Friday, July 13, 2012

நித்தியானந்தாவின் முகத்திரையைக் கிழிக்கும் ஆர்த்திராவ்




நித்தியானந்தாவின் இன்னொரு சீடரான ஆர்த்திராவ், இந்தியா டுடே குழும செய்தியாளர் மிருதுளா சந்துரிக்கு தந்த பேட்டியிலிருந்து...
கேள்வி: பல மாதங்கள் கழித்து இப்போது வந்திருப்பது ஏன்?
பதில்: கர்நாடக போலீசிடம் இரு வருடங்களுக்கு முன்பே புகார் தந்து விட்டேன். ஆனால் இப்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுகிறேன். காரணம், என்னுடைய நெருங்கிய தோழி கோபிகாவைக் காணவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக என்னையும் அதே வழியில் முடித்து விடுவார்களோ என்ற பயம் இருக் கிறது. அதனால்தான் மீடியாவிடம் பேசினேன்.
கேள்வி: நீங்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர் என்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட வர் என்றும் நித்தியானந்தா கூறு கிறாரே?
பதில்: இதெல்லாம் முட்டாள்தன மான குற்றச்சாட்டுகள். அவருக்கு எதிராக பேசுபவர்கள் மீது இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி  கிரிமினல் வழக்குகளைப் போட்டு சரிக்கட்ட முயற்சிக்கிறார்.
கேள்வி: அவர்மீது உங்களின் பிரதான குற்றச்சாட்டுகள் என்ன?
பதில்: ஆறு வருடங்கள் அவரி டம் சீடராக இருந்தேன். அதில் அய்ந்து வருடங்கள் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். என்னைப் போலவே இன்னும் பலரை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார். மூளைச் சலவை செய்திருப்பதால் அவர்களால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை.
கேள்வி: சீ.டி.களை வெளியிட்ட போது போலீசிடம் மட்டும் தராமல் மீடியாக்களிடமும் தந்தது ஏன்?
பதில்: வெளியில் சுற்றுக்குவிட நான் வீடியோ படத்தை எடுக்க வில்லை. விஜய்யத்வாஜ், லெனின் போன்றோர் நித்தியானந்தாமீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறு என்று உறுதி செய்து கொள்ளத் தான் வீடியோ எடுத்தேன். ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியாயின. எங்களுக்கிடையிலான செக்ஸ் உறவை ஆன்மீக சங்கமம் என்று சொல்லி நம்ப வைத்தார். வீடியோ வைப் பார்த்த பிறகு நான் அந்த ஆசி ரமத்தை விட்டு வெளியேறினேன்.
கேள்வி: தமிழக முதல்வரைச் சந்தித்தீர்களா?
பதில்: முதல்வர் ஜெ. ஜெயலலிதா விடம் நேரம் கேட்டிருக்கிறேன். நித் தியானந்தாவின் உண்மை முகத்தைக் காட்ட வாய்ப்புக் கிடைத்தால் நல்லது.
கேள்வி: உங்கள் வழக்கு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது?
பதில்: பலமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக  8 முறை தாக்கீது அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் ஆண்மை  இல் லாதவர் என்று கூறி நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மறுத்து வருகிறார்.
நன்றி: இந்தியா டுடே 18.7.2012 பக்கம் 21


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>





No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...