Friday, February 10, 2012

இடிமின்னல், குறுங்கோள் இவற்றில் எதனால் மனிதர் கொல்லப்படும் ஆபத்து அதிகம்?

இடிமின்னல், குறுங்கோள் இவற்றில் எதனால் மனிதர் கொல்லப்படும் ஆபத்து அதிகம்?
முட்டாள்தனமாகத் தோன்றினாலும், குறுங்கோளினால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்காக இருக்கும். ஒரு குறுங்கோல் (சூரியனைச் சுற்றி வரும் இது, பூமிக்கு அருகில் உள்ள பொருள் என்று இப்போது அழைக்கப்படுகிறது) 10 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியுடன் மோதுகிறது.
புள்ளிவிவரப்படி இந்த மோதல் ஏற்பட வேண்டிய காலம் கடந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம். ஆபத்து நிறைந்த ஒரு குறுங்கோள் 2 கி.மீ. (1.2 மைல்) விட்டம் கொண்டதாகும்.  பத்து லட்சம் மெகா டன் டி.என்.டி (TNT) வெடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு இந்த குறுங்கோல் மோதலினால் ஏற்படும் அதிர்ச்சியில் இருக்கும். அத்தகைய மோதல் ஒன்று நிகழ்ந்தால், அதனால் இறக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேலாக இருக்கும். அதன்படி அத்தகைய ஒரு மோதலில் நீங்கள் உயிரிழக்கும் ஆபத்து, 60 லட்சத்தில் ஒன்றாக இருக்கும்.
இங்கிலாந்தில் எந்த ஓர் ஆண்டிலாகட்டும் இடிமின்னலால் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து 1 கோடியில் ஒன்று என்ற அளவில் இருக்கும்.
மின்னல் என்பது ஒரு மாபெரும் மின்பொறி (வீச்சு) யாகும். 10 கோடி மின்விளக்குகள் அணைந்து அணைந்து எரியும் ஒளிக்கு சமமானது மின்னலின் ஒளி. சில மின்னல் வீச்சுகள் 100,000 ஆம்ப் மற்றும் 200 மில்லியன்வோல்ட் என்ற உயர்ந்த அளவு மின்னோட்டம் மற்றும் மின்தூண்டுதல் கொண்டவையாக இருக்கும். 30,000டிஊ  வெப்பத்தை உருவாக்கக் கூடிய திறன்படைத்ததாக இருக்கம். இரு சூரியனின் மேற்பரப்பில் நிலவும் வெப்பத்தைப் போன்று அய்ந்து மடங்கு வெப்பமாகும்.
ஒரு மின்னல் வீச்சு  மணிக்கு 11.5 கோடி கி.மீ. வேகத்தில் பயணிக்க இயன்றதாகும். ஒவ்வொரு மின்னல் வீச்சும் பல அடுக்கு மின்பொறிகளைக் கொண்டதாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு வினாடியில் பத்துலட்சத்தில் ஒரு பங்கு கால அளவு மட்டுமே நீடிக்க இயன்றவையாகும். இந்த கால அளவு மிகக் குறைவானதாக இருப்பதால், மின்னலின் மின்னாற்றல் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகும்.  ஒரு சாதாரண வீட்டின் ஒரு நாளைய மின் தேவையை நிறைவு செய்வ தாக ஒரு மின்னல்வீச்சினால் உருவாக்கப்படும் மின்னாற்றல் இருக்கும். ஒரு நாளில் மின்னல் பூமியை 80 லட்சம் முறை இதாவது வினாடிக்கு அய்ம்பது மறை  தாக்குகிறது.
கடற்கரைப் பகுதிகளில் இந்த மின்னல் பொதுவாக ஏற்படக்கூடியதாகும். ஆண்டுக்கு ஒரு சதுர கி.மீட்டரில் இரண்டு என்ற விகிதத்தில் ஏற்படக்கூடியவை. அதிக சேதத்தை அவை விளைவிப்பதாகத் தோன்றவில்லை. அதனால் தூண்டப்படும் மின்னாற்றல் மிக விரைவாக பூமியிலிருந்து கடல் பரப்புக்கு மேல் சென்றுவிடுகிறது.  வாய்ப்பு விதிகளின்படி அவர்கள் தாக்கப்பட்டிருக்க வேண்டியதை விட பத்து மடங்கு அதிகமாக மனிதர்கள் இடிமின்னலால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்கள் ஆறுமடங்கு அதிகமாகத் தாக்கப்படுகின்றனர். மூன்றில் இருந்து ஆறு இங்கிலாந்து நாட்டுக்காரர்களும், நூறு அமெரிக்கர்களும் ஒவ்வொரு ஆண்டும் இடிமின்னலால் தாக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர்  கோல்ஃப் மட்டைகள், கார்பன்நூல் வயர்சுற்றப்பட்ட பித்தளை ஆகிய மின்கடத்திகளைக் கைகளில் எடுத்துச் சென்றவர்கள் ஆவர். திறந்த வெளியில் ஒருவர் இடியுடன் கூடிய புயலில் மாட்டிக்கொண்டால், பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால்  மரங்கள் இருக்கும் இடத்தில் இருந்து தள்ளி தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...