Wednesday, July 11, 2012

தேசியமாம்!


தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசி யம்? திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ் சிறுத்தைகள் முழக்க மிடுவதுண்டு. இது ஏதோ கோபதாபத்தில், எரிச்சலில் போடப்பட்ட முழக்கம் இல்லை.
நாட்டு நடப்பின் நாடியைப் பிடித்து ஒலிக்கப்பட்ட முழக்கம். குறிப்பாக இந்தி யாவில் நதிநீர்ப் பிரச்சினை ஒன்று போதும் - இந்தியாவில் தேசிய நீரோட்டம் எந்த டி.எம். சியில் இருக்கிறது என் பதைத் தெரிந்து கொள்ள!
இதில் என்ன வேடிக்கையென்றால், இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசாக இருந்தாலும் சரி, சர்வ தேசியம் பேசும் கம்யூ னிஸ்டுகளாக இருந் தாலும் சரி, நதிநீர்ப் பிரச்சினையில் குள்ள மனிதர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.
குறிப்பாக கருநாடக மாநிலத்தில் காங்கிஸ், ஜனதாதளம், பி.ஜே.பி. ஆட்சிகள் மாறி மாறி வந்திருந்தாலும் சட் டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக் காமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் காட்டி வரு கின்றன.
முல்லைப்பெரியாறு நீர்ப் பிரச்சினையில் கம் யூனிஸ்டு ஆட்சியானா லும் சரி, காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி உச்ச நீதிமன்றம் சொன் னாலும் போய் வா மகனே! என்று போர் முரசு கொட்டுகின்றன.
இப்பொழுது டில்லிக் கும், அரியானாவுக்கும்  இடையே உடைசல் எழுந்துள்ளது. யமுனை நதியிலிருந்து டெல் லிக்கு அளிக்கப்பட்டு வந்த குடிதண்ணீருக்கும் பிரச்சினை!
குடிநீருக்கே வயிற் றில் அடியாம்! ஆத்திரத் தின் உச்சிக்கே சென்ற டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தம் வீட் டுக்கு, அமைச்சர்கள் வீட்டுக்குத் தடையில் லாமல் வழங்கப்பட்டு வந்த குழாய் இணைப் பைத் துண்டிக்கச் செய்துவிட்டாராம்.
இப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும் 22 கேரட் தேசிய திலகங்கள். திராவிடர் கழகப் பேர ணியில் கருஞ்சிறுத்தை களின் முழக்கம் நியாய மானதுதானே!   - மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...