நிலவுக்குச் சென்ற மனிதர்கள் பூமியில் கண்ட ஒரே அதிசயம் சீனப் பெருஞ் சுவரே!
எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்ற திராவிடர் வரலாற்று நாயகன் மானமிகு அய்யா வீரமணி பற்றிய வரலாற்று நிகழ் வுகளைப் படித்த போது.. அதுபோன்ற தொரு அதிச யத்தை உணர்ந்தேன்!
முதன் முதல் கழக மேடை ஏறிய போது வயது பத்து என்பதை எண் ணுகிற நேரத்தில்... அய்யா சொன்ன தன்னம்பிக்கை உள்ளவனுக்கு இறை நம்பிக்கை தேவையில்லை என்ற சொற்றொடரே நினைவுக்கு வந்தது!
பத்து வயதிலேயே மின்னலைப் பிடித்து சவுக்காகச் சுழற்றினான் என்கிறார் சோலை. இன்றைக்கும்அதே நிலைதானே! 79 அகவையிலும், பகுத் தறிவு மின்னலை ஏவுகணையாகக் கொண்டு உலகம் முழுவதும் வலம் வருகிறாரே!..
பேச்சுக்களமாக இருந்தாலும். அறிக்கைப் போராக இருந் தாலும் அவரை வென்றவர் இதுவரை இல்லையே! அய்யாவின் அடிச்சுவட் டில் அச்சமின்றித் தெளிவாகப் பயணம் செய்வோருக்கு என்றுமே அவர்தான் தலைவர்!....
ஆம்!.. இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அத்தகைய உணர்வே அழுத்தமாக மேலோங் கியது! அய்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு, உறுதி தளராமல், எந்தவித சலனத்திற்கும் ஆட்படாமல் வெற்றி நடைபோட்டு போராட்ட களங்களைச் சந்தித்த வரலாறு. இன்றைய இளைஞர்களுக் கோர் அரிய பாடம்!..
அய்யாவின் முழு நம்பிக்கையைப் பெறக்கூடிய அளவுக்கு எப்படி படிப் படியாக ஆனால் உறுதியோடு நடை போட்டார் என்பதே ஒரு வீர வரலாறு! அதை தனக்கே உரித்தான நடையில் சோலை அவர்கள் தீட்டி இருப்பது புத் தகத்தின் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டு!
நெருக்கடி காலக் கொடுமைகள்.. அதில் உரிமைக்காக குரல் கொடுத் ததைத் தவிர வேறு எதனையும் செய்யாத திராவிட சமுதாயம் பட்ட வேதனைகள்... சிறையில் மனித நேயமே இல்லா மனித மிருகங்களால் ஆசிரியர் அவர்களும், தளபதி ஸ்டாலின் அவர்களும், சிட்டிபாபு அவர்களும் சிறைக் கொட்டடிக்குள்ளே பட்ட சித்ரவதைகள் - கண்ணீர் தடை செய்த தால் - தொடர்ந்து படிக்க இயல வில்லை! 2000 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த ஆரிய - திராவிடப் போராட்டத்திற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வே அப்பொழுது பீறிட்டு எழுந்தது!.. என்ன செய்வது? இன்னமும் தமிழர்கள் அடிமை சுகம் காணுபவர்களாகத்தானே இருக்கிறார்கள்!! இத்தனைத் துன்பங்களையும் துயரங்களையும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தாங்கிக் கொண்டு பணியாற்றுவது தங்களை வாழ வைப்பதற்குத்தானே என்பதை இன்னமும் தமிழர்கள் உணராதது ஒரு வரலாற்றுக் கறையே!
22 பகுதிகளாகப் பிரித்து எழுதி இருப்பது ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது!
42 முறைக்கு மேல் சிறைக்குச் சென்றிருக்கும் சிறைப் பறவை ஏறத் தாழ 40 நிறுவனங்களை நிருவகித்து வரும் ஓர் உலகச் சாதனையாளர்தான் நூலாசிரியர் சோலையே வியக்கும் நமது பகுத்தறிவுச் சுடர் அய்யா வீரமணி அவர்களே!...
மாற்றாரின் வன்முறைக்கு ஆளாகி, சாவின் விளிம்பைத் தொட்டது பல முறை! படிக்கும்போதே உள்ளத்தில் உதிரம் உறைகிறது.
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம், விடுதலை இதழ் இருக் கிறது என்பதே என்றார் குன்றக்குடி அடிகளார்! அவரே இன்றிருந்தால், விடுதலை இதழ் மட்டுமல்ல; வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலும்தான் எனக் கூறி இருப்பார்!
69 ஆண்டுகால சுயமரியாதைப் பயணத் தொகுப்பு 160 பக்கங்களில் அடக்கிவிட முடியுமா? கடல் நீரை செம்புக்குள் அடக்கிவிட முடியுமா? நூலைப் படித்தவுடன் நம் முன் நிற்கும் கேள்வி இதுவே!!
- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்
கொரநாட்டுக் கருப்பூர்
No comments:
Post a Comment