வாழை ஒரு மரம் இல்லை. வாழை என்பது உண்மையில் ஒரு பெரிய மூலிகைச் செடியாகும்; விதைகளைக் கொண்ட வாழைப் பழம் பெர்ரி(Berries) எனப்படும்.
மூலிகைச் செடி என்பதற்கு மரத் தண்டு அற்ற, சதைப் பற்று கொண்ட ஒரு செடி என்று விளக்கம் அளிக்கப் படுகிறது. அந்தச் செடி வளர்ந்து, விதையை உருவாக்கியதும் நிலத்திலேயே மடிந்துபோகும். எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. உண்மையான மரப்பட்டைகளால் மூடப் பட்டிருக்கவில்லை என்றாலும், கொத்துமல்லி, பூண்டு, வெங்காயம் போன்ற செடிகளுக்கு தண்டுகள் உண்டு. இந்த விளக்கத் தின்படி மலர் விட்ட பிறகு, தரைக்கு மேல் உள்ள செடியின் பாகம் இறந்து போகிறது. வாழையில் இது ஒரு வியப்பளிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாழைத் தண்டு இறந்தபிறகு, மற்றொரு தண்டு அதின் வேரிருந்து சற்று தள்ளி முளைக்கிறது. இவ் வாறு பல ஆண்டுகள் மாறி மாறி செடி முளைத்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கும் போது, வாழைச் செடி சில அடி தூரம் நடந்து சென்றது போலவே தோன்றும்.
வாழை மலாய் நாட்டில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வாழையின் பழத்தில் கல்போன்ற விதைகள் அதிகமாகவும், சதைப் பற்று குறைவாகவும் இருக்கும். வவ்வால்களின் மூலம் அது இனப்பெருக்கம் அடைகிறது. நீங்கள் கடைகளில் வாங்கும் வாழைப் பழங்கள், அதிக விதைகள் அற்ற சதைப் பற்று மிகுந்த சுவையான பழங்கள் கொண்ட வாழையை விவ சாயிகள் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலம் கிடைப்பவையாகும். வீட்டிற்குள்ளேயே வளர்க்க இயன்ற இத்தகைய வாழைகளின் பழங்கள் மிகுந்த இனிப்பு சுவை கொண்டவை. ஆனால் மனித உதவியின்றி அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பெரும்பாலான வாழைச் செடிகளில் பால்வேறுபாடு கிடையாது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாழைப் பழமும், தற்போதுள்ள செடியிலிருந்து கைகளால் பறிக்கப் பட்டதாகும். 100 நூற்றாண்டு காலமாக இதன் மரபணு எந்த வித மாற்றத்தையும் பெறவில்லை.
இதன் காரணமாக வாழைச் செடி எளிதில் நோய்களுக்கு உள்ளாகும் தன்மை கொண்டவையாகின்றன. கருப்பு சிகடோகா (Sigatoka) மற்றும் பனாமா (Panama) நோய் போன்ற காளான்களின் தொற்றினால் பல வாழை இனங்கள் அழிந்துவிட்டன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு புதிய வகை வாழை விரைவில் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அனைத்து வாழைச் செடிகளுமே அழிந்து போகும் அபாயம் உள்ளது. இது ஒரு முக்கியமான, அவசரமான பிரச்சினையாகும். உலகில் அதிக லாபம் தரும் ஏற்றுமதிப் பொருள் வாழைப் பழங்கள்தான். ஆண்டுக்கு 1200 கோடி டாலர் புழங்கும் ஒரு தொழில் இது. இதனால் 40 கோடி மக்கள் பிழைக்கிறார் கள். அவர்களில் பெரும்பாலோர் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்பவர்கள் ஆவர்.
பெரும்பகுதி வாழைப் பழங்கள் வெப்ப நாடுகளில் இருந்துதான் வருகின்றன. ஆனால் அய்ரோப்பிய நாட்டிற்குத் தேவையான வாழைப் பழங்களை விளைவிப்பது அய்ஸ்லாந்து நாடுதான். ஆர்டிக் என்னும் வடதுருவத்தில் நிலவும் பூஜ்யத்துக்குக் கீழே இரண்டு பாகை வெப்ப நிலை நிலவும் பகுதியில் நிலத்தடி நீரை சூடுபடுத்தி பெரும் பசுமை வீடுகளில் வாழை வளர்க்கப்படுகிறது. பெலிசில் விளையும் வாழை முழுவதையும் ஒட்டுமொத்தமாக ஒவ்வோராண்டும் வாங்கும் பன்னாட்டு நிறுவனமான ஃபைஃபீ ஓர் அய்ரிஷ் நிறுவனமாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment