மூன்றாம் நாள் பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் உரை
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பெரியார் விருதினை தமிழர் தலைவர் கி. வீரமணி வழங்கினார்.
சென்னை, ஜன. 18- தமி ழர்களின் வளர்ச்சி - ஒரு நொடிப்பொழுது அசந் தால் வீழ்ந்துவிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் கள் ஆற்றிய உரையில் கூறினார்.
தமிழர் தலைவர் உரை
தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார் பில் சென்னை பெரியார் திடலில் மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு, பொங் கல் விழா மிகச் சிறப் பாக எழுச்சியான விழா வாக இன உணர்வை கூர்மைப்படுத்திக் கொள் ளும் விழாவாக, ஏற்றம் பெறும் திருவிழாவாக நடைபெற்றது.
மூன்றாம் நாள் விழா
மூன்றாம் நாள் பொங்கல் விழா (17.1.2012 சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கி எழுச்சியுடன் நடை பெற்றது.
இவ்விழாவில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:
தமிழர்கள், திராவி டர்கள் திறமையில், அறிவில் பஞ்சமில்லை. நம்மினத்தவர்கள் எவ் வளவு பேர் திறமையான வர்களாக இருக்கிறார் கள் என்பதை எடுத்துக் காட்டத்தான் இது போன்ற விழாக்களை நாங்கள் நடத்துகின் றோம். ஒவ்வொருவரும் இங்கே மிக முக்கியமான வர்களாகப் பாராட்டப்பட்டார்கள்.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்
இங்கு சாதாரணமாக போஸ்டர் ஒட்டி இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கின்ற பணியை செய்து கொண் டிருக்கின்ற விளம்பரப் பணியை செய்து கொண் டிருக்கின்ற போஸ்டர் பொ. ஆனந்தன் முதற் கொண்டு தொழில் அதி பர் வரை இங்கு அழைத் துப் பாராட்டியிருக்கி றோம்.
இங்கு சாதாரணமாக போஸ்டர் ஒட்டி இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கின்ற பணியை செய்து கொண் டிருக்கின்ற விளம்பரப் பணியை செய்து கொண் டிருக்கின்ற போஸ்டர் பொ. ஆனந்தன் முதற் கொண்டு தொழில் அதி பர் வரை இங்கு அழைத் துப் பாராட்டியிருக்கி றோம்.
நம்மினத்தவர்களின் திறமை எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத் திப் பாராட்டவேண்டும்.
பட்டுக்கோட்டை அழகிரி உயர்ஜாதிக்காரர்களைப் பார்த்து சொல் லுவார்:
தகுதி, திறமை உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று பேசுகிறீர்களே!
தகுதி, திறமை உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று பேசுகிறீர்களே!
முடிதிருத்தும் சவரத் தொழிலாளி உனக்கு அழகாக சவரம் செய்து உன்னை அழகுபடுத்தி அனுப்புகின்றார். அவரைப் போய் அம்பட்டன் கீழ்ஜாதிக்காரன் என்று சொல்லுகின்றீர்கள்.
தகுதி, திறமை பேசுகிற உன் கையில் கத்தியைக் கொடுத்தால் - முகத்தில் சிறு கீறல்கூட ஏற்படாமல், ரத்தம் வராமல் உன்னால் சவரம் செய்து காட்ட முடியுமா? என்று கேட்பார்.
அதேபோல, ஊரை சுத்தம் செய்கிற சமு தாயத்தைப் பார்த்து கீழ்ஜாதிக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்துகின்றீர்கள். இதைப் பார்த்து கொதித்தெழுந்தார் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் சம உரிமை, சம வாழ்வு பெற பாடுபட்டார்.
அவர் விதைத்த ஆலம் விழுதுகள், பழுதில்லா விழுதுகள்.
நாட்டுப்புறப் பாடலில் ஜாதி கொடுமைபற்றி...
நாட்டுப்புறப் பாடலில் ஜாதி கொடுமைபற்றி...
மொழியால் தமிழர்கள்
விழியால் தமிழர்கள்
வழியால் தமிழர்கள்
என்று அண்ணா சொன்னார்.
ஜாதியின் அவலத்தைப் பற்றி தஞ்சையை சேர்ந்த செல்வி அவர்கள் தனது நாட்டுப்புறப் பாடல் மூலம் மிகச் சிறப்பாக பாடிக் காட்டினார். தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்காக அரும்பாடு பட்டதை அவர் பாடிய பாடல்கள் மூலம் எடுத்துக் கூறினார்.
நம்மவர்கள் இப்படி எல்லா துறைகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற் காக மகிழ்ச்சி.
போஸ்ட்டர் பொன்னுரங்கம் அவர்களுடைய மகன் பொ.ஆனந்தன் அவர்கள் தனக்குக் குழந்தைசெல்வம் இல்லை என்றாலும் தனது சகோதரர் பிள்ளையை படிக்க வைத்து ஆளாக்கி இன்றைக்கு அவர் அமெரிக்காவில் சாஃப்டுவேர் எஞ்சினீயராக இருக்கின்றார்.
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரவருடைய அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்று கொண்டு வந்தார். அந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழித்தார் பெரியார். அந்தக் குலக்கல்வி திட்டம் இருந்தி ருந்தால் போஸ்ட்டர் ஆனந்தனின் மகன் அமெரிக்காவில் எஞ்சினீயராகியிருக்க முடியுமா?
தந்தை பெரியார் என்ற ஞானசூரியன் தனது உழைப்பால் கடலில் மூழ்கி முத்தெடுத்த தமிழர்கள் தான் அந்த முத்துக்களை எல்லாம் கோத்து மாலைகளாகத் தொடுத்ததைப் போல ஆற்றல் வாய்ந்த எம் தமிழர்களை இந்த மேடையிலே அமர வைத்து விருது கொடுத்துப் பாராட்டியிருக் கின்றோம்.
சிங்கப்பூர் கவிஞர் இலக்கியவாதி, தொழிலதிபர் மா.அன்பழகன் அவர்கள் சிறந்த ஆற்றலாளர் அவருடைய நூலை சிங்கப்பூரில் தேர்ந்தெடுத் திருக்கின்றார்கள். நம்மவர்களிடையே ஆற்றலை வெளியே கொண்டு வந்து காட்டி அவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகின்றோம்.
அதேபோல நடிகர் இளவரசு அவர்கள். அவருடைய தந்தையார் மலைச்சாமி. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் எங்களுடன் மாண வராக இருந்தவர். மேலூர் தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். தந்தை பெரியார் அவர்களிடத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அந்த வகையிலே நமது இளவரசு அவர்கள் திராவிட இயக்க குடும்பத்தைச் சார்ந்தவர்.
பெரியார் மணியம்மை பல்கலை. பயன்படுத்திக் கொள்ளும்
அதேபோல ஒரிசா சிவ.பாலசுப்பிரமணி அவர்கள். மிகப்பெரிய ஆய்வாளர் அவருக்குரிய தகுதி இன்னும் பல்கலைக் கழகங்களில் கிடைக்க வில்லை. எங்களுடைய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அவரை அடையாளம் கண்டு கொண்டது. அவரை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
தந்தை பெரியார் அவர்கள் என்னை விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்தார். அப்பொழுது அய்யா அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அந்த வீட்டில் அய்யா அவர்களுக்கு ஒரு அறை இருக்கும். எதிரே இருக் கின்ற ஒரு ஹாலில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்பொழுது தான் எங்களுக்கு திருமணம் ஆனது. அய்யா அவர்களுடைய ஆணையை ஏற்று இப்படித்தான் எங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கினோம். அலுவலகம் விட்டால் நேரே வீடு. வீட்டிலிருந்து நேராக விடுதலை அலுவலகத்திற்கு வருவோம்.
அரசு ஆர்ட்ஸ்
பாலு பிரதர்ஸ் என்பவர் தான் 1962இல் எனக்கு முதன்முதலில் ஒரு படம் வரைந்து கொடுத்தார். அய்யா அவர்களுடன் தங்கியிருந்த பொழுது அந்தத் தெருவின் இறுதியில் இருந்த காசினோ தியேட்டர் கூட எனக்குத் தெரியாது.
எனக்கு யாரையும் தெரியாது. நான் சென்னைக்கு வந்த புதிது. அப்பொழுது மீரான் சாகிப் தெருவில் இருந்த அரசு ஆர்ட்ஸ் சுந்தரரேசன் அவர்களுடைய கடையில்தான் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருப்பேன். அவருக்குப் பெரியார் விருது வழங்கி பாராட்டுவதில் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மூடநம்பிக்கை பரப்பல்
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறையில் மூடநம்பிக்கைகள் எப்படி எல்லாம் புகுந்திருக் கின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்று செ.பாஸ்கர் சொன்னார். இன்றைக்கு ஜோதிடத்தை பொய் என்று விளக்குகிறோம். இப்பொழுது கம்ப்யூட்டர் ஜாதகம் எலி ஜோசியம் என்றெல்லாம் மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள். பாஸ்கர் போன்றவர்கள் இவற்றைத் தடுக்க உங்கள் துறையைக் கொஞ்சம் திருப்பி விடுங்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்களான தமிழர்களை தோளில் தூக்கி வைத்து அவர் களுடைய உயரத்தைக் காட்டி அவர்களுடைய வளர்ச்சி முக்கியம் என்பதில் நாங்கள் ஆனந்தக் கூத் தாடுகின்றோம்.
ஒரு நொடிப் பொழுது அசந்தால்
இந்த வளர்ச்சி கொஞ்சம் ஒரு நொடிப் பொழுது அசந்தால் வீழ்ந்துவிடும். எனவே எதிலும் எப்பொழு தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்முடைய நிலை மாறிப் போய்விடும். பட்டுக்கோட்டையில் தமிழ்பாட்டை பாடித் தான் இசை நிகழ்ச்சியை நடத்த முடியும் என்ற நிலை அன்றைக்கு வர முடிந்தது. திருவையாறில் நடைபெற்ற இசை விழாவில் இசையரசு தண்டபாணி தேசிகர் தமிழ்ப்பாட்டை பாடிவிட்டார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது. சாணம் போட்டு மெழுகி தீட்டைப் போக்கி பாட வேண்டும் என்று அன்றைக்குச் சொன்னார்கள். தமிழ்ப்பாட்டை துக்கடா பாட்டு என்று சொன்னார்கள்.
திருவையாறில் நிலை என்ன?
ஆனால் இன்றைக்கு அதே திருவையாறில் நிலை என்ன? அங்குள்ள தமிழன் கதவு திறந்தால் தான் உயர்ஜாதிக்காரர்கள் பாட்டுப்பாட உள்ளே நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அபிராபி சுந்தரி நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் அந்த காலத்தில் நடந்தது. அதற்கு ஒரு விளம்பர நோட்டிஸ் போட்டிருந்தார்கள் அந்த காலத்தில். சேர் கட்டணம் இவ்வளவு. பாய் கட்டணம் இவ்வளவு. தரை டிக்கெட் இவ்வளவு என்று போட்டு விட்டு லாகிரி வஸ்து அனு மதிக்கப்பட மாட்டாது என்றெல்லாம் நோட்டிசில் போட்டு விட்டு நாடகம் பார்க்க பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று போட்டார்கள். நாடகம் பார்க்கக் கூட ஜாதி சர்டிபிகேட்டுடன்தான் செல்ல வேண்டுமா?
இன்றைக்கு யாராவது பறையன் என்று சொல்லிவிட்டுத் தப்பிவிட முடியுமா?
விபத்துக்குள்ளான அய்யங்கார் அவருடைய ஜாதிக்காரர் ரத்தத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லுவாரா? பாம்பு திண்பதிலேயே ஒரு கண்டம் நம்முடைய கண்டம் என்று சொல்பவர்களாயிற்றே.
அய்யோ நான் உயிர் பிழைக்க யாருடைய இரத்தமாக இருந்தால் என்ன? நான் இப்பொழுது பெரியார் கட்சியில் சேர்ந்து விட்டேன். எந்த இரத்தமாக இருந்தால் என்ன நாய் உயிர் பிழைத்தால் போதும் என்பார்.
ஜாதி ஒழிப்பில் ஒரு கிளாஸ் சாராயம்
இன்னமும் இரட்டை குவளை கிராமப் புறங்களில் இருக்கிறது. சாராயம் குடிக்கச் சொல்லுகின்ற இடத்தில் பார்த்தால் அங்குதான் வேறுபாடு இல்லாமல் இவர் குடித்த கிளாசை அவர் பயன்படுத்துகின்றார். அவர் குடித்த கிளாசை இவர் பயன்படுத்துகின்றார். ஒரு கிளாஸ் சாராயம் போனவுடனே அங்கு மேல்ஜாதிக்காரன் - கீழ் ஜாதிக்காரன் வேறுபாடே கிடையாது. ஒரு கிளாஸ் சாராயம் உள்ளே போனவுடன் பிரதர் என்று சொல்லுகின்றான். 5 வருடம் நாங்கள் ஜாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்வதை அரைமணி நேரத்தில் சாராயம் செய்து விடுகிறதே.
ஒழுக்கக் கேடாக நடப்பதற்கு ஜாதி பார்ப்ப தில்லை. எனவே இந்த சமுதாயம் வளர வேண்டும். இன்னமும் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லுகிறார்கள். தமிழன் கட்டிய கோயிலிலே நம்மவர்கள் அர்ச்சகராக மணி அடிக்க உரிமை கிடைக்கவில்லை.
மயக்க பிஸ்கட்
ரயிலில் நகை திருடர்கள் மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிக்கின்றார்கள். அதே போல நம் இனத்திற்கு எதிரானவர்கள் விழாக்கள் என்ற பெயரில் நமக்கு மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து நமது இன உணர்வை அமுக்கப் பார்க்கிறார்கள்.
இந்த சமுதாயம் எழுச்சி பெறவேண்டும். நம்மை விழாவில் பார்த்துக் கொள்ள நடத்துகின்ற விழா அல்ல. இதுவெறும் வெற்று விழா அல்ல. தமிழினத்தை வீழாமல் பாதுகாக்கின்ற விழா.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
சாதனையாளர்களுக்கு தமிழர் தலைவர் விருது வழங்கி பாராட்டு
மூன்றாம் நாள் பொங்கல் விழாவில் சிறந்த தமிழின உணர்வுள்ள சாதனை யாளர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி விருது வழங்கி பாராட்டினார்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் மூன்றாம் நாள் பொங்கல் விழா திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழ 17-1-2012 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு பறையடி தப்பாட்ட நிகழ்ச்சி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உறியடி நிகழ்ச்சி, தீப்பந்த வீரவிளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என பெரியார் திடலில் மக்கள் கூட்டம் கொள்ளாத அளவிற்குக் கூடியிருந்து கண்டு களித்தது.
பெரியார் திடல் 3 ஆவது நாளாகவும் காணும்பொங்கல் அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. மாலை 6.30 மணிக்கு நடிகவேள் ராதா மன்றத்தில் அடுத்த நிகழ்ச்சிகள் தொடங்கின.
கரகாட்டக் குழுவினர், மயிலாட்டக் குழுவினர், தவில் நாதசுவர கலைஞர்கள், பறை இசை ஒலித்த தோழர்கள், மகளிர் கோலாட்டக் குழுவினர், கம்பு சுழற்றல், தீப்பந்தம் சுழற்றல் குழுவினர், கபடி குழுவினர் என அனைத்துக் குழுவினருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆடை அணிவித்து சிறப் பித்தார்.
சாதனையாளர் விருது
தமிழின உணர்வாளர் சிங்கப்பூர் மா.அன்ப ழகன், அவர்களுக்கு ஆடை அணிவித்தார். தொழிலதிபர் மென்பொருள் நிபுணர் ச.சிவகுமார் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணரான செ.பாஸ்கர் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது, போஸ்டர் பொ. ஆனந்தன் அவர்களுக்கு சாதனையா ளர் விருது, அரசு ஆர்ட்ஸ் சுந்தரேசன் அவர்களுக்குப் பெரியார் விருது, சிவ. பாலசுப்பிரமணி அவர் களின் தமிழ்ப் பணிக்கு பெரியார் விருது, திரைப் பட நடிகர் ஒளிப்பதி வாளர் இளவரசு அவர் களுக்கு பெரியார் விருது, எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கி, பொன்னாடை அணி வித்துப் பாராட்டினார் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அதே போல நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்திய தஞ்சை அய்யப்பன் செல்வி குழுவினருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆடைகள் அணி வித்து பெருமைப்படுத் தினார்.
மயிலாட்டம், ஒயி லாட்டம், தப்பாட்டம், போன்ற அனைத்து கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கி ணைத்து செயல் படுத்திய திரைப்பட இயக்குநர் வசந்தகுமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆடை அணிவித்து கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை அய்யப்பன் செல்வி குழு வினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் மூன்று நாள்கள் நடைபெற்ற பொங்கல்விழா மூலம் திராவிட இன உணர்வு ஏற்றம் பெரும் எழுச்சித் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
ஏற்புரை
ஒரிசா சிவ.பாலசுப்பிரமணி, செ.பாஸ்கர், ச.சிவக்குமார்,பொ.ஆனந்தன், அரசு ஆர்ட்ஸ் சுந்தரேசன், திரைப்பட நடிகர் இளவரசு ஆகியோர் ஏற்புரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment