இணைந்து நின்று ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்துவோம்
திமுக தலைவர் கலைஞர் சூளுரை
சென்னை, ஜூன் 23- இரட்டைக் குழல் துப் பாக்கியாக திராவிடர் கழகமும், தி.மு.க.வும் இருக்கும். நாம் ஒன்று பட்டு நின்று ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்து வோம் என்றார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.
சென்னை புரசை வாக்கம் தானா தெரு வில் நேற்று (22.6.2012) மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
சென்னை புரசை வாக்கம் தானா தெரு வில் நேற்று (22.6.2012) மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
நாம் அன்றைக்கு இலங்கையிலே உள்ள தமிழர் களைக் காப் பாற்ற இரண்டு முறை ஆட்சியை இழந்திருக் கிறோம். திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் இரண்டு முறை மத்திய அரசு கலைத்தது. ஒரு முறை அமைதிப்படை, இலங் கையிலிருந்த தமிழர் களையெல்லாம் வேட் டையாடி, தமிழ்நாட் டிற்கு திரும்பி வந்த போது, அவர்களை வரவேற்க முதலமைச் சர் என்ற முறையில் நான் செல்ல வேண்டும், என்று மத்திய அரசு சொன்னபோது, நான் முடியாது, என்னு டைய தமிழர்களையெல்லாம் வேட்டையாடி வரு கின்ற அந்தப் படையை நான் வரவேற்க மாட் டேன் என்று அன்றைக் குச் சொன்ன கருணாநிதி தான் இன்றைக்கும் சொல்கிறேன்.
அமைதிப்படையும், கழகமும்
அமைதிப்படை அன்றைக்கு எங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. காரணம், அது அமளிப் படையாக இருந்த காரணத்தால். அப்படிப் பட்ட சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் அன்றைக்கு நடைபெற்ற வித்தியாச மான சில போர்களால், வித்தியாசம் போர்க ளிலே மாத்திரமல்ல - போரை நடத்தியவர் களுடைய மனதிலே ஏற் பட்ட காரணத்தால் - அதிலே பெரும் வெற் றியைப் பெற முடிய வில்லை. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு எவ்வளவு பெரிய சோர்வு, எவ்வளவு சோ கம் என்பதை நீங்க ளெல்லாம் அறிவீர்கள். அதற்குப் பிறகு திரா விட முன்னேற்றக் கழ கம் வீழ்ந்து விட்ட இலங்கைத் தமிழர் களை, ஈழத் தமிழர் களை கைத்தாங்கலாக வாவது எழுப்பி நிற்க வைப்போம். அவர் களுக்கு தண்ணீர் தெளித்தாவது அவர் களுடைய மூச்சை வெளியே வரவைப் போம் என்ற அந்த எண்ணத்தோடுதான் டெசோ ஏற்கெனவே நானும், நண்பர் நெடு மாறனும், நம்முடைய பேராசிரியரும், தமிழர் தலைவர் வீரமணியும், வைகோவும், இவர் களெல்லாம் சேர்ந்து அன்றைக்கு உருவாக்கிய டெசோ - அதை இப் பொழுது மீண்டும் உரு வாக்குகிறோம். உருவாக்கி; அதனுடைய மாநாடு விழுப்புரத்திலே தம்பி பொன்முடியினுடைய நிர்வாகத்தில் நடை பெறுகின்ற மாநாட்டில் அது தொடங்கப்பட விருக்கிறது.
ஆகஸ்டு 5 ஆம் தேதி அந்தப் பணி ஒரு பக்கம்; இந்தப் பணி இன் னொரு பக்கம்; இத் தனை பணிகளையும் நாம், திறமையாகச் செய்து முடிக்க வேண்டும். அப் படி முடிப்பதற்கு எங் களை மாத்திரம் நாங்கள் நம்பவில்லை. உங்களை யெல்லாம் நம்பித்தான் இந்தப் பணிகளை ஏற்றுக் கொண் டிருக்கிறோம். இந்தப் பணிகளிலே நாம் வெற்றி பெறுவோமேயானால், திராவிட இயக்கத்தினுடைய நோக்கம் நிறை வேறும். திராவிட இயக்கத்தினுடைய நோக்கம் நிறைவேறுமென்றால், என்ன நோக்கம்? நமக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. நமக்கென்று தனிக் கலை உண்டு. நமக்கென்று தனிப் பண்பாடு உண்டு. இவைகளை யெல்லாம் அழித்து ஒழிப்பதற்கு இங்கே வந்து புகுந்த ஒரு கூட்டம், நம்மை மனிதர்களாக அல்ல, மனிதனை மனிதன் தொடக் கூடாது என்ற அளவிற்கு மகாபாரதக் கதை களையெல்லாம் சொல்லி மிரட்டி வைத்திருந்த அந்த மாய்மாலத்தை வேரறுக்க, பெரியாரால், அண்ணா அவர்களால், சுயமரியாதை இயக்கத் தால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உணர்வை; என்றைக்கும் மாறாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்கிற நிலைதான்; முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமே வட சென்னையிலே கூடியிருக்கின்ற இந்தக் கூட்டம் என்பது எனக்குத் தெரியும். (பலத்த கை தட்டல்).
தி.மு.கழகமும் திராவிடர் கழகமும்
இரட்டைக் குழல் துப்பாக்கி
இரட்டைக் குழல் துப்பாக்கி
இந்த வடசென்னையிலே திரா விட முன்னேற்றக் கழகம் கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணா அவர் களால் தொடங்கி வைக்கப்பட்ட போது அண்ணா சொன்னார், நாம் திராவிடர் கழகத்திலே இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறோம், இரட் டைக் குழல் துப்பாக்கியாகிறோம் என்று சென்னார்.
அந்த இரட்டைக் குழல் துப்பாக்கி, இன்றைக்கும் நம்முடைய கைகளிலே இருக்கிறது. துப்பாக்கி என்றதும், இதோ வந்து விட்டார், கருணாநிதி வன்முறைக்கு என்று யாரும் எண்ணத் தேவை யில்லை. இவைகளெல்லாம் இலக் கியப் பேச்சுக்கள், கலை வழியிலே சொல்லப்படுகின்ற கருத்துக்கள். இதைப் புரிந்துக்கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். எனவே இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், இது இன்னும் பல போர்க் கருவிகளை தன்னகத்தே கொண்டு இலங்கை யிலே இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்த வேண் டும். இன்றைக்குப் பார்த்தால் இலங் கையிலே உள்ள தமிழர்கள் எப்படி யெல்லாம் வேட்டையாடப்படு கிறார்கள். தமிழன் யாரையும் தாழ்த்த மாட்டான். யாருக்கும் தாழவும் மாட்டான் என்ற அந்த உணர்வை உருவாக்கி (பலத்த கை தட்டல்) அவன் இலங்கையிலே இருந்தாலும், யாழ்ப் பாணத்திலே இருந்தாலும், அவன் ஈழத் தமிழனாக இருந் தாலும், இங்குள்ள தமிழனாக இருந்தாலும், அந்த தமிழன் யாருக்கும் தாழான், யாரை யும் தாழ்த்த மாட்டான் என்ற அந்த உணர்வோடு பாடு படுவோம். அதை இந்தக் கூட்டத்திலே ஒரு சபதமாக ஏற்றுக்கொள்வோம் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு கலைஞர்அவர்கள் உரையாற்றினார்.
டெசோ மாநாட்டுக்கு அழைப்பு
ஈழத் தமிழர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் அடிக்கடி அடுக்கடுக்காக ஏடுகளில் வருகின்றன. இவைகளை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்தப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நடைபெறுகின்ற டெசோ மாநாடு பயன்படும்.
மாநாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து கூட, அறிஞர்கள் வருகிறார்கள். பல அரசியல்வாதிகள் வருவார்கள். அவர்களையெல்லாம் நான் வருக வருக என்று வரவேற்கிறேன். அந்த மாநாட்டை மிகச் சிறப்பாக, எழுச்சியோடு நடத்த நீங்களெல் லாம் ஒன்று திரள வேண்டும் என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். - கலைஞர்
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பிரணாப் 26ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்
- ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- குடியரசுத் தலைவர் தேர்தல் பிரணாப் முகர்ஜி 28-ந் தேதி மனு தாக்கல்!
- மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு
- கலைஞர் தலைமையில் தி.மு.க. செயற்குழு கூடியது
- வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம்
- இந்திய அரசை அலட்சியப்படுத்தும் இலங்கை அரசு: கலைஞர்
No comments:
Post a Comment