குங்குமம் இதழுக்கு காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி பேட்டி ஒன்றை அளித்தார்.
கேள்வி: சமீபகாலமாக மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள் - யார்மீது தவறு?
ஜெயேந்திரர்: மனுஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் - இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா குறுக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால் ஜனங்க, சாமியார்கள் இரு பேர்களுக்குமே ஆபத்து வருது. ஆனா ஜனங்க தப்பிச்சி வேறொரு சாமியார்கிட்ட போயிடுறாங்க. இவர்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமி யார்கள்தான் பொதுஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கி இருக்கவேண்டும். (குங்குமம், 27.3.1998).
ஜெயேந்திரர் சொன்னது அவருக்கே பலித் ததுதான் வேடிக்கை. இன்னொருபடியும் தாண்டி, கொலை வழக்கில் சிக்கிக் கொண்டுவிட்டார். இந்தியக் குற்றவியல் சட்டம் 302, 120பி, 201 (கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப் பித்தல், கொலை) என்னும் பிரிவுகளில் ஜெயேந் திரர் மட்டுமல்ல, அவரின் சீடரான இன்னொரு சங்கராச்சாரியாரான விஜயேந்திர சரஸ்வதியும் இந்த வழக்கில் சிக்கி, இரு ஜெகத்குருக்களும் சிறைக்குச் செல்லும் கேவலமான நிலைக்கு ஆளானார்கள்.
இரவோடு இரவாக தலைமறைவான உத்தம(?) புத்திரரும் இவர்தான் (23.8.1987). ஏன் தலைமறைவானார்? பெரியவருக்கும், இவருக் கும் என்ன லடாய்? கிண்டினால் இவர்களின் வண்டவாளங்கள் எல்லாம் பொலபொலவென்று கொட்ட ஆரம்பிக்கும்.
காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் ஜெயேந் திரர் (12.11.2004).
ஏழு ஆண்டுகள் 5 மாதங்கள் ஓடிவிட்டன. வழக்குக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் தீர்ப்பு இதுவரை அளிக்கப்படாத நிலை!
முதற்கட்டமாக விசாரணை தமிழ்நாட்டுக் குள் நடக்கக்கூடாது என்றனர். அதற்காக உச்ச நீதிமன்றம்வரை சென்றனர். புதுச்சேரியில் நடத்திட அனுமதிக்கப்பட்டது.
நீதிபதியிடம் பேரம் பேசினார் என்ற சிக்கலில் அடுத்து மாட்டினார்.
இதற்கிடையே சாட்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், வழக்கின் போக்கு என்ன ஆகுமோ என்று பொது நிலையில் உள்ளவர்களுக்குச் சந்தேகங் கள் எழுந்தன.
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனை வியே பிறழ் சாட்சியான அவலமும் ஏற்பட்டது.
அந்த அம்மையாரே இப்பொழுது புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தான் அச்சுறுத்தப்பட்டதால் தவறான சாட்சி சொல்ல நேர்ந்துவிட்டது; மறுபடியும் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தன்னை அச்சுறுத்தியதாக சங்கரராமன் மனைவி கூறியுள்ளாரே - அது குறித்து விசாரிப்பது அவசியமான ஒன்றாகும்.
அச்சுறுத்தியவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? என்பது விசாரிக்கப்படவேண்டிய ஒன்றே.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதற்கேற்ப இந்த வழக்கினை விரைந்து முடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் இதற்கு முன்பு ஒருமுறை ஆர்ப்பாட்டம் நடத் தியதுண்டு என்பதை நினைவூட்டி, முக்கியத் துவம் வாய்ந்த இந்த வழக்கில் நல்லதோர் தீர்ப்பினைப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்து அமைப்புகள் விளம்பரம் தேடாதவைகளாம்!
- மூடநம்பிக்கை வியாபாரிகள்மீது தேவை நடவடிக்கை
- அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில்...
- தமிழா, தமிழனாக இரு!
- வென்றார் சூகி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment