Thursday, March 8, 2012

பெரியார் விருது பெற்றவர்களுக்கு தேசிய விருது


வாகை சூட வா அழகர் சாமியின் குதிரை திரைப்படங்களுக்கு தேசிய விருது அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 8- அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா உள்ளிட்ட தமிழப்படங்கள் 8 விருதுகளை பெற்றுள்ளன.

2011- ஆம் ஆண்டுக்கான 59- ஆவது தேசிய சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

பெரியார் விருது பெற்றவர்கள்

இதில், தமிழ் படங்கள் 8 விருதுகளைத் தட்டிச் சென்றன. அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது, சுசீந்திரன் இயக்கிய `அழகர்சாமியின் குதிரை'  படத்துக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் அப்பு குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.

தமிழ் மொழியில் சிறந்த படத்துக்கான விருது விமல், இனியா நடித்த `வாகை சூடவா' என்ற படத்துக்கு கிடைத்துள்ளது. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய இந்த படத்தை சற்குணம் இயக்கி இருக்கிறார்.
வாகை சூடவா இயக்குநர் சற்குணத்திற்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது.

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு கதை வசனம் எழுதிய பாஸ்கர் சக்திக்கும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது.

பெரியார் திரை சார்பில் பாராட்டப் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் கடந்த ஆண்டு தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த படம் மற்றும் இயக்குநருக்கு தங்கத்தாமரை விருதுடன் ரொக்கப்பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த நடிகர்-நடிகைக்கு வெள்ளித்தாமரை விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, விருதுக்கான போட்டியில் பங்கேற்ற படங்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்தது. வருகிற மே மாதம் 3- ஆம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்குகிறார்.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...