Tuesday, February 14, 2012

கொரில்லா (Gorilla) என்னும் மனிதக் குரங்குகள் எங்கு உறங்கும்?


கொரில்லா என்னும் மனி தக் குரங்குகள் தங்கள் கூடு களில் உறங்கும். மிகப்பெரிய சதைப் பிண்டமாகிய இந்த கொரில்லாக்கள் வயிறுபுடைக்க மதிய உணவு அருந்தியபிறகு, ஒவ்வொரு நாள் மாலையிலும் தரையிலோ அல்லது மரங்க ளின் தாழ்ந்த கிளைகளிலோ கூடுகளைக் கட்டும்.
கொரில்லா எவ்வளவுதான் வயதில் சிறியதாக இருந்தாலும், ஒரு கொரில்லாவுக்கு ஒரு கூடு என்ற முறை கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும்.
மரக்கிளைகளை வளைத்து, படுக்கை விரிப்பு  போன்ற மென்மையான இலை, தழைகளுடன் கட்டப்படும் கலை நுணுக்கம் மிகுந்தவை அல்ல இக்கூடுகள். ஒரு கூட்டினைக் கட்ட வழக்கமாக பத்து நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும். பெண்களும், இளம் கொரில்லாக்களும் மரங்களில் உறங்குவதையே விரும்பும்; ஆண்கள் தரையில் கூடுகளில் உறங்கும்.
சமவெளிகளில் வாழும் கொரில்லாக்கள் ஆரோக்கியத்தைப் பேணுபவை யாகவும், தங்கள் வீடுகளைப் பற்றி பெருமை கொண்டவையாகவும் இருக்கும். மலை கொரில்லாக்கள் தங்கள் கூடுகளை சுத்தமாகவே வைத்துக் கொள்ளமாட்டாது. பல நேரங்களில் தங்கள் கழிவுகள் மீதே அவை படுத்துறங்கும்.
கொரில்லாக்களால் நீந்த முடியாது. அவை 48 குரோமோசோம்களைக் கொண்டவை. இது மனிதர்கள் கொண்டிருப்பதை விட 2 அதிகமானது.
இந்த உலகில் உள்ள விலங்கியல் பூங்காக்களில் உள்ள அனைத்து கொரில்லாக்களையும் விட, அதிக எண்ணிக்கையிலான கொரில்லாக்கள் புதர் இறைச்சி (ரெளாஅநயவ)  என்ற வடிவத்தில மக்களால் உண்ணப்படுகின்றன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 4

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...