Friday, July 20, 2012

வாழ்க ஆம்ஸ்ட்ராங் குழுவினர்!


அப்போலோ 11 விண்வெளி வீரர்கள் - நீல் ஆர்ம்ஸ்ட்ராங், காலின்ஸ், ஆல்ட்ரின்
நிலாவில்  நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் அடி எடுத்து வைத்த நாள் இந்நாள். இறங்கிய பகுதி நிலாவில் அமைதிக் கடல் பகுதி - நேரமோ காலை 9.18 இந்நாள் (1969). அவ ருடன் கர்னல் மைக்கேல் காலின்ஸ், எட்வின் இயூஜின் ஆகியோர்  பயணித்த பெருமைக்குரியவர்கள்.
மைனஸ் 279 ஃபாரன்ஹீட் (மைனஸ் 193 பாகை செல்சியஸ்) தட்ப வெப்ப நிலையில் உள்ள துணைக் கோளில்தான் அவர்கள் அடி எடுத்து வைத்தனர் என்றால், அதன் விபரீத நிலைப்பாட்டை மனிதனின் கற்பனைக்கே விட்டு விடுவோம்.
1969 ஜூலை 21 அதிகாலை 3.56 மணிக்கு நிலவில் காலடி பதித்தார் ஆம்ஸ்ட்ராங்.
அவர் சொன்ன சொற்கள் உலகப் பந்தின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்தது மட்டுமல்ல - காலா காலத்திற்கும் இந்தக் கால் பதிப்பு கல்வெட்டாகப் பதிந்திருக்கும்.
That’s one small step for a man. One giant leap for man kind.
மனிதனுக்கு இது சிறியதோர் கால் வைப்பு. ஆனாலும் மனித குலத்துக்கோ பெருந்தாவல்
இந்தச் சொற்கள் என்னும் கூட்டுக்குள் எவ்வளவுப் பெரிய தகவல்களும், பொருள்களும் நிமிர்ந்து நிற்கின்றன.
அதே நேரத்தில் இந்தியாவி லிருந்தும் விண்வெளியில் பறந்த துண்டு. அவன் பெயர் ராகேஷ் சர்மா.
அவன் விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைத்த போது சொன்னது என்ன தெரியுமா?
காயத்ரி மந்திரம், அதுவும் மூன்று முறை பார்ப்பனர்கள் நடத்திய தாம்பிராஸ் ஏடு என்ன எழுதியது தெரியுமா?
ராகேஷ் சர்மா! ஆம் விண்வெளியிலே பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியன்! பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது! நாமும் தலை வணங்கி நிற்கிறோம்! எதற்காக?
அவன்நம் இனத்தைச் சார்ந் தவன் என்பதனாலா? இல்லை, இல்லவே இல்லை! பின் எதற்காக?
விண்வெளிக் கலத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் உச்சரித் தானே மூன்று முறைகள் அந்த காயத்ரி மந்திரத்திற்காக!! (பார்ப் பன சங்கத்தில் தாம்பிராஸ் ஏடு 19.5.1962).
ராகேஷ் சர்மா ஏதோ ஒரு அம்பி, எப்படியோ தொலைந்து போகட்டும்!
நோபல் பரிசு பெற்றாரே டாக்டர் சர்.சி.வி. இராமன் என்ன சொன் னார்?
முதல் மனிதன் ககாரின் 1962ல் விண்வெளி - அகண்ட காஸ்மாஜில் (Cosmos) சென்றதை விஞ்ஞானி யாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் செய்வதாகும் என்றார்.
அறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண் ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்களின் நிலைமையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டி யதில்லை; கூறாமலே அது விளங் கும்! - என்று இவ்வாறு வேதனை கலந்த வார்த்தைகளில் நாகரிக மாகக் கண்டித்தவர் மூத்த பொது வுடைமைவாதியான ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) தமது நூலில். (கடவுள் கற்பனையே, புரட்சிகர மனித வரலாறு எனும் நூல் பக்கம் IV)
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடியைப் பதித்த இந்நாளில் இந்தியாவின் இந்துத்துவ மனப் பான்மையின் நிறம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
சந்திரன் தனது குருவாகிய வியாழ பகவானின் மனைவியாகிய தாரை என்பவளிடம் காதல் கொண்டு, அந்தப் பெண்ணைக் கற்பழித்தான்; அதில் பிறந்தவன் தான் புதன் என்றும், உண்மையை யறிந்த வியாழ பகவான் சந்திரனுக் குச் சாபமிட்டான்; அதன் காரண மாகவே அவன் உடல் தேய்ந்து கொண்டு போனது (அதாவது தேய் பிறை) என்று இப்படி உபதேசித்துக் கொண்டு இருக்கிறார்களே புராண (அதிகப்) பிரசங்கிகள் - அவர்களை என்ன சொல்ல!
குறிப்பு: ருசியா அனுப்பிய விண் கலத்தில் சென்ற ககாரினிடத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு  என்ன பதில் சொன்னார்?
கடவுளா? அப்படி ஒருவரையும் நான் காணவில்லையே! என்று காது செவிடாகும்படி ஓங்கி ஒலித்துச் சொன்னதையும் நினைவு கூர்வோம்.
ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று கால் பதித்ததை அந்தக் கால கட்டத்தில் பல மதவாதிகள் மறுத் ததும் உண்டு என்பதும் இந்த நேரத்தில் நினைவுபடுத்தத்தக்க தாகும். தங்கள் அறியாமையை எண்ணிப் பிற்காலத்தில் வருந்தவே செய்தனர்.



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...