திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க் குற்றத் தீர்மானத்தை நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும் என்ற தலைப்பில் சென்னை விடுதலையில் 21.2.2012 அன்று நாம் தான் முதன்முதலில் விரிவான அறிக்கையாக எழுதியிருந்தோம்.
நமது அறிக்கையில், நமது அறிக்கையில், இனப்படுகொலைக் கும், வரலாறு காணாத வன்கொடுமைகளுக்கும், தமிழின அழிப்பும் செய்து இன்னமும் முள் வேலிகள் முற்றாக அகற்றப்படாது, அரசியல் தீர்வு காண்போம் என்பதை நீர் எழுத்துக் களாக்கி, ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டுள்ள சிங்கள ஹிட்லர் ராஜபக்சே அர சினைக் காப்பாற்ற இந்தியா முனையப் போகிறதா? இந்திய அரசு அதனை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காப்பாற்றும் வேலைகளில் ராஜதந்திர போர்வையைப் போர்த்திக் கொண்டு ஈடுபட்டுவிடக் கூடாது என்று இந்திய அரசை எச்சரித்திருந்தோம்.
பளிச்சென்று நியாயத்தின் பக்கம், நீதியின் பக்கம், மனித உரிமையின் பக்கம் நிற்க இந்தியா முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந் தோம்.
இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத் தின்மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக் கூடாது என்று கலைஞர் வலியுறுத்தியுள்ளார். கலைஞர் அவர்களின் அறிக்கை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்திய அரசே, இலங்கைக்கு எதிராக செயல்படுக! சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!
- திராவிடர் சங்கம் தோன்றிய நூற்றாண்டு (1912-2012)
- ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை: சிறையில் இருந்தாலும் ஆ.இராசா அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது
- பகுத்தறிவு, தன்மானம், இனமானம், பண்பாடு, சுயமரியாதையைக் கட்டிக் காப்போம்
- கூடங்குளம் பிரச்சினையில் இந்து முன்னணி மதக்கலவரத்தை உருவாக்கிடத் திட்டம்!
No comments:
Post a Comment