Friday, February 10, 2012

ஆங்கிலேய படைவீரர்கள் அதிக அளவில் கொல்லப்பட்ட போர் எது?


இங்கிலாந்தின் உள்நாட்டுப் போரில்தான் அதிக எண்ணிக்கை கொண்ட ஆங்கிலேயப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மூன்று நாடுகளின் போர் என்று இதனை வரலாற்றாசிரியர்கள் இப்போது குறிப்பிடுகின்றனர்.
1642 மற்றும் 1649 ஆண்டுகளுக்கிடையே அதிர்ச்சி அளிக்கத் தக்க வகையில் வயது வந்த ஆண் மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் வீதம் இப்போரில் கொல்லப் பட்டனர்.  முதல் உலகப் போரில் இறந்தவர்களைப் போல் மூன்று மடங்கு வீரர்களும், இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களைப் போன்று அய்ந்து மடங்கு வீரர்களும் இப்போரில் இறந்தனர்.
1642இல் இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் போரிடும் வயதில் உள்ள ஆண்கள் 20 லட்சம் ஆவர். இவர்களில் 85,000 பேர் போர்க் களங்களிலும், 1,00,000 பேர் காயங்களாலும் நோய்களாலும் இறந்தனர். இங்கிலாந்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் படைவீரர்கள் திரட்டப்பட்டது இந்தப் போருக்காகவே. போரிடத் தகுதி பெற்ற ஆண்களில் கால்பங்கினர் படையில் சேர்ந்தனர்.
அயர்லாந்தில் இதை விட மோசமாக இந்த உள்நாட்டுப் போர் இருந்தது. உள்நாட்டுப் போருடன் சுதந்திரப் போரும் சேர்ந்து கொண்டது. 1653இல் கிராம்வெல் படையெடுப்பின் முடிவில் அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் இறந்தனர் என்று சில வரலாற்றாசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
2004இல் இங்கிலாந்து நாட்டின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் (BBC)  ஏற்பாடு செய்த கணக்கெடுப்பில். இங்கிலாந்து உள்நாட்டுப் போரில் சண்டை நடந்த ஒரு இடத்தைக் கூடக் குறிப்பிட 90 விழுக்காட்டு மக்களால் முடியவில்லை. 1649இல் நாடாளுமன்றத்தால் எந்த ஆங்கிலேய மன்னருக்கு மரணதண்டனை அளிக்கப் பட்டது என்பதை 80 விழுக்காட்டு மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆலிவர் கிராமல் பெயரையே 67 விழுக்காடு பள்ளிச்சிறுவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...