Sunday, June 17, 2012

சூன் 6: வெள்ளிப் பெயர்ச்சியா? பூமிப் பெயர்ச்சியா?


தாலமியின் காலம் வரை சொல்லப்பட்டு வந்த புவி மையக் கோட்பாடு நிக்கோலஸ் கோபர் நிகஸ் அவர்களால் உடைத்தெறியப்பட்டு கதிரவ மய்யக் கோட்பாடு அறுதியிட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது.
மதவாதிகளால் பல வானியல் மேதைகள் கொல்லப்பட்டு, இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதே மதவாதிகளின் வாரிசுப் பிரதிநிதிகள் மன்னிப்புக் கேட்டு கதிரவன்தான் மய்யம் என ஒப்புக் கொள்ள, அறிவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது.
கதிரவக் குடும்பத்தில் 1930-இல் சேர்க்கப்பட்ட 9ஆவது கோளான தூரியன் என்ற புளூட்டோ தற்போது நீக்கப்பட்டு விட்டது. அப்படியே இருந்தாலும் 9 கோள்களின் பெயர்ச்சியும், அல்லது தற்போது 8 கோள்களின் பெயர்ச்சியும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
ஆனால் பார்ப்பனீயத்தால் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என இரண்டு கோள்களின் பெயர்ச்சியை மட்டுமே (அதனதன் சுழற்சியை கண்டு கொள்வதில்லை) முன்னிலைப்படுத்தி மூடநம்பிக்கையை வளர்த்து வரிகட்டாத வருமானத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது.இந்த நிலையில்தான் சென்று சூன் 6 வெள்ளிப் பெயர்ச்சி என ஊளையிட்டது.
எல்லாக் கோள்களின் தன் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் நாம் வாழும் புவியின் தன் சுழற்சியும், பெயர்ச்சி யுமேதான் மய்ய அளவுகோலாக வரை யறுக்கப்படுகிறது. உதாரணம், புவி ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் சுழற்சியும் நொடிக்கு 11 கி.மீ. வேகத்தில் பெயர்ச்சியும் தான் எல்லாக் கோள் களுக்குமான கோட்பாட்டு வரையறை ஆகும். எல்லாக் கோள்களின் பெயர்ச்சியின் போதும் அதனதன் பின்புலக்காட்சி மாறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணமே புவியின் பெயர்ச்சிதான்.
வெள்ளிக்கோள் கதிரவனை 224 நாள்களில் (புவியின் பெயர்ச்சி கால அளவின்படி) சுற்றி வருகிறது. பூமி 100 முறை சூரியனை சுற்றி வருவதற்குள் வெள்ளி 162 முறை சுற்றி இருக்கும். ஆனால் வெள்ளியும், பூமியும் ஒரே நேர்க்கோட்டில், பின்புலத்தில் சூரியனை காணும் வாய்ப்பு நூற்றாண்டில் இரண்டு முறை அதுவும் தொடர்ந்து 8 ஆண்டு இடைவெளியில் நிகழ்வதற்கு காரணம், பூமி இடமிருந்து வலமாக பெயர்ச்சி அடையும்போது, வெள்ளி வலமிருந்து இடமாக பெயர்கிறது. இன்னொரு காரணம் வெள்ளியின் நீள்வட்டப் பாதை என்பது பூமியைப் போல் இல்லாமல் ஏறுமுகம், இறங்குமுகமாக குறுக்கு நீள்வட்டப் பாதையாக உள்ளதே காரணம்.
பூமிப்பெயர்ச்சியால்தான் எல்லா காட்சி மாற்றங்களும் நிகழ்கின்றன என்பதை உணர வைத்து விட்டால்  உத்தராயணம், தட்சிணாயணம் ஒழிந்துவிடும். அறிவன் பெயர்ச்சியை அறிந்து கொண்டால் புதன், வெள்ளி உள்புறக்கோள்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
செவ்வாய்ப் பெயர்ச்சியை அறிந்து கொண்டால் அங்காரகன் அழிந்து விடும். செவ்வாய்தோஷம் அழிந்துவிடும். பூமிப்பெயர்ச்சி என்பதை முதன்மைப்படுத்தி விட்டால், பூமி நிலையாக இருப்பதைப் போலவும் சூரியன் மற்றும் பிறகோள்கள் பூமியைச் சுற்றி வருவதைப் போலவும் சொல்லி எழுதும் ஜாதகம் பகுத்தறிவு வேள்வியில் வேகமாக வேக வைக்கப்பட்டு விடும்.
பூமி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்துக்கு பெயர்வதால்தான் மற்ற கோள்களின் பின்புலம் மாறித் தெரிகிறது.
விண்மப் பெயர்ச்சி (யுரேனஸ்) சேண்மப் பெயர்ச்சி (நெப்டியூன்) எல்லாம் தெரிந்து கொண்டால் சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சியை மட்டுமே பெரிதாக்கி பணம் பறிக்கும் பார்ப்பனியத்தை புறக்கணிக்க முடியும். சூரியனைச் சுற்றும் எட்டுக்கோள்களில் வெள்ளிப் பெயர்ச்சியும், விண்மப் பெயர்ச்சியும் வலமிருந்து இடமாக எதிர்மறைப் பெயர்ச்சியாகும்.
டிசம்பர் 22 முதல் சூன் 21 வரை ஆறு மாத காலத்தில் பூமி சூரியனை நீள் வட்டத்தில் அரைச்சுற்று சுற்றி முடிக்கும்வரை வெள்ளியை மாலை நேரத்திலும், சூன் 21 முதல் டிசம்பர் 21 வரை ஆறு மாத காலத்தில் பூமி சூரியனுக்கு அடுத்த பக்கம் நீள்வட்டத்தில் சுற்றி முடிக்கும்வரை வெள்ளியை அதிகாலை நேரத்திலும் (விடிவெள்ளி) காணலாம்.
இந்தக் காட்சி மாற்றத்திற்கு பூமிப்பெயர்ச்சியும் (இடமிருந்து வலம்) வலமிருந்து இடமாக சூரியனைச் சுற்றும் வெள்ளிப் பெயர்ச்சியுமே காரணம். உண்மை இப்படியிருக்க வெள்ளிப்பெயர்ச்சி என்றும், வெள்ளி சூரியனை கடக்கிறது என்றும், வெள்ளி கிரகணம் என்றும், வெள்ளி இடைநகர்வு என்றும் குறிக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் பூமியின் தன்சுழற்சியும், பெயர்ச்சியுமே காரணமாகும். புவியைப் புரிவோம்! புவியைப் போற்றுவோம்! புவியைப் பாடுவோம்!
"உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ஏறிவிலா தார் "       _ குறள்
- செந்தமிழ் சே. குஹோ


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...