட்டிற்கேற்ப பல சொற்கள் தமிழில் உள.
வாழையின் இலை _ வாழை இலை;
நெல்லின் இலை _ நெல் தாள்;
கரும்பின் இலை _ கரும்புத் தோகை;
பனை (தென்னை) இலை _ பனை (தென்னை) ஓலை.
ஆக, இலை, தாள், தோகை, ஓலை _ பல சொற்கள் தமிழில் உள.
மலர் என்பதன் பலநிலை
அரும்பு -_ தோன்றும்போது;
முகை _ முகிழ்க்கும் வளர்ச்சியின்போது;
மொட்டு _ முகையின் வளர்ச்சியின்போது
போது _ இதழ் விரியும்போது
மலர் _ மலரும்போது;
பூ _ நன்கு முழுதும் பூத்தபொழுது;
செம்மல் _ வாடியபொழுது;
வீ _ வாடி, கீழே விழும்பொழுது.
பார்ப்பதில் பலவகை
விழித்தல் _ கண்திறந்து பார்த்தல்;
பார்த்தல்_இயல்பாக_குறிக்கோள் இன்றிப் பார்த்தல்.
நோக்குதல் _ குறிக்கோளோடு கூர்ந்து பார்த்தல்.
காணுதல் _ தேடி அல்லது போய்ப்பார்த்தல்.
நோடுதல் _ சோதித்துப்பார்த்தல் (நோட்டம்)
நாடுதல் _ ஆய்ந்துபார்த்தல்.
ஏ! அப்பா! _ இத்தனை பொருளா?
தமிழில், ஒரு சொல் ஒரு பொருளையோ, பல பொருள்களையோ கொண்டிருத்தல் இயல்பு.
ஆனால், ஒரு தமிழ்ச்சொல் அதுவும் _ ஈரெழுத்து ஒரு மொழி _ சொல்லும் இடம், சொல்லும் நேரம், சொல்லும் சூழல், சொல்லும் வாய்ப்பு முதலியவற்றிற்கு ஏற்ப, பொருள் வேறுபாடுகளை உணர்த்தும் பாங்கினை இப்பொழுது எடுத்துக் காட்டுகளுடன் பார்ப்போம்.
சபாஷ்! சரியான போட்டி!
1.    வலிமைப் பொருள் _ சபாஷ்! சரி (வலிமை)யான போட்டி!
2.    இசைவு _ சரி (சம்மதம்) என்று சொல்லப்பா!
3.    ஆனாலும் _ கணவனும் சரி (ஆனாலும்) மனைவியும் சரி (ஆனாலும்) விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் முறை.
4.    நேர் (ஈடு) _ கணக்கு சரி நேர்(ஈடு)யாய்ப் போயிற்று.
5.    குறித்த _ சரியான (குறித்த) நேரம்!
6.    தக்க _ சரியான நேரத்தில் பணம் கொண்டு வந்துவிட்டீர்களே?
7.    ஒத்து _ உனக்கும் எனக்கும் சரி (ஒத்து) வராது!
8.    கவனம் (உற்று) _ சரியாய்க் கேள்!
9.    நேரான (நேர்மையான) _ சரியான (நேர்மையான) பாதையில் போ!
10.    கெட்டி _ சரி (கெட்டி)யாய்ப் பிடித்துக்கொள்.
11.    நல்ல (செம) _ சரியான இலாபம்!
12.    நன்றாக _ சரியாகப் பார்த்தாயா?
13.    பொல்லாத _ சரியான வாயாடி!
14.    சமம் _ சரிநிகர் சமானம், சரிக்குச்சரி.
15.    இத்தோடு _ சரி (இத்தோடு) விடுங்கள்.
16.    போதும் _ சரி (சரி) நிறுத்து.
17.    தவறற்ற தன்மை _ அவன் கூறுவது சரியா? தவறா?
போதும்! நாமும் இத்தோடு எடுத்துக்காட்டு களை நிறுத்திக் கொள்கிறோம். சரிதானே?
தனக்குவமையில்லாத தனித்தன்மை
மேலே காட்டியவை மட்டுமன்றி ஏராளமான தனித்தன்மை, தனக்குவமை இல்லாத தனித்தன்மை (Uniqueness) உடையது நம் தமிழ்மொழி! ஒரு சிலவற்றை மட்டுமே இங்குக்காட்டியுள்ளோம்!
பேரா.ந.வெற்றியழகன்
-  தமிழின் தனிமைத்தன்மை பற்றி ஆராய்வோம்.

அடுத்த இதழில்...

குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை
விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்
எதில் வேண்டும் தூய்மை?
புதிய சரஸ்வதி
தமிழ்மொழியின் தனித்தன்மையும் 'தனிமை'த்தன்மையும்
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் 6 பக்தி ரசமா? காம ரசமா?
உங்களுக்குத் தெரியுமா?
நாட்டின் நான்காவது தூண்...? இன்றைய ஊடகத்துறை இப்படி.
புதிய சவால்களை எதிர்கொள்ள விடுதலையே ஆயுதம்!
சிந்தனைக் (கவி)த்துளி
நிகழ்ந்தவை
எண்ணம்
நுழைவுத் தேர்வு கூடாது!
பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 4
நாத்திகமே இறுதியில் வெல்லும்!
பெரியாரை அறிவோமா?
புதுப்பாக்கள்
அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே...
நாத்திகர் வாக்கு பலித்தது !
இந்தியாவில்....
ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்
இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்
செய்திக் கீற்று
சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?
முற்றம்
சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்
மருத்துவம் 200/200ல் 16க்கு 10
முகநூல் பேசுகிறது

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...