Thursday, March 22, 2012

தமிழர்களின் சிந்தனைக்கு... (1)


வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பற்றி திராவிடர் கழகப் பிரச்சாரப் பயணம் தமிழர்களின் சிந்தனைக்கு... (1)


கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால்  இலங்கை அரசின் கடற்படை சுட்டுக் கொல்லுகிறது; கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சில தகவல்கள் இங்கே. திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் 26.7.1997 அன்று தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாடு நடத்தப்பட்டது.
அம்மாநாட்டில் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர்களுக்குச் சொந்த மான கச்சத்தீவு மீண்டும் தமிழ்நாட்டுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் இந்திய - தமிழக அரசுகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவு தொடர்பாக வழக்கு ஒன்றினைத் தொடருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் (29.7.1997). ரிட் மனு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ஜெயசிம்மபாபு  அவர் களால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது. எதிர் மனுதாரர்களுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ரிட் மனு விவரம் வருமாறு:
அரசியல் சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள உரிமைகளுக்கேற்ப இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் பொதுநலம் கருதும் மனுவாக இந்த ரிட் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனுவில் எதிர் மனுதாரர் களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் செயலற்ற தன்மையால், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கமுடன் நீதி கேட்டு இந்த மனுவை நான் தாக்கல் செய்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கின்ற நிலையிலும் கூட அவர்கள் கொல்லப்படுவது, காயப்படுத் தப்படுவது, படகுகளும், வலைகளும் சேதப் படுத்துப்படுவது ஆகிய கொடுமைகளி லிருந்து மீனவர்கள் மீளும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்மனுதாரர் களுக்கு ஆணையிடக் கோரி உண்மையான, நியாயமான அக்கறையுடன் நான் நீதிமன் றத்தை அணுகியிருக்கிறேன்.
மீனவர்கள் கொல்லப்படுவது ஏறக் குறைய நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தும்கூட எதிர் மனுதாரர்கள், தொடர்ந்து அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள்; அந்தக் கொடுமையைத் தடுப்பதற்கு மத்திய அரசாலோ மாநில அரசாலோ தகுந்த வலிமையான நடவடிக்கை எதுவும் எடுக் கப்படவில்லை. 1974ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் நூற்றுக்கணக்கா னோர் தங்கள் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளனர்.
நம்முடன் நட்புறவு காட்டாத நமது இராணுவ வலிமையுடன் ஒப்பிட்டுப் பேச முடியாத அளவுக்கு வலிமை குறைந்த பக் கத்து நாடு ஒன்றினால் இந்த நாட்டுக் குடி மக்களாகிய மீனவர்கள் சாகடிக்கப்படு வதைக் கவனத்தில் கொள்ளாமலும்; தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமலும் எதிர்மனு தாரர்கள் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்கள். இன்னும் இந்த நாட்டுக் குடிமக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பாக் ஜலசந்தியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இந்தியக் கடல் வளத்தைக் குறைக்கும் வகையில், எந்தச் சூழ்நிலையிலும் கச்சத் தீவை இந்தியாவிடமிருந்து பிரித்து விட முடியாது. ஆனால், 1974ஆம் ஆண்டு, தமிழ் நாடு அரசின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் கச்சத் தீவை இந்திய நாட்டின் உரிமையி லிருந்து பிரித்து விடத் தீர்மானித்தது.
கச்சத்தீவின் இராணுவ முக்கியத்துவம், வரலாற்றுப் பின்னணி ஆகியவை பற்றிக் கவலைப்படாமல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தியர்கள் தங்களது தேசத்தின், எல்லையை அல்லது உரிமை களைக் குறைத்துக் கொள்ளும் வகையில் 1974-76 ஆகிய கால கட்டத்தில் இந்திய அரசு மேற்கொண்ட முடிவுகள் அல்லது ஒப்பந்தங்கள் சட்டப்படி நடைமுறைப்படுத் தப்பட முடியாதவையாகும்.
அரசியல் தலைவர்களால் எந்த மட்டத் தில், எத்தனை தடவைகள், எந்த வகையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் அந்த ஒப்பந்தங்களின்படி இலங்கை அரசுக்குக் கச்சத் தீவை வழங்கியதுபோல் இந்திய எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியையும் இந்திய எல்லையிலிருந்து பிரித்துக் கொடுப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. சுருங்கச் சொன்னால், அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறி முறைகளுக்கு மாறாக இந்திய இறையாண் மைக்குட்பட்ட கச்சத் தீவு இலங்கைக்கு ஒருபோதும் வழங்கப்பட முடியாது என்பதை அறியலாம். கச்சத்தீவு பிரித்துக் கொடுக்கப் பட்டதற்கு எந்த வகையான சட்டத்தின் ஆதரவும் இல்லாமையால் கச்சத்தீவுவைப் பிரித்துக் கொடுப்பது என்ற ஒப்பந்தம் அமல்படுத்த முடியாத ஒன்றாகும்.
இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, இந்திய மக்கள் அரசியல் நிர்ணய சபையின் மூலமாக இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் சமநீதி உண்டு என அரசியல் சட்டத்தின் முகப்புரை உறுதி செய்கிறது.
அரசியல் சட்டத்தின் பாகம் 1, 1 முதல் 4 பிரிவுகளை (Article) கொண்டுள்ளது. முதலாவது அட்டவணையில் (Schedule) குறிப்பிட்டுள்ள படி, பிரிவு 1 மாநிலங்களும் எல்லைகளும் பற்றிக் குறிப்பிடுகிறது. மூன்றாவது பிரிவின் படி புதிய மாநிலங்களை உருவாக்குவது, எல்லைகளில் மாறுதல் செய்வது, ஏற்கெனவே உள்ள மாநிலங்களின் பெயர்களை மாற்றுவது ஆகியவற்றை, குறிப்பிட்டுள்ள வழிகளில் மட்டுமே செய்து கொள்ள முடியும்.
அத்தகைய நடவடிக்கைகளை - குறிப் பாக ஒரு மாநிலத்தின் எல்லையைக் குறைப் பதாகிய நடவடிக்கையை நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும். மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைப்பது குறித்து பிரிவு 3 (சி), (Article 3-c) குறிப்பிடுகிறது. பிரிவு 3-டி (Article 3-d) இன்படி எல்லைகள் சுருக்கப்படலாம்.
எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி நாடாளுமன் றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று பிரிவு 3இன் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தகைய மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் எல்லையைக் குறைத்திட வேண்டுமென்ற கட்டாயம். இந்திய அரசுக்கு வரும்போது, பிரிவு 3இன் இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகே அதைச் செய்ய முடியும்.
பிரிவு-3இன்படி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்பது மட்டுமல்ல; இந்திய அரசியல் சட்டத்தின் பாகம் xx-இல் இடம் பெற்றுள்ள 368ஆவது பிரிவின் (Article)
கீழ் அந்த அட்டவணைக் குத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இத்தகைய சூழ்நிலைகளில், இந்த ரிட் மனு மீதான இறுதித் தீர்ப்பை வழங்கும் வரையில், 1 முதல் 4 வரை குறிப்பிடப்பட்டுள்ள எதிர் மனுதாரர்கள் தமிழ்நாட்டு மீனவர் களின் உயிருக்கும் உடைமைக்கும் முழுமை யான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும் புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதிமன்றம் உடனடியாக இடைக் கால ஆணை பிறப்பிக்குமாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் மீன்பிடிக்கச் செல்கின்ற தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத் தால் கொல்லப்படாமலும் தாக்கப்படாமலும் தடுத்துப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவையான அவசியமான அளவுக்கு இந்தியக் கடற்படை உள்ளிட்ட இராணுவம், விமானப் படை ஆகியவற்றையும் பணியில் ஈடுபடுத்துமாறு இந்திய அரசுக்கு மாண்பு மிகு நீதிமன்றம் ஆணையிடுமாறும் மிகுந்த பணிவுடன் கோரப்படுகிறது.
கச்சத்தீவு இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது என்றும் தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைக்குள் அடங்கியிருக்கிறது என்றும் இந்திய தேச எல்லையிலிருந்து அல்லது இறையாண்மையிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கை அரசுக்கு, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 3 அல்லது பிரிவு 368இன் கீழ் இயற்றப்பட்ட சட்டத்தின்படிக் கொடுக் கப்பட்டதல்ல என்றும் ரிட் பிரகடனம் (Writ Decleration) செய்து நீதி வழங்குமாறு மாண்புமிகு நீதிமன்றம் மிகுந்த பணிவுடன் கோரப்படுகிறது.
- இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் 26.7.1997 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...