எங்களைத்தாண்டி அரசியல் சுழல முடியாது(4) சீன பன்னாட்டு வானொலிக்கு தமிழர் தலைவர் பேட்டி
சீன பன்னாட்டு வானொலி தமிழ் பிரிவினர் 23.10.2011 அன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி, பல்கலைக் கழக துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் ஆகியோரை அழைத்து பேட்டி கண்டனர். அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியார் அவர்களைப் பற்றி அவர் ஒரு சிக்கனவாதி என்பது உலகம் பூராவும் அறிந்த ஒன்று. கையெழுத்துப் போடுவதற்குக் கூட நான்கணா கேட்கி றாரே என்று சொல்லுவார்கள். அவர்கள் அதை எல்லாம் சேர்த்து தன்னுடைய சொந்தபந்தங்களுக்கோ ஜாதியின ருக்கோ அல்லது நண்பர் களுக்கோ விட்டுவிடவில்லை.
அதே போல இந்தியா என்பது கிராமங்களில்தான் வாழுகிறது என்று எப்படி மகாத்மா காந்தியடிகள் தெரிவித் தார்களோ அதை செயல்படுத்துகின்ற விதத்தில், சமூக மாற்றத்தை ஏற்படுத்து கின்ற விதத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிராமப்புற சீர்திருத் தத்தைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் பேசினார்கள். அப்படி பேசிய பேச்சை எங்களுடைய வேந்தர், நான் துணை வேந்தர் என்கிற முறையிலே முன்னாள் முதல்வர் என்ற நிலையிலே கொடுத்த மாத்திரத்திலே பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை மழைநீரை மட்டுமே நம்பியிருக்கக் கூடிய கிராமங் களை இன்றைக்கு ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி கிராமங்களாக மாற்றியிருக் கின்றோம்.
இதெல்லாம் மற்ற பல்கலைக் கழகங்களுக்கும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகங்களுக்கும் இருக்கக் கூடிய தனித்தன்மைகள், நாங்களும் நானோ தொழில்நுட்பத்திலே ஆராய்ச்சி செய்கிறோம் ஒரு பக்கம்.
நாங்களும் மாடர்ன் டெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாலும் கூட, சமூகத் தேவையை முன்னிலைப் படுத்தி செய்கிறோம். அதே போல பெய்ஜிங் எப்படி சுத்தமாக இருக்கிறதோ அது போல, எங்கள் வளாகம் எல்லா நிலையிலும் சுத்தமாக வைத்திருக்கின்றோம்.
கழிவே இல்லாத வளாகம்
அதே நேரத்திலே எங்கள் வளாகமே Zero Waste Management என்ற அடிப் படையில் ஒரு கழிவு இல்லாத வளாகமாக பயன்படுத்தி வருகிறோம். பொதுமக்க ளுடைய வேண்டுகோளை விரும்பி, தஞ்சை நகராட்சி முழுமைக்கும் அதை நாங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றோம்.
ஆக, படிப்பு என்பது சோதனைச் சாலை மட்டுமல்ல அல்லது பணிகள் என்பது வளாகத்தில் மட்டுமல்ல. மாறாக சுற்றியிருக்கக் கூடிய கிராமப்புறங்க ளுக்கும் சரி, நகர்ப்புறங்களுக்கும் சரி, இதையே நமது மேநாள் குடியரசு தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அய்யா வேந்தர் வீரமணி அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள். நீங்கள் செய்யக் கூடிய பணிகளை பெரியார் புரா என்ற திட்டத்தை உருவாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மனிதநேயத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். இது வெற்றிகரமான திட்டம்.
இதை எல்லோரும் எடுத்து செயல் படுத்த வேண்டும். இது ஒரு National Model என்று அய்யா அவர்கள் சொல் லுவார்கள்.
அதைப் போலவே சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை ஒழிக்கக்கூடிய திட்டம் இதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு முன்மாதிரியான பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. இந்தப் பல் கலைக் கழகத்திலே நடக்கக்கூடிய பணிகள் அதனுடைய விரிவாக்கச் சிந்த னைகள், ஆராய்ச்சிகளை எல்லாம் உள்ளடக்கிப் பார்த்தால் ஓராண்டு முழுமைக்கும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற் றத்தை வளி மண்டலத்தை மாசுபடுத்து கின்ற நிலையை நம்முடைய ஆராய்ச்சி யின் வாயிலாக கட்டுப்படுத்தப்பட்டி ருக்கிறது. இதையே அனைத்து நிறு வனங்களும், இதையே அனைத்துப் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகமும் சேர்ந்தால் இன்றைக்கு உலகம் முழுமைக்கும் ஒரு மாசற்ற உலகத்தை உருவாக்க முடியும்.
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக
இதுவே இளைஞர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கும் என்ற அந்தத் திட்டத்தைச் சொல்லி அய்யா அவர்கள் சொன்னமாதிரி நீங்கள் அதை தஞ்சை மாவட்டத்திற்கும் முழுமையாக எடுத்துச் செல்லுங்கள் ஷ்நசடி உடிசடி னுளைவசஉவ என்று சொல்லக்கூடிய விதத்திலே தஞ்சை மாவட்டம் கரியமிலவாயு இல்லாத ஒரு மாவட்டமாக உருவாக்குங்கள். பின் னாலே அது தமிழகத்திற்குச் செல் லட்டும்.
பெரியார் புரா
எப்படி பெரியார் புரா இன்றைக்கு தேசியத்திட்டமாக இருக்கிறதோ அதே போல நாளைக்கு இந்தியா முழுமைக்கும் செல்லட்டும். உலகமக்களும் மற்றவர் களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டதைப் போல பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு உலகம் தழுவிய நிலையிலே தன்னுடைய சமூகப் பணியை, கல்விப் பணியை, தன்னுடைய ஆராய்ச்சிப் பணியை, தன்னுடைய விரிவாக்கப் பணியை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒரு அற்புதமாக செய்யக் கூடிய திட்டம். எப்படி தந்தை பெரியார் அவர்கள் மனிதகுலம் தழைக்க வேண் டும் என்பதற்கு எதையெல்லாம் சொன் னார்களோ அவருடைய தத்துவத்தையே தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டு சிறந்த விதத்திலே ஓங்கி உயர்ந்த நிறுவனமாக வளர்ந்து கொண் டிருக்கிறது.
இந்தப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். அய்யா அவர்கள் தெரிவித்ததைப் போல, நாளைக்கு சீன மாணவர்கள் வந்தால் கூட அங்கே படிப்பதற்கு நாங்கள் உறு துணையாக இருப்போம். உலகம் முழு மைக்கும் மாணவர்கள் அங்கே வரலாம்.
உலகம் முழுமைக்கும் பெரியார் கொள்கை
உலகம் முழுமைக்கும் தந்தை பெரியார் கொள்கை அய்யா அவர்கள் சொன்னது போல செல்வதற்கும் மாண வர்கள் வருவதற்கும் ஆராய்ச்சிகள் அதற்கு உறுதுணையாக இருக்கும். சமீபத்தில் பீஜிங் பல்கலைக் கழகத்தில் நேற்று அதற்கு முன்பு நடந்த உலக மாநாடுகூட அந்த நிலையிலேதான்.
எப்படி வருங்காலத்தில் ஒரு நல்ல எதிர்காலத்தை மாணவர்கள் சந்திப்பது. அந்த சவாலை பேராசிரியர்கள் எப்படி எதிர்கொள்வது? எப்படி பல்கலைக் கழகங்களுக்கு அந்த நடைமுறையை உருவாக்க வேண்டும் என்ற அந்த நிலையிலேதான் இந்த பீஜிங் பல்கலைக் கழகத்தில் நடந்த உலக முதன்மையர் மாநாடுகூட ஒரு நல்ல நிலையைத் தந்திருக்கிறது.
கற்றுக்கொண்டு சொல்கிறோம்
சீனாவிற்கு வந்தது பல்வேறு நிலைகளிலே நாங்களும் கற்றுக் கொண்டு செல்கிறோம். பின்னாலே சீனர்கள் இந்தியாவில் உள்ளதை இங்கே கற்றுக்கொண்டு வருவதற்கும் இங்கே உள்ளது அங்கே செல்வதற்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கருது கின்றேன்.
செய்தியாளர்: அய்யா நீங்கள் குறிப்பிடும் பொழுது பெரியார் மணி யம்மை இலச்சினை சொற்களைப் எண்ணு, புதுமை செய், உருமாற்று (Think - Innovate - Transform) பற்றிச் சொன்னீர்கள். இது ஒரு அருமையான கொள்கை கோட்பாடு.
தத்துவம் என்று சொல்லலாம். சிந்தனைக்கு உங்களிடம் நிறைய வளம் இருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனை இருக்கிறது. நீங்கள் இருக்கி றீர்கள். கரியமிலவாயு குறைந்த ஒரு மாதிரி பல்கலைக் கழகத்தை எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சொன்னீர்கள்.
பெரியாரின் சிந்தனை புதையல் போல்
மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். ஒரு பெரிய புதையல் போல தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை இருக்கும். ஒரு கருவூலம் போல இருக் கிறது. அதை எடுத்துச் சொல்ல நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய தலைமை யின் கீழ் இவர்கள் எல்லாம் இருக்கி றார்கள்.
இப்படியாக இருக்கும்பொழுது ஒரு கல்வி நிறுவனத்தின் மூலமாக சமு தாயத்திற்கு எவ்வளவெல்லாம் பணி செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் அய்யா. இதற்கு அடுத்த கட்டமாக பொதுவாகவே நமக்குத் தெரியும். திராவிடர் கழகம் அரசியலில் இறங்குவதில்லை என்று தெரியும்.
அரசியலில் ஈடுபட்டுத்தான் மாற் றங்கள் செய்ய வேண்டும் என்பது அல்ல. நன்றாகப் படித்து நீங்கள் சொன்னது போல நிர்வாகத்தில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போல படித்தும் கூட செல்லலாம்.
இருந்தாலும் கூட அரசியலிலும் ஒருசில படித்தவர்கள் சென்றால் நல்லது தானே. அந்தக் கண்ணோட்டத்தில் தலைமைத்துவ வளர்ச்சி, பண்பாடு உங்களுடைய கல்வி நிறுவனம் ஆனா லும் சரி, திராவிடர் கழகமானாலும் சரி, தலைமைத்துவ வளர்ச்சியை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள்?
இதைக்கேட்பதற்கு இன்னொரு காரணம். தந்தை பெரியாருக்குப் பிறகு தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய மான தலைவர்கள் என்று சொன்னால் எல்லோரையுமே தந்தை பெரியாருடைய நிழலில் வந்தவர்களாகச் சொல்லாம். இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்கள். அய்யா கலைஞர் அவர்கள் இருக் கின்றார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச் சந்திரன் கூட நெருக்கமான தொடர்பு கொண்டவர்தான்.
-(தொடரும்).
No comments:
Post a Comment