Saturday, May 5, 2012

மனித உரிமைகள்பற்றி பி.ஜே.பி. பேசலாமா?


பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன; எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்த ஒரு மனித உரிமை மீறலையும் ஏற்பவர்கள் அல்லர் நாம். கண்டிப்பாக மனித உரிமை மீறலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டே தீர வேண்டும்.
அதே நேரத்தில் இத்தகைய கோரிக்கையை முன் வைப்பவர்கள் யார் என்பது முக்கிய மல்லவா? பாரதிய ஜனதா கட்சியோ, அதனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எவரோ, மனித உரிமைகள் பற்றியெல்லாம் பேசுவதற்கு தகுதி உடையவர்கள்தானா என்கிற கேள்வி எழுகிறதே! அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தவர்கள் - இடித்ததற்குக் காரணமாக இருந்தவர்கள், இன்னொரு நாட்டில் இந்துக்களின் மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச் சாற்றை முன் வைப்பதை விட கேலிக் கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியுமா?
அதுவும் பாபர் மசூதி இடிப்புக் குற்ற வாளிகள் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கும் அதே முரளி மனோகர் ஜோஷியா இந்தக் குற்றச் சாற்றை முன் வைக்க முயலுவது - ஆசைப்படுவது?
சிறுபான்மை மக்கள் குடி உரிமையுமின்றி இந்தியாவில் வாழ முன்வரவேண்டும்; இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிட வேண்டும்; இந்துக் கடவுள்களான ராமன், கிருஷ்ணனை வணங்கவேண்டும் என்று கூறுபவர்கள் - பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் கூறுவதற்கு அருகதை உடையவர்கள் அல்லவே!
சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெள்ளை அரசாங்கத்திடம் பதவிகளையும், உத்தி யோகங்களையும் பார்ப்பனர்களே பெற்றுக் கொண்ட நிலையில், இந்தியாவில் உள்ள மற்ற மதக்காரர்களும், இனத்தவரும் தங்களுக்கும் கல்வி, உத்தியோகம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரவும் அதற்கான அமைப்புகளை உருவாக்கவுமான ஒரு நிர்ப்பந்தம் - சூழ்நிலை ஏற்பட்டது என்பதுதானே உண்மை!
இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தான் பிரிவினைக்கே கூட இந்திய நாட்டுப் பார்ப்பனர்களின் அடாவடித்தனமும், ஆதிக்க உணர்வும்தானே அடிப்படை மூல காரணங்கள் - மறுக்க முடியுமா?
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கூறப்படும் ஒரு நிலையில் அசல் இந்துத்துவ வாதியான நரேந்திர மோடி என்பார் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் என்ற முறையில்  அரசு பயங்கரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் களைக் கொன்று குவிக்கவில்லையா? இஸ்லாமியர்களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் தீ வைத்துக் கொளுத்திப் பசியாற வில்லையா?
இந்த நிலையில், இந்துக்கள் வெளிநாடு களில் தாக்கப்படுவார்களேயானால் அவற்றிற் கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டிய வர்கள் பி.ஜே.பி. உள்ளிட்ட சங் பரிவாரங் களான இந்துத்துவவாதிகளே ஆவர்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...