Wednesday, April 25, 2012

சூத்திரர்கள்!


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).
அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.
இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது  என்னே கொடுமை!
அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.
பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!
பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?
இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!
- மயிலாடன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...