இன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நம் அறிவு ஆசானுக்காகவும் அவர் கண்ட லட்சிய இயக்கமாம் திராவிடர் கழகத்திற்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைத்து ஒளிதந்து மறைந்தும் மறையாமல் வாழும் எங்கள் தியாகத்தாய்!
பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணினம் எப்படி என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ஒப்புவமை இல்லாத உயர் லட்சியச் சின்னம். தன்னை - தன் உழைப்பை, சேவையை மக்களுக்கு ஒப்படைத்ததல்லாமல், தனது சொந்த சொத்துக்களையும் பொது நலனுக்கே அர்ப்பணித்த அருங்கொடையாளர்!
மான அவமானம் பார்க்காது, வசைப் புயலையும் கடந்து வாகை சூடி நின்ற வையத்துப் பெண் சிங்கம் நம் அன்னையார்!
அவரது தலைமையால் திராவிடர் கழகம் திசை தடுமாறாமல், திக்கெட்டும் புகழ் பரப்பிடும் இயக்கமாக அய்யாவுக்குப் பின் அகிலத்திற்கு அடையாளம் காட்டப்பட்டது!
இராவண லீலா நடத்திய இந்தியத் துணைக் கண்டத்தையே இப்பக்கம் திரும்ப வைத்த இணையற்ற தலைவர் நம் அன்னையார்.
நெருக்கடி கால சுனாமியைச் சந்தித்தவர்
நெருக்கடி கால சுனாமியைத் தாண்டி இயக்கத்தைக் கட்டுக் கோப்பு சிதறாமல் காத்து பெரியார் பணி தொடர அன்னையாரின் அருந்திறன், அணுகுமுறை மாற்றாரும் வியந்து போற்றும் அளவுக்கு ஆதரவற்ற கைவிடப்பட்ட குழந்தைகளின் புது வாழ்வில் பொலிவுடன் வாழ்கிறார்!
அவர்தம் தொண்டறம் நம்மை மேலும் உரம் பெற்றவர்களாக்கி, அய்யா பணி முடிக்க வழிகாட்டும் - வழி காட்டிக் கொண்டுமிருக்கிறது.
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழக மின்வெட்டுக்கு காரணம் என்ன? மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா
- இன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தொடக்கம்
- இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு
- சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: தி.மு.க.வுக்கு திராவிடர் கழகம் ஆதரவு
- மாற்றத்திற்குப் பதில் ஏமாற்றம்: ஜி.கே. வாசன்
No comments:
Post a Comment