இது உண்மையா? நமக்குத் தெரிய, இதுவரை தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் தலைவராக, மூன்று சதவிகிதம்கூட இல்லாத பார்ப்பன சமுதாய அதிகாரி எவரையும் நியமித்ததாக வரலாறே கிடையாது!
இந்நிலையில் இப்படி ஒரு விபத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தினால் அதை விட சமூக நீதிக்கு மரண அடி வேறு இருக்க முடியுமா?
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கலாமா?
முதல் அமைச்சர் அவர்களின் 69 சதவிகித சட்டம்தான் முன்பு அவரது சாதனையில் சரித்திரம் படைத்தது.
இது மாதிரி நியமனம் செய்து - அதைத் தலைக்குப்புற கவிழ்க்கப் போகிறாரா - என்பது சமூக நீதியாளர்களின் கேள்வியாகும்.
No comments:
Post a Comment