சிலுவையில் வழியும் நீர், சர்ச்சின் கோபம், வழக்குகளை எதிர்நோக்கும் ஒரு பகுத்தறிவுவாதி இதெல்லாம் நமது குழம்பிய மதச்சார்பற்ற நிலையின் கூறுகளா? சந்திரன் அய்யர் எழுதும் கட்டுரை
இந்தியாவெங்கும் பிள்ளை யார் சிலை கள் பால்குடித்ததாக 1995-இல் சொல்லப் பட்டது நினைவிருக்கலாம். விஞ்ஞானிகள் குழு ஒன்று இதை ஆராய்ந்து, எந்த அற் புதமும் இதில் இல்லை என்றும் கூறி நிரூ பித்தது. அப்போது எந்த இந்துவும் இப்படிச் செய்த விஞ்ஞானிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவோ இல்லை. ஆனால், சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவரும், நிறுவனருமான சணல் இடமருகுக்கு நடந்தது துரதிருஷ்ட வசமானது. மும்பையின் மேற்குப் புறநகர் பகுதியான விலேபார்லே பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிலுவையிலிருந்து நீர்வடியும் நிகழ்ச்சி ஒரு அற்புதமென்று கருதப்பட்டது. இது கழிவுநீர் தேங்கியதால் ஏற்பட்ட தென்று இடமருகு சொல்லியதால் போலீஸ் புகார்கள் இவர்மீது குவிந்தன. மதத் துவேஷம், மத உணர்வுகளைப் புண்படுத் துதல், போப்புக்கு எதிரான விமர்சனம் சொல் லுதல் எனப் பல புகார்கள் சொல்லப்பட்டன. இடமருகுவின் கூற்றால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி தேவாலயத்தின் குருவும் கத்தோலிக்க அமைப்பின் பிரதிநிதிகளும் அவரிடம் இந்த அற்புத நிகழ்ச்சி பணம் பண்ணும் மோசடி வேலை என்று கூறியதற் காக பொது மன்னிப்பு கோருமாறு கேட்டார் கள். ஆனால் இடமருகு அதற்கு மறுத்துவிட் டார். ஒரு தாந்திரீகரை அழைத்து தொலைக் காட்சி காமிராக்களுக்கு முன்னால் தன்னை மந்திரத்தால் கொல்லுமாறு இடமருகு சவால் விட்டது புகழ்பெற்ற ஒன்றாகும். ஆனால், அந்த தாந்திரீகரால் இடமருகுவைக் கொல்ல முடியவில்லை. சக்திவாய்ந்த கடவுளின் அருளால் இடமருகு பிழைத்து விட்டதாக அந்த தாந்திரீகர் கூறினார். ஆனால் அவரோ தான் ஒரு நாத்திகர். தன்னிடம் கடவுளுக்கு வேலை இல்லை என்று கூறினார். இடமருகுமீது வழக்குகள் தொடரப்பட்டி ருப்பது பற்றி இந்து சாமியார்களை அம்பலப்படுத்துவதில் (சமீபத்தில் நிர்மல் பாபா) முனைப்பு காட்டும் வெகுஜன ஊட கங்களில் செய்தி எதுவும் இல்லை என்பதும் நமது ஊடகவியலாளர்களின் குழம்பிய மனநிலையைக் காட்டுவதாகும். எங்கள் செய்தித்தாளான விடுதலையில் இட மருகுக்கு ஏற்பட்ட நிலையை எழுதினோம். நாங்கள் விஞ்ஞானபூர்வமான அணுகு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்து உயர்சாதியினர் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களில் இப்பிரச்சினை இந்து தெய் வங்கள் தொடர்பாக இல்லாததால் கண்டு கொள்ளப்படவில்லை. அது நமது கடவுளாக இல்லாதபோது எதற்கு கவலைப்பட வேண் டும் என்றே எண்ணுகிறார்கள் என்று கருது வதாகக் கூறுகிறார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலிபூங்குன்றன். மகாராஷ்டிரா கிறிஸ்துவ இளைஞர்கள் அமைப்பின் தலைவர் ஆக்னலோ பெர் னாண்டஸ், இடமருகு மீது குறைந்த அனு தாபமே காட்டவேண்டும் என்கிறார். சிலுவை யிலிருந்து நீர்வடிந்ததை தேவாலயம் அற் புதம் எனக் கூறவில்லை. ஆனால் தேவாலய குருக்கள் மக்களை ஏமாற்றி பணம் செய்வ தாக இடமருகு விமர்சித்துள்ளார் என்கிறார். இவர் ஜுஹு காவல் நிலையத்தில் இடமருகு மீது புகார் கொடுத்துள்ளார். அற்புதங்கள் என்று போலியான தகவல் பரப்புவதைத் தடுக்கவே, தான் இவ்வாறு செய்வதாக இடமருகு விளக்கம் அளிக் கிறார். (பார்க்க பேட்டி). மும்பைக்கு வெளியே அவரது தரப்புக்கு ஆதரவுகள் பெருகிவருகின்றன. சென்னையில் சமூக செயல் பாட்டாளரான அ.மார்க்ஸ் இடமருகு வுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆம்ஸ்டர் டாமில் போப் ஜான்பாலைக் கூட பாலியல் ரீதியாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவர்கள் பெரும் பான்மையாக இருக்கும் நாடுகளில் இதுபோன்ற சித்தரிப்புகள் அனுமதிக்கப் படுகின்றன. இங்கே சிறுபான்மையினராக இருப்ப தால் உணர்வுபூர்வமான பிரச்சினை ஆகி றது. இடமருகு செய்தது சரிதான். அவருக்கு எப்போதும் மதரீதியான பாகுபாடு இருந்தது இல்லை என்கிறார். தமிழ்நாடு பகுத்தறி வாளர் கழக பொதுச்செயலாளர் வி.கும ரேசன், இந்திய அரசியல் சாசனத்தின் 51 ஆவது சட்டப்பிரிவு படி ஒவ்வொரு குடி மகனும் விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மனி தாபிமானம் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்துக்கொள்வது அடிப்படைக் கடமை யாகும். அது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல என்கிறார். தமிழ்நாட்டில் பகுத் தறிவாளர் கழகம் மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இடமருகு இன்னமும் போலீஸ் விசா ரணைக்குப் போகவில்லை. ஜுஹு காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளரான அருண் பகத் இவர்மீதான புகார்களை விசாரித்து வருகிறார். கிறிஸ்துவ அமைப்பின் உறுப் பினர்கள் கொடுத்த புகாரின் பெயரில் மதஉணர்வுகளைப் புண்படுத்தும் வழக்கு அவர்மீது பதியப்பட்டுள்ளது. அவரை விசா ரித்த பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வோம் என்கிறார் அவர். தற்போதைக்கு இந்த வழக்கு விடாப் பிடியாக இருக்கும் இடமருகுவுக்கும் கோபத்தில் இருக்கும் தேவாலயத்துக்கும் நடுவில் உள்ளது. நாம் மதச்சார்பின்மையை கடைப் பிடிப்பவர்கள் என்ற உறுதியுடன் இப்போதும் இருக்கிறோம்.
அனுராதா பிரீதம் (டெல்லி),
என். அசோகன் (சென்னை) உதவியுடன், சணல் இடமருகு, தலைவர், இந்திய பகுத்தறிவு கழகம்
மகாராஷ்டிர கிறிஸ்துவக் கழக அமைப் பின் தலைவரும் வைல் பார்லே தேவால யத்தின் பாதிரியாரும், நீர்வடியும் சிலுவையை அற்புதம் என்று தாங்கள் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?
நீர் வடியும் சிலுவையை ஒரு அற்புத மாக்கும் பிரச்சாரத் திட்டம் உறுதியாக இருந்தது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அதை எப்படி அவர்கள் காண்பித்தார்கள் என்பதைப் பார்க்க யு டியூபில் போய் பாருங்கள். பணம் சம்பாதிக்கவே அந்நிகழ்வை உருவாக்கினார்கள் என்று ஏன் நீங்கள் குற்றம்சாட்டினீர்கள்?
நீர் வடியும் சிலுவையை ஒரு அற்புத மாக்கும் பிரச்சாரத் திட்டம் உறுதியாக இருந்தது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அதை எப்படி அவர்கள் காண்பித்தார்கள் என்பதைப் பார்க்க யு டியூபில் போய் பாருங்கள். பணம் சம்பாதிக்கவே அந்நிகழ்வை உருவாக்கினார்கள் என்று ஏன் நீங்கள் குற்றம்சாட்டினீர்கள்?
நான் அந்த தேவாலயத்துக்குப் போன போது சிலுவையில் இருந்து வடிந்த நீரை புனித நீராக விநியோகித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தேன்.
திருச்சபை அதை அற்புத நிகழ்வாக அறிவிக்கவில்லை என்று பேராயர் கூறுகிறாரே?
முதலில் அற்புதம் என்றுதான் பிரச்சாரம் செய்தனர். தற்போது அந்தப் பேராயர் வேறொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரிகிறது. உங்கள் மீது கொடுக்கப்பட்ட போலீஸ் புகார்கள் பற்றி?
அவர்கள் என்னை வேட்டையாட முயன் றனர். நான் கிறிஸ்துவர்களின் மத உணர்வு களைப் புண்படுத்துமாறு எதையும் கூற வில்லை. அவர்கள் சிலுவை அற்புதத்திற்கு வாட்டிகனின் அங்கீகாரத்தை வாங்க பரபரப்பைக் கிளப்பினார்கள். தற்போது அவர்களது முயற்சிகள் வீணாகிவிட்டன. உங்களை மன்னிப்பு கோர கூறி யுள்ளார்களே?
மன்னிப்பு கோருவது பற்றி பேச்சே இல்லை. பைபிளில் ஏசு சொன்னதை குறிப் பிடவே விரும்புகிறேன். தந்தையே அவர் களை மன்னியும். அவர்களுக்கு தாங்கள் செய்வது இன்னதென்று தெரியவில்லை.
நன்றி: தி சண்டே இந்தியன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இந்தி எதிர்ப்புப் போரில் மகளிர் பங்கு
- ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பா.ஜ.கட்சியா நாட்டைக் காப்பாற்றப் போகிறது?
- சூன் 6: வெள்ளிப் பெயர்ச்சியா? பூமிப் பெயர்ச்சியா?
- மதிப்பெண் மாணவன் திறமையின் சரியான அளவுகோலா?
- தமிழ்த் தொண்டாற்றிய புதுச்சேரித் தமிழர் ஞானு தியாகு திருக்குறளை பிரெஞ்சு மொழியில் முதலில் மொழி பெயர்த்தவர்
No comments:
Post a Comment