Wednesday, February 22, 2012

ராமன் ஒழுக்கத்தைப் போதித்தானா?

கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்கிறதே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.
பதில்: அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்பது அத்வானிக்குத் தெரியும். ராமருக்கும் தெரியும். முதலில் ராமர் கோவில் கட்டுவதை விட்டுவிட்டு, அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ராமரின் ஒழுக்கத்தைப் போதிக்கட்டும். - ஆனந்தவிகடன் கேள்வி - பதில், 22.2.2012
ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து கோழைத்தனமாக வாலியைக் கொன்றாரே அந்த ஒழுக்கத்தையா?
சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜகோபாலாச் சாரியாரே வாலி வதம் படலத்தில் ராமனின் கோழைத் தனத்தை நியாயப்படுத்த முடியாமல் மூச்சு முட்டத் திணறி நிற்கிறாரே!
கோழைத்தனமாக மரத்தின் பின்னால் மறைந்து நின்று தன்னைக் கொன்ற ராமனை நோக்கி வாலி என்ன சொல்லுகிறார்?
ராமனே! தசரத சக்கரவர்த்தியின் புத்திரனா வாய். உத்தம குலத்தில் பிறந்த நீ, பெரும் புகழும் அடைந்த நீ, ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும், ஒழுக்கமும் உலகம் அறிந்த விஷயம். இப்படியிருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்துகொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என்மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமாயிருக்கிறதே! எல்லாப் பிராணிகளிடமும் கருணை கொண்டவன், தோஷ எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் புலன் களையும், உள்ளத்தையும் அடக்கியாள்பவன், அற வழியில் நிற்பவன், பொறுமை, சாந்தி, தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே, இப்போது அவையெல்லாம் என்ன வாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்.
அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென்றும், துன் மார்க்கன் என்றும், புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரி யாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியுடன் யுத் தத்துக்கு வந்தேன். உனக்கு என்ன தீமை நான் செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந் தேன்? அதருமத்தில் இறங்கி என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரசு குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்த வனல்ல.
மோசக்காரனான உன்னைப் பூதேவி மணக்க விரும்பமாட்டாள். நீ எப்படித் தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண்ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந்தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டி ருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே! சுக்ரீவனுக்காக என்னைக் கொன்றாயே. ராவணனைக் கொன்று பிரேதத்தைக் கழுத்தில், கயிறு போட்டுக் கட்டி உன்னிடம் இழுத்துக் கொண்டு வந்து விட்டிருப்பேனே!  மைதிலியை எவ்விடம் மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து உன்னிடம் ஒப்புவித்திருப்பேனே! பிறந்தவர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.
இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரணாவஸ்தையில் ராமனைக் கண்டித்தான்.
வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்ன தாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்ட தாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படு கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டு விட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள்.
- ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன், பக்கம் 205-206
கோழைத்தனமாக வாலியைக் கொன்ற ராமனின் பதிலில் சாரம் இல்லை என்று ஆச்சாரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு, ஆனந்த விகடன்கள் ராமனைக் காப்பாற்றிட முயற்சிப்பானேன்?
ராமனை ஒழுக்கவான் என்று தூக்கி நிறுத்த ஆசைப்படுவானேன்?
பக்தியைக் காப்பாற்றாவிட்டால் பிராமணன் என்ற பிறவி அந்தஸ்து பறிபோய்விடுமே - அதுதானே காரணம்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...