நீதிக்கட்சிக் காலத்தில் சமூக நீதி ஆணைகள்
உள்துறை அமைச்சகம் சென்னை மாகாணம்
உள்துறை அமைச்சகம் சென்னை மாகாணம்
1. 1919ஆம் ஆண்டு பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை அரசுக்கு கொடுத்தார்.
நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர் களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று இயங்கி வரும் ஸ்தாபனங்களில் முழு உரிமைகள் கிடைக்க வேண்டி ஆளுநர் அவர்கள் சரியான நட வடிக்கைகளை உடனே மேற் கொள்ள வேண்டும்
அப்போதிருந்த உள்துறை உறுப்பினர் (அமைச்சர்) சர் சைக்ஸ் தோதுண்டர் எழுதியது, பக்கம் 4-7 அரசு உத்தரவு 23லும் (தேதி 8.1.1920) காணப்படுகிறது.
அப்போது அவர் எழுதியது வருமாறு:
ஜாதியை உடனே ஒழித்துவிட முடியாது. மக்களின் அபிப்பிராயத் துக்கு எதிராக நாம் முயற்சி செய்தால் நல்லதை விட கெடுதலே அதிகம் விளையும். சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஜாதியில் உயர்வு, தாழ்வுகளைக் கடைப்பிடித்துவரும் கல்வி நிலை யங்களுக்கு அரசாங்கம் செய்துவரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்லப்பட்டு வருவதை அரசு கடைப்பிடித்தால் எல்லாப் பள்ளிக் கூடங்களும் அதை நடத்துபவர்களால் இழுத்து மூடப்பட்டு விடும். இதனால் சமு தாயத்தில், பெரும்பான்மையானவர் களுக்கு உள்ள கல்வி வாய்ப்பும் வீணாக்கப்பட்டு விடும் என்பதால் அரசாங்கம் இதிலெல்லாம் நன்றாக சிந்தித்துதான் செயல்பட முடியும். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவின ருக்கு நன்மை செய்யப் போக, அது இன்னொரு பிரிவினருக்கு கெடுதலாக முடிந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் செய்யும் நன்மைகள் பெரு வாரியான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண் டும். தீர்மானம் நிறைவேறவில்லை.
2. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும், பொதுச் சத்திரங் களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நகராட்சி களும், பஞ்சாயத்துகளும் வலுக் கட்டாயமாக இதை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை எம்.சி. ராஜா அவர்கள் அதே ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தைப்பற்றி சட்ட மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது என்பது சட்டமன்றக் குழுவின் நடவடிக்கைப் புத்தகத்தின் 152-_161ஆம் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது. இந்த தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது, சர் சார்லஸ் தோதுண்டர் குறிப்பிட்டதாவது: கிணறுகளையும், சத்திரங்களையும், பொது சாலைகளையும் உபயோக்கப் படுத்தக் கூடாது என்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் எதுவும் சட்டத்தால் ஏற்பட்டதல்ல. மேலும் இந்தத் தடைகளை நீக்குவது என்பது சமுதாய சீர்திருத்த வாதிகளால்தான் முடியுமேயொழிய அரசாங்கம் அதில் தலையிட்டுத் தடைகளை நீக்கச் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை தீர்மான விவாதம் முடிவடையும் நேரத்தில் லார்டு வெல்லிங்டன் குறிப்பிட்டதாவது:
ஜாதிகள் அதன் தீமைகள் ஒழிக் கப்பட்டாலொழிய ஒடுக்கப்பட்ட வர்களுக்கு இழைக்கப்பட்டு வரும். அநீதிகள் குறைவதற்கு வழியே இல்லை. அரசாங்கம் சமதர்ம சமு தாயம் ஏற்பட உதவி, செய்ய லாமேயொழிய மத விஷயங்களில் தலையிட முடியாது என்றார்.
3. 1921ஆம்ஆண்டு WPA சவுந் தரபாண்டியன் (நாடார்) அவர்கள் ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சாலைகள், சத்திரங்கள், கிணறுகள், பள்ளிக் கூடங்கள் போன்ற இவைகளில் நுழையக் கூடாது என்று தாழ்த் தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் கள் போன்றவர்களைத் தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை சட்ட வடிவமாக ஆக்க வேண்டும் என்பதுதான். இந்தத் தீர்மானத்தைப்பற்றி பக்கம் 1, அரசு உத்தரவு 263, உள்ளூர் மற்றும் நகராட்சி புத்தகம் தேதி 29.1.1923 ஆம் ஆண்டு காணப்படுகிறது. சட்டக் குழுவின் நடவடிக்கைகள் என்ற புத்தகத்தின் 333 339 பக்கத்தில் தீர்மானத்தைப்பற்றி நடந்த விவாதமும் காணப்படுகிறது. அப்போதிருந்த முதலமைச்சர் சொல்லிய பதில் பககம் 339இல் காணப்படுவதைக் கீழே தருகிறோம்:
தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்கள் கிணறுகள், கல்விக் கூடங்கள், சாலைகள் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் மூலம் தடுக்கவில்லை. உபயோகப்படுத்தக் கூடாது என்று அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டத் திலேயே இடம் இருக்கிறது. அதனால் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை. உண்மையான தடைகள் சமு தாயத்தில் இருந்துவரும் ஜாதிகள் தான்.
அவைகளை உடைத்தெறிய சமுதாயச் சீர்திருத்தவாதிகள் முயல வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உண்டாக்கப் புதிய சட்டம் தேவை என்றால் அதைச் செய்ய உறுதி கூறுகிறேன் என்று அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த எந்த மசோதாவையும் கொண்டு வரலாம் என்று எனது உறுப்பினர்களுக்கு உறுதி கூறுகிறேன்.
மேற்கண்ட தீர்மானத்தில் குறிக் கப்பட்டுள்ள - தெருக்களிலும், சாலை களிலும், தாழ்த்தப்பட்ட, வஞ்சிக் கப்பட்ட மக்கள் போகக் கூடா தென்று சட்டமூலம் தடுக்கப்பட வில்லை. மலபார் பகுதியில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து போக அனுமதிப்பதில்லை என்பது தெரிந்ததுதான். அரசாங்கம் சட்டமியற்றுவதால் மட்டும் இதை நிறைவேற்றிவிட முடியாது. அர சாங்கம் இதில் தலையிட்டு காரி யங்கள் செய்வதால் தாழ்த்தப்பட்ட வர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஜாதி இந்துக்களை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆரம்பித்தால் அமைதி கெட்டு விடும். அக்கிரகாரத் தெருக்கள், ஜாதி இந்துக்கள் உள்ள தெருக்கள் சில தனிப்பட்டவர்களின் சொந்தச் சொத்தாகும். இதில் அரசு தலையிட்டு ஆவன செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை.
பொதுக் குளங்களை தாழ்த்தப் பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர் களும் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாக எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாக அரசின் இலாகாவுக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் எடுக்கும் கிணறுகளைப் பொறுத்த மட்டில் ஜாதி இந்துக்களுக்கு தனிக் கிணறுகளும், தாழ்த்தப்பட்டவர் களுக்கு தனிக் கிணறுகளும் ஏற்படுத்தலாம் என்று அரசு எண்ணுகிறது. பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதை மற்ற ஜாதி இந்துக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
6. பொது இடங்கள் nதர்ம சத்திரங்களைத் தவிர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்கள். இவைகளில் அடங்கும். சத்திரங்களில் குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கு மட்டும்தான் பயனடையுமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்களே யொழிய அதில் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் தான் அவை எழுதப்பட்டிருக்கிறது. அரசாங்கம் இதில் எதுவும் செய்ய முடியவில்லை.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர், சர்க்கஸ் போன்றவை களில் அதன் உரிமையாளர்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர், சர்க்கஸ் போன்றவை களில் அதன் உரிமையாளர்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
7. வர்த்தகங்கள் நடைபெறும் இடங்களான பொதுக் கட்டடங்களி லும், அலுவலகங்களிலும் எல்லா இன மக்களும் அனுமதிக்கப்படுகையில் அதற்காக எந்த அறிவிப்பும் தேவை இல்லை.
8. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையெல்லாம் அரசாங்கத்தின் சட்ட இலாக்கா சீர்ப்படுத்தி நல்ல நிலைமைக்கு கொண்டுவரும். ஆகையால் இந்த கோப்புகளை வி-1, நீ-2 என்ற பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.
9. வி--1 என்கிற இலாக்காவின் செய லாளருக்கு அனுப்பப்பட்டது. அவ ருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம்.
1. மேற்படி தீர்மானத்துக்கு சட்ட மன்றத்தில் அந்த இலாகா செய லாளர் பதில் சொல்லப் போகிறாரா என்பதும்,
2. அப்படி அவர் பதில் சொல்லத் தயாராய் இருந்தால் இந்த பிரச் சினைபற்றி மேற்கொண்டு ஏதேனும் தகவல்கள் சேகரிக்க வேண்டுமா என்பதும்,
3. சென்னை மாகாண அமைச் சரவையில் இந்தத் தாழ்த்தப்பட்ட வர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் நிலை என்ன என் பதை அவர் (செயலாளர்), தெரிந்து கொள்ள விரும்புகிறாரா அல்லது ஆளுநர், அமைச்சர்கள் கூட்டத்தில் இதை விவாதிக்க விரும்புகிறாரா என்பதும், மேலும் அவருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
கையொப்பம்
9.8.1924
சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா
(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)
9.8.1924
சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா
(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)
அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.
ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோ கப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ள வைகள் - - சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.
உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.
1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.
திரு. ஆர். சீனிவாசன் (இரட்டை மலை)
1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.
(ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,
தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந் துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,
சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அர சாங்கத்தில் உள்ள எல்லா இலாக் காக்களுக்கும் அனுப்பப்பட்டது.
(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)
றி.லி. மூர்,
அரசாங்கச் செயலாளர்.
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,
நகராட்சிகள்,
கார்ப்பரேஷன், சென்னை
பஞ்சாயத்து, நகராட்சி அதி காரிகள்,
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக் காக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்.
இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது.
சட்டக்குழு அலுவலகம்
25.6.24
தீர்மானம்
திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)
உள்துறை அரசாங்க அலுவலகம்.
றி.லி. மூர்,
அரசாங்கச் செயலாளர்.
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,
நகராட்சிகள்,
கார்ப்பரேஷன், சென்னை
பஞ்சாயத்து, நகராட்சி அதி காரிகள்,
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக் காக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்.
இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது.
சட்டக்குழு அலுவலகம்
25.6.24
தீர்மானம்
திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)
உள்துறை அரசாங்க அலுவலகம்.
9. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.
ணீ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,
தீ) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங் களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment