Sunday, January 15, 2012

போக்கி, போக்கி புதுவாழ்வு வாழ....!


நம் உடல்நலம் பேணுவதற்கு சீரான உணவு, சரியான உடற்பயிற்சி, முறை யான இளைப்பாறுதல் (ஓய்வு), வேளா வேளைக்கு மருந்துகளை (மருத்துவர் அறிவுரைக்கேற்ப) எடுத்துக் கொள்ளும் பழக்கம் எல்லாமேதான் முக்கியம்.
ஆனால் அதைவிட முக்கியம், நம் உடலில் சேரும் விஷச் சத்துக்களை அகற்றிடுவது மிகவும் அடிப்படையான கடமையாகும். Toxins என்ற அந்த விஷச் சத்துக்கள் நம்மை அறியாமலே நம் உடலுக்குள் நுழைந்து தொல்லைகளை உருவாக்கிடும். நமது முக்கிய உறுப்பு களான ஈரல், கல்லீரல் (Liver) சிறுநீரகம், (Kidneys)   ஆகியவற்றை சரியாக இயங்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடக் கூடும்.
எனவே நோயற்ற வாழ்வுக்கு, இந்த உடலிலிருந்து விஷச் சத்துப் பொருள் களை வெளியேற்றுவது (Detoxity) மிகவும் அவசியமானதாகும் என்கின்றனர் உடல் நல ஆய்வாளர்கள் - பிரபல மருத் துவர்கள்.
1915இலிருந்து - அதாவது இருபதாம் நூற்றாண்டிலிருந்து இன்று 2012 - நிகழும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் - புதிய கெமிக்கல்கள் - ரசாயனப் பொருள்கள் - கலவைகள் எவ்வளவு உருவாக்கப்பட்டு மனித உடல்களுக்குள் படையெடுத்து நலத்தைப்பாழ்படுத்து கின்றன என்பது பற்றி தெரியுமா?
சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கெமிக்கல்கள்! இந்த மானுடத்தில் புகுந்து விஷச் சத்தை உடலுக்குள் நுழையும் வண்ணம் செய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ரசாயனப் பொருள்கள் பூச்சிக் கொல்லிகள், பயிர் காப்புக்கான கொல் லிகள், வாசனை திரவியங்கள் ஷாம்புக் கள், முடி தைலங்கள், கிருமிகள் ஆகியவற்றை அகற்றும் வகையில் உருவாக்கப்படும், தடுப்புப் புகைகள், அறையில் வாசனைக்காக அடிக்கப்படும் வாயு போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் சில மருந்துகள் இவை மூலம் உடலுக்குள் புகுந்து விடுகின்றன.
இவற்றை அவ்வப்போது வெளி யேற்றிக் கொண்டே (Detoxify) இருக்க வேண்டும்; மலச்சிக்கல் இல்லாமல் அன்றாடம் கழிவுகளைப் போக்கும் நல்ல பழக்க வழக்கம் உடையவர்களுக்கு இது ஓர் இயற்கையான உடல்நல பேணிப்பு ஆகும்!
பொதுவாகவே நமது உடல் உறுப்புகள் விஷ சத்துக்களை உடலிலிருந்து பிரித்து வெளியேற்றும் வகையில் செயல்படுகின் றன என்ற போதிலும், மேலும் விஷச் சத்துக்கள் கூடுதலாக உடலுக்குள் நுழைந்து கலந்து விடுவதால், அந்த உறுப்புகள் பல மடங்கு சுமையைச் சுமந்து தமது பணியைச் செய்வதால் பழுதடையும் அபாயத்திற்கு அவை தள்ளப்பட்டுள்ளன.
அவற்றை அவ்வப்போது நீக்கினால் தலைவலி, வைரஸ் காய்ச்சல் (விஷ ஜுரம் என்றே பெயர் வைத்துள்ளனர் - அந்த நோய்க்கு!) இவை அண்டாது.
அந்த அந்நிய (Foreign Matter) பொருள் உள்ளே படையெடுப்பதால் பல வகையிலும் உடல் நலம் சீர்கேடடைகிறது!
கழிப்பறைகளில் தெளிக்கும் வாசனை வீச்சால் மகளிருக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில்கூட ஒரு ஆய்வாளர் குறிப்பு வெளி வந்துள்ளது!
இதைத் தடுப்பது எப்படி? இப்படிச் சேரும் விஷப் பொருள்களை உடலி லிருந்து  வெளியேற்றுவது எப்படி என்பது பற்றியும் மருத்துவர்கள் அறிவுரைகள் கூறாமல் இல்லை.
1. சில உடற்பயிற்சிகள், யோகா போன்றவை மூலம் (நேத்தி, தவுத்தி என்ற) ஆசனங்களைக்  கூறுகிறார்கள்.
2. உப்பு நீரை (Saline) உடலுக்குள் செலுத்தி (யாராவது விஷங் குடித்தால் டாக்டர்கள் உடனே இதைத் தான் கொடுப்பார்கள்) விஷப் பொருளை அகற்றிடலாம்.
3. பட்டினி இருத்தல்; வாரம் ஒரு முறை ஒரு நாள் பட்டினி கிடந்தால், அந்த விஷச் சத்து வெளியேறக் கூடும். (ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர் கள் இந்த பரீட்சையில் ஈடுபடக் கூடாது) இது அஃதில்லாதவருக் கேற்ற அறிவுரை என்று கருதி ஒழுகிட லாம்.
4. உடம்பில் மசாஜ் செய்து கொள்வதால் இது தசைகள் உறுப்புகளை மிகவும் விரைந்து செயல்பட வைத்து, விஷப் பொருள்களை வெளியேற்றிட சம்பந்தப் பட்ட உறுப்புகளை சிறப்பாக இயங்கும் படிச் செய்யும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5. சானா (Saina) என்ற நீராவிக் குளியல் உடலின் சுரப்பிகளை நன்கு சுரக்கும்படிச் செய்து விஷப் பொருள் களை வெளியேற்ற வாய்ப்பு ஏற்படக் கூடும்.
6. வெல்லம், கறிவேப்பிலை, பூண்டு, கொத்தமல்லி போன்றவையும் சிறுநீர் கழித்தல், மலத்தின் மூலம் வெளியேற்றுதலுக்கு மிகவும் சிறந்தது. உட்கொண்ட விஷத்தை வெளியேற்ற உதவிடும் உணவுப் பொருள்களாகும்!
எனவே பழையன கழிதல் புதியன புகுதல் என்பதன் முன்பகுதி முறையாக அமைந்தால்தான் புதியவற்றிற்குரிய சக்தி சரியானதாக அமைந்து உடல் நலம் சீராக அமைய உதவும்.
(பழையனவற்றை போக்கிடும் நாளை இன்று போகி என்று கூறுவதால் இன்று இப்படி ஒரு சிந்தனை - நியாயந் தானே!)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...