Friday, March 9, 2012

திக்விஜய்சிங் சொல்வதைக் கவனியுங்கள்!


குஜராத் கலவரம் நடந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான திக்விஜய்சிங் அவர்கள் குறிப்பிட்டுள்ள, தெரிவித்துள்ள ஒரு கருத்து மிக முக்கியமானதாகும்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு குஜராத் ஒரு பரிசோதனைக் கூடமானது. இதே போன்ற ஒரு பரிசோதனைக்கூடமாக பெங்களூரும் ஆகி விட்டது. வெறுப்பைப் போதிக்கும் எந்தவொரு சித்தாந்தத்தையும் எதிர்ப்பதே நமது கொள்கை. இதே போன்ற சித்தாந்தத்தைத் தான் தேசியவாதம் என்ற போர்வையில் ஹிட்லரும் கடைப்பிடித்தார்.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளிலும் நீதித்துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஊடுருவியுள்ளனர். ஆர்.எஸ்.எஸினால் நடத்தும் பள்ளிகளில் அதன் சித்தாந்தத்தை மாணவர்கள் மீது திணிக்கின்றனர்.
சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் யு.பி.எஸ்.சி. பயிற்சி மய்யங்களை நடத்தி வரு கின்றனர். அவர்களுக்கு மத்திய தேர்வாணைய உறுப்பினர்களும் உதவுகின்றனர். இதுபோன்ற மய்யங்களில் இருந்து அய்.ஏ.எஸ்.களாகத் தேர்வு பெறுவோரின் எண்ணிக்கையை வைத்து இதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் - என்று மிகத் தெளிவாக, திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திணிக்கப்பட்டதானது ஒரு திட்டமிட்ட வகையில் நடைபெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.
இந்தியாவின் விமானப் படைத்தளபதியாக இருந்த விஷ்ணுபகவத் இதனை அப்பொழுதே அறுதியிட்டுக் கூறினார்.
80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிருவாகப் பதவிகளில் (நுஒநஉரவஎந ஞடிளவள) அரசுத் துறைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று விமானப் படைத் தளபதி என்ற மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவரே கூறினார் என்றால், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர் என்றால், அவர்கள் பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொண்டு இருப்பார்கள் என்பதை எளிதிற் புரிந்து கொள்ள லாமே!
அயோத்தியில் பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் திட்டமிட்டு இடித்துத் தரைமட்டமாக்கியபோது அங்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் டி.பி.ராய் என்பவர் ஆவார். பிற்காலத்தில் பிஜேபியில் சேர்க்கப்பட்டு, பிறகு மக்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டாரே!
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் என்று குஜராத் மாநில முதல் அமைச்சர் கேசுபாய் பட்டேல் (பி.ஜே.பி.) கூறவில்லையா? அது சரிதான் ஆர்.எஸ்.எஸ். என்பது அரசியல் கட்சியல்ல - சமுதாய அமைப்பு என்று அதற்குப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி சான்றிதழ் கொடுக்கவில்லையா?
இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொண்டால் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டில்லியில் தெரிவித்த கருத்துக்களின் உண்மையும் - ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் உள்ள சதி உணர்வும் பளிச் சென்று புரியும். மத்தியில் அதிகாரத்தை வைத்துள்ள காங்கிரசு கட்சி அரசுத் துறைகளிலும், இராணுவத் துறைகளிலும் புகுந்துள்ள சங்பரிவார்க்காரர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டாமா?
மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான புரோகித் என்பவர், இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி அல்லவா? இராணுவப் பள்ளியையே நடத்தியிருக்கிறாரே! இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி  மருந்து இவர்கள் மேற்கொண்ட குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதே!
வழக்கம்போல அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் மெத்தனப் போக்கால்தான் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளும், குஜராத் கலவரக்காரர் களும் சுதந்திரமாக வெளியில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பிரதமர் நான்தான் என்று மார் தட்டுகிறார்கள் என்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் அவர்களுக்குத் தெரி யாதா? எதையும் துணிச்சலாக அடித்துச் சொல்லும் இவர் போன்றவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, போதிய அழுத்தம் கொடுத்து குற்றவாளிகள்மீதுதான் தண்டனைக்கு வழி வகையை விரைந்து செய்யட்டும்!

1 comment:

Anonymous said...

//திக்விஜய்சிங் சொல்வதைக் கவனியுங்கள்//

why? he is a joker..

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...