Saturday, January 14, 2012

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு கனடிய நகரசபைகளின் அங்கீகாரம்!


ஒன்ராரியோ, ஜன.14-கனடாவில் ஒன்ரா ரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம் நகர சபையும், பிக்கரிங் நகர சபையும், தமிழர் திருநா ளாம் தைத்திருநாளை தமிழர்மரபுரிமை நாளாக அங்கீகரித் துள்ளதோடு ஜனவரி 13,14,15ஆம் நாள்களில் தமிழர் மரபினை எடுத்தியம்பும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெ டுக்கின்றது.
இதனையொட்டி நாடுகடந்த தமிழீழ அர சாங்கத்தின் கல்வி, கலாச்சார மற்றும் உடல் நலத்துறை அமைச்சகம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மார்க்கம் நகர சபை, பிக் கரிங் நகர சபை ஆகிய வற்றினால் வழங்கப்பட் டுள்ள அங்கீகாரத்துக்கு முன்னின்று உழைத்த பலரும் பாராட்டப்பட வேண்டியவர்களே. அதில் மார்க்கம்நகர சபை 7ஆம் வட்டார உறுப்பினர்  லோகன் கணபதியின்பங்கு அளப்பரியது. அவருக்கு நா.த.அரசாங்கத்தின் சார்பில் எமது மன மார்ந்த பாராட்டுதல் களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள் கின்றோம் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நா.த அரசாங்கத்தின் கல்வி, கலாச்சார மற்றும் உடல்நலத்துறை அமைச்சரும் உதவிப் பிரதமருமாகிய ராம் சிவலிங்கம் அவர்கள் தை மாத முதல் நாளை தமிழரின் புதுவருடப் பிறப்பாகவும் பொங்கல் திருநாளாகவும் திருவள் ளுவர் பிறந்த நாளாகவும் கோலாகலமாகக் கொண்டாடுமாறும் தமிழ் மரபுக் கலாச்சார வளர்ச்சிக்கான நிகழ் வுகளை நடத்துமாறும் நா.க.த.அ. தமிழ்மக்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறது. எம்மினிய தமிழ் மக்களுக்கு நா.க. த.அ.ன் புத்தாண்டு வாழ்த் துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன் என தெரிவித் துள்ளார்.
அறிக்கையின் முழு மையான விவரம் :
காலம் என்பது மாறாத அசைவு வேகத் தைக் கொண்டு அளவிடப் படுவது.நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றி வருகிறது. அது ஒரு முழுச் சுற்றுச் சுற்ற எடுக்கும் காலத்தை ஒருநாள்என்று அனைத்து மக்களும் எடுத்துக் கொள்கின்ற னர். மேல் நாட்டார் நள்ளிரவில் தொடங்கி மறு நள்ளிரவு வரை ஒரு நாள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.தமிழரும் இன்னும் பல ஆசிய நாட்டாரும் காலை (6 மணி-சூரிய உதயம்) தொடங்கி மறு காலை வரை ஒரு நாள் என்று எடுத்துக் கொள்கிறார் கள். பூமி தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரி யனைச் சுற்றிவர எடுக் கும்காலத்தை அனைத்து மக்களும் ஓராண்டு என்று எடுத்துக் கொள்கிறார்கள். உலக  நிலையில் அரசியல் வர்த்தக உறவு ஒருங் கிணைவுக்காக ஆங்கில ஆண்டு ஜனவரி முதல் நாள் உலகப் புத்தாண் டாகக் கொள்ளப்படு கிறது. ஆனால் வெவ் வேறு நாடுகள், வெவ் வேறு மத, இன மக்கள் தமது மரபுப்படி வெவ் வேறு பருவ காலநேரத் தில் வருடம் தொடங்கி முடிவதாகக் கொள்கி றார்கள். முஸ்லிம் மக் கள் தமது மத அடிப் படையில் தமது ஆண் டுத் தொடக்கத்தை கைக்கொள்கிறார்கள். இந்து மத மக்கள் சித் திரை மாதத்தை தமது முதல் மாதமாகக் கொள் கிறார்கள்.ஆனால் தமிழ் மக்கள் என்று கூறும் போது அவர்கள் பல் வேறு மதத்தைப் பின் பற்றுகிறார்கள்.ஆனாலும் அவர்கள் தமக்கென ஒரு பொதுவான கலாச் சார அடிப்படையில் ஒரே தமிழ் மொழியைப் பேசுகின்றவர்களாக வாழ்கிறார்கள். இவ்வ கையில் தமிழ்மக்களின் புத்தாண்டு ஆரம்பம் எது?
இதைப்பற்றி இந்தி யாவில் தமிழகத்தில் கூடி ஆராய்ந்த தமிழ் அறிஞர்கள் பண்டிதர் கள் சான்றோர்கள் தமி ழரின் புத்தாண்டு தை மாதம் முதல் தேதிதான் என்று 1921 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். அதே போல் மறுபடியும் 1937 ஆம் ஆண்டிலும் கூடி ஆராய்ந்த தமிழ் அறி ஞர்கள் அதை உறுதிப் படுத்தினார்கள்.தமிழ் ஈழத்தில் நடைமுறை அரசொன்று இருந்த போது அதையே அவர் களும் நடைமுறைப் படுத்தினார்கள்.
1971இல் தமிழ்நாடு அரசு
1971 இல் தமிழக அரசும் அதைச் சட்ட மாக்கி நடைமுறைப் படுத்தியது.சர்வ தேசத் தின் பரிணாம வளர்ச்சி மாற்றங்களுக்கேற்ப மதவித்தியாசத்தைப் புறம்தள்ளி ஒரே இனம், ஒரே தமிழ்க் கலாச்சார இனம், ஒரே மொழி பேசுகின்ற இனம் என்ற வகையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய ஒரு பூகோளத்தேவை கருதி அனைத்து மத தமிழ் மக்களும் ஏற்றுக்கொள் ளக் கூடிய தமிழ் வரு டப் பிறப்பாக தை மாத முதல் நாளையே கைக் கொள்ள வேண்டுமென் பதே முடிந்த முடிபாகும்.
தனிப்பட்ட மதத்த வர்கள் தத்தம் மத சார்பான வருடத்தையும் கொண்டாடுவதில் தவறில்லை. பூமியின் சமரேகைக்கு வடக்கே இருபத்து மூன்றரை பாகைக்கும் தெற்கே இருபத்து மூன்றரை பாகைக்கும் இடையில் தான் சூரிய அசைவு இருக்கிறது.பூமியில் பெரும்பாலான தரைப் பிரதேசம் வடபகுதி யிலேயே இருப்பதால் அங்கு வாழும் மக்கள் சூரியன் வடதிசை நோக்கி அசையத் தொடங்கு வதை மகிழ்ச்சியோடு வரவேற்பது இயல் பானதே.அப்படிப் பார்த் தால் தமிழர் தைமாதப் பிறப்பை அதாவது சூரி யனின் அசைவு தென் முனையில் இருந்து வட திசை நோக்கி ஆரம் பிக்கும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டா டுவது அறிவுபூர்வமான தும் கூட.
புலம்பெயர் தமிழ் மக்கள்
புலம்பெயர் தமிழ் மக்கள் தை முதல் நாளையே தமிழ் மரபு வருடப் பிறப்பாகவும் தமிழர் மரபுப் பொங்கல் திருநாளாகவும் தமிழ் மறை தந்த முனிவர் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே கொண்டாடி வருகி றார்கள்.கனடாவில் ஒன்ராரியோ மாநிலத் தில் உள்ள மார்க்கம் நகர சபையும் பிக்கரிங் நகர சபையும் தமிழ் மரபுப் புதுவருடத்தை அங்கீகரித்து ஜனவரி 13,14,15 ஆம் தேதிகளை (ஆங்கிலத் தேதி) தமி ழரின் மரபுரிமை நாள் களாகவும் அந்த விழா வைத் தமிழரின் மரபு விழாவாகவும் கொண் டாட ஒப்புதல் அளித் துள்ளன.இந்த அரசு ஒப்புதலைப் பெறு வதற்கு முன்னின்று உழைத்தபலரும் பாராட்டப்பட வேண்டி யவர்களே. அதில் மார்க் கம் நகர சபை 7ஆம் வட்டார உறுப்பினர் திரு லோகன் கணபதி யின் பங்கு அளப்ப ரியது. அவருக்கு நா.க.த .அ. சார்பில் எமது மன மார்ந்த பாராட்டுதல் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின் றோம்.
மேலும் தை மாத முதல் நாளை தமிழரின் புத்தாண்டுப் பிறப்பாக வும் பொங்கல் திருநா ளாகவும் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கோலாகலமாகக் கொண்டாடுமாறும் தமிழ் மரபுக் கலாச்சார வளர்ச்சிக்கான நிகழ்வு களை நடத்துமாறும் நாடு கடந்த தமிழீழ அர சாங்கம் தமிழ்மக்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறது.
எம்மினிய தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன்.
இவ்வாறு கலாநிதி ராம் சிவலிங்கம் அவர் கள் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
-தகவல் மருத்துவர் சோம.இளங்கோவன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...