பார்ப்பனரல்லாதார் இயக்கம்
காங்கிரஸ் - முஸ்லிம் லீகின் கோரிக் கையான ஹோம் ரூலைத் தவிர வேறு எதிலும் மனநிறைவடையாதவர்களாக இருந்தபோது, சுய ஆட்சி எந்த அளவுக்கு நாட்டுக்கு அளிக்கப்பட்டாலும், பார்ப் பனரல்லாத மக்களுக்கு அது நன்மையை விடத் தீமையையே அதிகமாக விளை விக்காதா என்று சிந்தனை மிக்க பார்ப் பனரல்லாத மக்கள் கேட்கத் தொடங் கினர். அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த பார்ப்பனர்கள் தங்களைப் பற்றி மிகைப்படுத்திக் காட்டிக் கொண் டதைக் காணும்போது, இந்த கேள்வி மிகவும் நியாயமானதாகவே தோன்றியது. ஆங்கிலேய ஆட்சியாளர்களை விட பார்ப்பன ஆட்சியாளர்களையே பார்ப்பன ரல்லாத மக்கள் விரும்புவார்கள் என்று பேரரசின் சட்டக் கவுன்சிலில் மரியாதைக் குரிய திரு. சி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அதிர்ச்சி அளிக்கும்படி தன்னிச்சையாகப் பேசியது பார்ப்பனரல்லாத மக்களின் கண்களைத் திறந்துவிடுவதாக இருந்த துடன், தென்னிந்திய பார்ப்பனர்களின் எண்ணம் எத்தகையதாக இருக்கிறது என்பதையும் வெளிக்காட்டியது. ஆங்கி லேயரின் ஆட்சியைப் போலவே, பார்ப் பனர்களின் ஆட்சியும் நமது நாட்டின் பொது நலனுக்குக் கேடு விளைவிப்ப தாகவே இருக்கும் என்பதுடன், நாட்டின் மற்ற பகுதியில் உள்ள மக்கள் தங்களின் சரியான உணர்வினால், புரிதலால் பார்ப்பனர்களின் செல்வாக்கு மறுபடியும் எப்போதும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஆங்கிலேயரின் ஆட்சி அங்குமிங்கு மாக நமக்கு ஒரு சில இடங்களில் மேலெழுந்தவாரியாக கேடு விளை வித்தது என்றால், பார்ப்பனர்களின் ஆட்சியோ நம்மை ஒவ்வொரு மூலையிலும் துரத்தியடித்து, நமது வாழ்க்கையின் உட்புறத்தையே பாதிப்பதாக இருக்கும். மதச்சார்பற்ற ஆட்சியாளரின் ஒரு வரை யறைக்குட்பட்ட அதிகாரம் எளிதாகப் புரிந்து கொள்ளப்பட இயன்றதாக இருக்கும் என்றால், ஆன்மிக உணர்வு கொண்ட ஆட்சியாளரின் அதிகாரம் எல்லையற்றதாகவும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருப்பதாகும். ஆங்கிலேய ஆட்சியாளர் இருப்பதை விட பார்ப்பன ஆட்சியாளர் இருக்கலாம் என்று நாம் நினைக்கவில்லை; விரும்பவும் இல்லை. ஒரு தனிப்பட்ட ஆங்கிலேயர் நமக்குப் புதியவர் என்றும், அவரை விட ஒரு தனிப்பட்ட பார்ப்பனர் நம் நாட்டவர் என்றும் நாம் சில நேரங்களில் நினைத் தாலும் கூட, பார்ப்பனர்களை ஆட்சியாளர் இடத்தில் வைத்துப் பார்க்க மறுப்பதில் நமக்கு தயக்கம் ஏதுமில்லை. இந்த வெறுப்புக்கான காரணம் என்ன என்று தேடி வெகுதொலைவுக்குச் செல்ல வேண் டுவதில்லை. பிறப்பினால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் பெருமை பாராட்டிக் கொள்வது, அவர் களுள் மறைந்திருக்கும் பாகுபாடு காட்டும் மனோபாவம், அனைத்துக்கும் மேலாக தனிப்பட்டவர்களாக அவர்கள் பெற்றுள்ள செல்வம், செல்வாக்கு ஆகியவை பார்ப்பனரல்லாத மக்களின் மனதில் அவர்களைப் பற்றி அழிக்க முடியாத சந்தேக உணர்வையும், நம்பிக்கையின் மையையும் தோற்றுவித்துள்ளன. தங் களின் அதிகாரங்களை, செல்வாக்கை ஒன்றுதிரட்டி, தங்கள் இனத்தின் மேன் மைக்கான கொள்கைகளைக் கடைப் பிடித்து, கடந்த காலத்தில் தன்னலமே உருவானவர்களாக பார்ப்பனர்கள் இருந்த காரணத்தால், மற்ற சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்கள் மேற்கொண்ட நியாயமான முயற்சி களுக்குத் தடை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவர்களாகவே தங்களைப் பார்ப்பனர்கள் கடந்த காலத்தில் காட்டிக் கொண்டுள்ளனர். எவரும் புரிந்து கொள்ள முடியாத வழிகளில் பணியாற்றி வந்த பார்ப்பனர்கள், இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு அளவிலேயே அவர்கள் இருந்த போதிலும், அனைத்து அரசு பதவிகளிலும், சலுகைகளிலும் ஒரு பெரும் பகுதியை இதுவரை பெற்று அனுபவித்து வந்துள்ளனர்.
புலிவேந்தலா மாநாடு
அனைத்துக்கும் மேலாக, பார்ப்பன வம்சாவளியினரின் துருப்பிடித்துப் போன ஆயுதங்களைப் புதுப்பிக்கும் நோக்கத் தில், ஆர்வம் கொண்ட ஒரு சில பார்ப் பனர்கள் உருவாக்கி வளர்த்த வர்ணாஸ் ரம தர்ம இயக்கத்தினர், பொதுவாகவே பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மக்களிடையே பொதுவாகவே ஒரு வெறுப்பு உணர்வை, பகை உணர்வை உருவாக்கி வளர்த்து வந்தனர். இத் தகைய சூழ்நிலைகளில், பார்ப்பனரல்லாத சமூகங்களைச் சேர்ந்த தொலை நோக் குக் கொண்ட, திறமை மிகுந்த தலைவர் கள் தங்களின் சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத் தைத் தொடங்க முடிவு செய்தது இயல் பானதேயன்றி அதில் வியப்பேதும் இருக்க முடியாது. முதல் முதலாக பார்ப் பனரல்லாத மக்களின் இயக்கத்தைத் தொடங்கியதற்காகவும், அதனை மூன்று வெவ்வேறு மொழி நாளிதழ்களின் மூலம் பிரபலமடையச் செய்ததற்காகவும், டாக் டர் நாயர் அவர்களுக்கும், ராவ் பகதூர் பி.தியாகராய செட்டியார் அவர்களுக்கும் நமது நன்றியைச் செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். என்றாலும், பார்ப்பனரல்லாதாரின் இந்த இயக்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டது மட்டுமே யன்றி, எவரையும் தாக்குவதை நோக்க மாகக் கொண்டது அல்ல. சமூகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் அது தேசிய உணர்வுக்கு எதிரானது அல்ல. ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட நலன்களை மேம்படுத்திப் பாதுகாப்பதாக அது இருக்க வேண்டுமேயன்றி, நாட்டின் பொதுவான நலன்களைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. இந்த தெளிவான நோக்கத்தைக் காணத் தவறியதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகத்தான், சந்தேகமே குணமாகக் கொண்ட திவான் பகதூர் பி.கேசவபிள்ளையாலும், அவரது கூட்டாளிகளாலும் இரண்டாவது பார்ப் பனரல்லாத மக்கள் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. பார்ப்பனரல்லாத மக்களிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய தேவையற்ற பிரிவினைக்காக வருந்தும் நாம், இந்த இரண்டு அமைப்புகளும் மேலும் மேலும் பொதுவான நோக்கங் களுக்காகச் செயல்பட்டு வருவதுடன், காலப்போக்கில் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற் கிடையே, நமது பொதுவான நோக்கங் கள் நிறைவேறுவதற்கு உதவி செய்வது தான் உண்மையான பார்ப்பனரல்லாத மக்களான நமது கடமையாகும். அனைத் துக்கும் மேலாக, நடைமுறை சாத்திய மான அரசியல் சீர்திருத்தங்களைக் கோரிப் பெறுவதில், நமது பார்ப்பன சகோதரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர் களான நாம் இருந்துவிடக் கூடாது என்பதை நாம் எப்போதுமே மனதில் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட் டால், நமது ஜனநாயக உணர்வுகள் உண்மையானவை அல்ல, போலி யானவையே என்பது நம்மால், நாமறியா மலேயே மெய்ப்பிக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில், கானல் நீரைத் தேடி ஓடி நமது ஆற்றல்களை வீணடித்துக் கொள்ளும், வீணான கனவுகளைக் காண்பவர்களாக வும் நாம் இருக்கக் கூடாது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 75
- நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 74
- நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 73
- நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 72
- நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 71
No comments:
Post a Comment