Saturday, June 23, 2012

இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல்!


இந்துத்துவவாதி இந்தியாவின் பிரதமரா? ஆர்.எஸ்.எஸ். பாம்பு நஞ்சு கக்குகிறது


புதுடில்லி, ஜூன் 21 - ஓர் இந்துத்துவவாதி இந்தியா வின் பிரதமராக வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் கூறியுள்ளார். இது  இந்திய அரச மைப்புச் சட்டத்தின் மதச் சார் பின்மைக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. லத்தூரில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசும் போது, மோகன் பகத், தேசிய ஜன நாயகக் கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். இது அரசியல் சந்தர்ப்ப வாதத்தையே காட்டுகிறது. தனது வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இது போல அறிவித்திருக்கிறார் என்று கூறினார்.
இந்து கோட்பாட்டுக்கு ஆதர வாக இருக்கும் ஒருவர் ஏன் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அக்கூட்டத்தில் மோகன்பகத் கேட்டுள்ளார்.
மோகன்பகத்தின் பேச்சைத் தொடர்ந்து அய்க்கிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி, ஒரு தீவிர இந்துத்துவ வாதியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திக் காட்டுவது எங்கள் கட்சிக்கு ஏற்புடைய தல்ல. எங்கள் மாநில அரசு நிலைக்குமா அல்லது நமது கூட்டணி நிலைக்குமா என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று கூறியுள்ளார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு குஜராத் கலவரங்களே காரணம் என்று திவாரி குற்றம் சாட்டும் நிலையில், அவரது பேச்சு பா.ஜ.க. அய்க்கிய ஜனதா தளக் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி ஆட்டம் கண்டுள்ள தாக தெரிகிறது.
இரு பக்கங்களிலும் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப் பட்ட போதிலும், இரு கட்சிகளுக் கிடையேயான உறவு பதற்றம் நிறைந் ததாகவே இருக்கிறது.
இந்தக் கருத்து வேறுபாடே தேவையற்றது. யார் மதச்சார்புடை யவர் - யார் மதச்சார்பற்றவர் என்று ஆணையிடும் உரிமை எவருக்கும் இல்லை. மக்கள் தங்களுக்கென்று தனி கருத்துகளைக் கொண்டுள் ளனர் என்று பா.ஜ.க. மாநிலங் களவை உறுப்பினர் பல்பீர் பூஞ்ச் கூறினார்.
மோகன்பகத்தின் பேச்சை மென் மையானதாக ஆக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரான ராம் மாதவ், இந்துத்துவக் கோட்பாட்டை மதச்சார்பின்மைக்கு எதிரானதாகக் காட்டுவது சரியானது அல்ல என்ப துடன் குறுகிய நோக்கம் கொண்டது மாகும். இந்துத்துவாதான் மதச் சார்பின்மைக்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு என்று கூறி யுள்ளார்! ஆனால் மாதவின் பேச்சு பகத்தின் பேச்சை விடக் கடுமை யானதாக இருக்கிறது. இந்துத்துவா தான் மதச்சார்பின்மைக்கு உண்மை யான எடுத்துக்காட்டாம்! எப்படியி ருக்கிறது அவரது கூற்று!
மொத்தத்தில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத் துவக் கோட்பாட்டை முன்வைத்தே பா.ஜ.க. போட்டியிடப்போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. ஆனால் இதற்குத் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எவ்வாறு உடன்படப் போகின்றனவா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...