Sunday, July 22, 2012

இன்னும் எத்தனை நாள்?


கேள்வி: சேதுக்கால்வாய்த் திட்டம் மாற்றுப் பாதையில் சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள் ளதே, அடுத்து என்ன நடக்கும்?
பதில்: ஒன்றும் நடக்காதிருந்தால் போதும். ஏற்கெனவே ஏராளமான மக்கள் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமே நிறுத்தப்பட்டதால் கடலில் பாலம் கரைந்து போய்விட்டது.  இன் றைக்கு இந்தியா இருக்கும் பொரு ளாதார நிலையில், இத் திட்டத்தைக் கைவிடுவதே நல்லது. திட்டம் நிறை வேறினாலும் அதனால் கிடைக்கக் கூடிய வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
(கல்கி 22-.7.-2012 - பக்கம் 27)
கேள்வி: சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவ்ரி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பற்றி . . .
பதில்: இந்தக் கமிட்டி அமைக்கப் படுவதற்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் கூட பல நிபுணர்கள் மாற்று வழிகள் சாத்தியமே என்பது பற்றி விவரமாக ஆராய்ந்து கூறி இருக் கிறார்கள். அந்த அபிப்பிராயங்களி லிருந்து இந்தக் கமிட்டித் தலைவரின் அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிறது. இதில் எது சரி என்ற ஆராய்ச்சியில் இறங்குவதை விட, ராமர் பாலத்தைச் சேதப்படுத்துவது ஏற்க முடியாத விஷயம் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷ யம்.
(துக்ளக் 18.-7.-2012 பக்கம் 29)
இந்தியக் கிழக் குக் கடற்கரையிலி ருந்து சரக்குக் கப்பல்கள் இலங் கையைச் சுற்றி வருவது போல இந்தப் பார்ப் பனர்கள் அங்கு இங்கு சுற்றி கடை சியில் ராமர் பாலம்  - அது இடிக்கப்படக்கூடாது என்று மங்களம் பாடி முடிக்கிறார்கள் என் பதைக் கவனிக்க வேண்டும்.
இன்றைக்கு இந்தியா இருக்கும் பொருளாதார நிலையில் இந்தத் திட் டம் தேவையில்லையாம் - ரொம் பத்தான் கசிந்து உருகுகிறது கல்கி.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இடிந்து கிடக்கும் கோயில்களையெல்லாம் இடித்துக் கட்டலாம்.  பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோயிலைக் கட்டலாம். ஆனால் மக்கள் நலனுக்கு நாட்டு வளத்துக்கு பயன்படக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்படக்கூடாது. அடேயப்பா! எவ்வளவு பெரிய இந்தியமாக் கடலைத் தாண்டிய விரிந்த உள்ளம். இந்தப் பார்ப்பனர் களுக்கு.
இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய பொருளாதார வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்று பொருளாதாரப் புலி போல, திட்டத்தின் தீட்சண்யத்தில் அத்துப்படியான அறிஞர் போல கல்கி கனைக்கிறது.
இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி வல்லுநர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பி.ஜே.பி. ஆட்சியில் முடி வெடுத்தபோது இந்தக் கல்கி,  துக்ளக் வகையறாக்கள் ஏன் எழுதுகோலைத் தூக்கிக் கொண்டு, விட்டேனா பார் என்று விடுபட்ட அம்பு போல கிளம்பவில்லை?
1860 இல் வெள்ளையன் ஆட்சிக் கால முதல் சாத்தியமான திட்டம்தான் என்று நிபுணர்கள் கூறிடவில்லையா?
டவுண்சென்டின் திட்டம் (1861), பிரிட்டீஷ் பாராளுமன்றக் குழுவின் திட்டம் (1862), ஸ்கோட்டர்ட்டின் திட்டம் (1871) இராபர்சனின் திட்டம் (1872) சர் ஜான் கோடின் திட்டம் (1884) தென்னிந்திய ரயில்வே பொறியாளரின் திட்டம் (1903), சர் ராபர்ட் பிரிஸ் டோவின் திட்டம் (1922) சர்.ஏ. இராமசாமி முதலியார் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1955) டாக்டர் நாகேந்திரசிங் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1964), ஏ.ஆர். இலட்சுமி நாராயணன் தலை மையிலான குழுவின் கருத்து - இத்தனை ஆண்டுகளாக எத்தனை எத்தனையோ நிபுணர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவராவது இத்திட்டம் சாத்தியமற்றது - பயனற்றது என்று சொல்லவில்லையே!
ஆனால் இந்த அக்கிரகாரத்து அம்பிகள் மட்டும் இந்தத் திட்டத்தால் பயன் ஏதுமில்லை என்று சொல்லு கிறார்கள்.
இந்தத் திட்டத்தால் பயன் இல் லையாம். ஆனால் நிபுணர்கள் என்ன ;சொல்லுகிறாகள். இதோ அந்தப் பட்டியல்.
(அ) இந்திய கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமை யும்.
(ஆ) இந்தியக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளின் போக்கு வரத்துச் செலவு குறையும். எனவே, உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருள்கள் போட்டி போட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் ;பொருட் களின் விலை குறையும்.
(இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச் சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
(ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும்; இதனால் பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறை முகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட் டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
(உ) மீனவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
(ஊ) தமிழகக் கடலோரப் பகுதி களில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடித்துறைமுகங் களால் மீனவர்கள் பிடிக்கும் மீன் களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
(எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர் களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.
(ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.
(அய்) இந்திய சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
(ஒ) பல்வேறு வகைகளிலும் அந் நியச் செலவாணி மீதமாகும்; அந்தியச் செலவாணி வருவாயும் அதிகரிக்கும்.
வேலை வாய்ப்பும் பெருகும்.
இவ்வளவு நலன்களும், வளங் களும் கைகோர்த்து வரும் போது இந்த அக்ரகாரவாசிகள் மட்டும் ஏன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்?
ஆர்.கே.பச்சவ்ரி நிபுணர் குழு - வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று சொல்லுகிறது என்று சொன்னால் வேறு நிபுணர்கள் வேறு வகையாகச் சொல்லி இருக் கிறார்களே என்று விதண்டாவாதம் செய்கிறார் திருவாளர் சோ,
ஆக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற தமிழர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்ற புழுக்கம் உள்ளத்தில். அதன் வெளிப்பாடுதான் இப்படிக் கோணல் சுழி வெட்டுவதாகும்.
தமிழர்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு ஆர்வம்!
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு மய்யம் (NEERI - The national Environment Engineering Research Institute) 
என்ற நிறுவனம்தான் இந்த ஆறாவது வழித் தடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்தது.
இதனை ஏற்றுக் கொண்டு இசைவு அளித்தது டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசல்ல, மாறாக வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.
பி.ஜே.பி.யின் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, கப்பல் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர், கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் - இத்தனை பி.ஜே.பி. அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட திட்டம் இப்பொழுது ஆகாத திட்டமாக மாறியது எப்படி? அப்பொழுது வராத ராமன் பாலம் இப்பொழுது வந்து குதித்த மர்மம் என்ன?
அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினானாம். கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். சொல்பவர்கள் சாதாரணமான ஆசாமிகளா? சாட்சாத் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்களாயிற்றே! ஆமாம் ராமன்கட்டிய பாலம்தான் என்று கதைக்கிறார்கள்.
இவர்கள் சொல்லும் இத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதன் இருந்தானா?
கடலில் இது போன்ற மணல் திட் டுகள் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன என்று கடல்சார் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.
இவையெல்லாம் அவாள் காதில் விழவே விழாது.
ஆஸ்திரேலியா கண்டத்தில் நீண்ட நெடிய தூரம் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றனவே - அவற்றை எந்த ராமன் கட்டினான் என்ற நிபுணர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத பார்ப்பனர்கள் வீண் அரட்டைக் கச்சேரி நடத்து கிறார்கள் _- விதண்டாவாதம் பேசுகிறார்கள்.
ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் செம்மொழியானால் கனல் கக்குகிறது. வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கேலி செய்கிறார்கள்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் தணலாகக் கொதிக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்றால்  ஆவேசப்புயலாய் ஆடிக் குதிக்கிறது. கோயிலுக்குள் தமிழ் என்றால் குடுமிகள் எல்லாம் கொந் தளித்துக் கிளம்புகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு என்றால் இரக்கமற்ற முறையில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது.
தமிழர்களின் நீண்ட நாள்கனவான தமிழன் கால்வாய்த் திட்டம் என்ற சேது சமுத்திரத் திட்டம் என்றால் சீறிப் பாய்கிறது. இந்தக் கூட்டத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு சகித்துக் கொள்ளப்போகிறோம் என்பதுதான் தமிழர்கள் முன் , திராவிடர்கள் முன் செங்குத்தாக நிற்கும் வினா எனும் எரிமலை!

இராமனே உடைத்த பாலம்

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
கட்டியவனே உடைத்துவிட்டான், பாலம் எங்கே இருக்கிறது?
உ.வே. சுமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057க்கு உரை எழுதும் போது அய்யர் எழுதுகிறார்: வில்லின் குதை யால் (அம்பின் நுனி கீறித் தருக்கிய இடம் இன்னும் தனுக் கோடி என்றும், அவ்விடத்தில் உள்ள நீர்ப்பகுதி தனிக்கோடி தீர்த்தம் என்றும் வழங்குகிறது.
திரும்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.
கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது வில்லின் நுனி யால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன் பொருள்.
இராமாயணத்தின் அடிப்படையில் தானே ராமன்பாலத்தை உடைக்கலாமா? என்று பிரச் சினையைக் கிளப்புகிறார்கள். அந்த இராமாயணம் தானே இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...