Sunday, January 8, 2012

தானே புயல் - செய்ய வேண்டியது என்ன?


பட்ட காலே படும்; கெட்டக் குடியே கெடும் என்பது போல....

2006ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் ஏற்பட்ட கடுமையான சுனாமி தாக்குதல் சுவடுகள் மறையாத நிலையில். ஒரு அய்ந்து ஆண்டுகள் கடந்து. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாளில் ஏற்பட்ட  தானே புயலின் கொடூரத் தாக்குதலுக்கு, பட்ட காலே படும்; கெட்டக் குடியே கெடும் என்பது போல தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள். கடலோர மாவட்டங்களை ஒட்டிய மாவட் டப் பகுதிகள் கடுமையான தாக்கு தலுக்குள்ளாகி இருக்கின்றன.

குறிப்பாக. புதுச்சேரி குறு மாநிலப் பகுதிகள். கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டப் பகுதிகள் தானே புயலின் சீற்றத்திற்கு இரையாகி இருக்கின்றன, இயற்கையின் சீற்றத்தை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்து விட்டன.

கல் நெஞ்சம் கொண்டவரையும் கலங்க வைத்திடும் கொடிய கோரக் 
காட்சிப் படலங்களாக....

சுனாமியில் பெரும் அளவில் ஆயிரக் கணக்கில் உயிர் பறிப்புகளும் கடும் அளவில் வீடு மனை, கால்நடை இழப்புகளும் ஏற்பட்டன; தானே புயல் உயிர்ச் சேதங்கள் அதிக அளவில் இல்லையெனினும் வீடு, மனை இழப்புகள் பல்லாயிரக் கணக்கில் பெருமளவிலும் ஏற்பட்டிருப்பதோடு வாழ்வாதாரத்திற் கான பல்லாயயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தரைமட்டமாகின; கரும்புத் தோட்டங்கள், வாழைத் தோட் டங்கள், பூந்தோட்டங்கள், தென்னந் தோப்புகள், சவுக்குத் தோப்புகள், மா, பலா, முந்திரி, கொய்யா மரத் தோப்புகள். இன்னபிற காய்-கனி தரும் மரம் செடி கொடிகளெல்லாம் சின்னா பின்னமாகி முற்றிலும் அழிந்து போய் கிடக்கின்றன, கல் நெஞ்சம் கொண்டவரையும் கலங்க வைத்திடும் கொடிய கோரக் காட்சிப் படலங்களாக அவை அமைந்துவிட்டன.

நிர்க்கதியான நிலையில்...

ஈடு செய்ய முடியாத இழப்பினைத் தாங்கிய மக்களெல்லாம் முற்றிலும் நிர்க்கதியான நிலையில் நிலை குலைந்து போயிருக்கின்றனர், அவர்களுக்கு எந்த வகையிலும் ஆறுதல் அளித்திடல் முடி யாது என்கிற நிலை உள்ளது, ஆறுதல் அளித்திடல் முடியாது என்று வாளா (சும்மா) இருந்திடவும் முடியாது; இருந் திடவும் கூடாது.

திட்டப் பணிகளெல்லாம் போர்க்கால அடிப்படையில்.....

இதில் அரசுக் கேந்திரம்தான் முனைப் போடு இருந்து வேகத்தோடும் விவேகத் தோடும் செயலில் இறங்கி சிறப்புத் திட்டப் பணிகளை வகுத்து நிறைவேற்றி துயர்த் துடைத்திடல் வேண்டும். அந்தத் திட்டப் பணிகளெல்லாம் போர்க்கால அடிப் படையில் முடுக்கிவிடப்பட வேண்டும்,  மின்சாரம் வழங்குதல், பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குதல், சாலை சீரமைப்புகள், பாதிக்கப்பட்ட பள்ளிகள் சீரமைப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை அளித்து உடனடியாக நிறைவு செய்திடல் வேண்டும்.

வாரிசுக்கு அரசு வேலை.....

உயிர்ச் சேதங்களுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் நிவாரண நிதியி லிருந்து உடனடியாக நிவாரணம் அளிக் கப்பட்டிருக்கிறது; ஆறுதல் அளித்திடும் செய்தி.
உயிரிழந்தவர் குடும்பத் தலைவராக இருப்பின் அல்லது குடும்பத்தை பொறுப் பேற்று நடத்தும் நிலையிலிருந்தால் வாரிசுக்கு அரசு வேலை வாய்ப்பளித்து குடும்பத்தை காப்பாற்றிடல் வேண்டும்.

மீனவர் காப்பீட்டுத் திட்டத்தை....

கடலும் கடல் சார்ந்த பகுதிகளிலும் வாழும் மீனவர்கள். அவர்களுடைய குடும்பத்தினர். புயல், கடல் கொந்தளிப்புப் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளுக்குப் பெரிதும் இலக்காவதால் அவர்களுக் கான மீனவர் பாதுகாப்பீட்டுத் திட்டத்தை நிறைவு செய்வதோடு உரிய பாதுகாவ லான கல் வீடுகளை கடலுக்கு உயர்வான இடங்களில் கட்டித்தரத் திட்டங்கள் தீட்டிடல் வேண்டும், புயலால் படகுகளை இழந்தவர்களுக்கும் படகு சேதமடைந்த உரிமைதாரருக்கும் நிவாரண நிதியை இழப்பை ஈடுகட்டும் அளவில் கூட்டியே கொடுத்திடல் வேண்டும்,

பாதுகாவலான கல் வீடுகளை.....
பெரும்பாலும் கூரைவேய்ந்த வீடுகளை யும், குடிசை வீடுகளையும் உரைவிடமாகக் கொண்டு உழலும் ஏழை, எளிய மக்க ளெல்லாம் புயல். வெள்ளம், கடும் மழை, தீ போன்ற இயற்கை இடர்ப்பாடுகளுக்குப் பெரிதும் ஆட்படுவதால் பாதுகாவலான கல் வீடுகளை மேட்டுப்பகுதிகளில் கட்டித்தரத் திட்டங்கள் தீட்டிடல் வேண்டும். மக்கள் பெருக்கத்தையும் இட நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல். தரமற்ற தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கிராமங்கள் தோறும் தரமான அடுக்குமாடி வீடுகளையும் திட்டம் போட்டு அரசே கட்டித்தரலாம், அடுக்கு மாடி கட்டடங்களை உருவாக்கிடும்போது குடும்பத்தைக் கணக்கில் கொணராமல் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறைகளையும் முற்றங்களையும் அமைத்து அடுக்குமாடி கட்டடங்களை வடிவமைக் கலாம், கூரை வீடுகளும். குடிசைகளும் இல்லா நிலையை உண்டாக்கலாம், ஏழை. எளியோருக்கு இலவசமாக கட்டித்தருவ தோடு. வசதி வாய்ப்பு உள்ளோரிடமிருந்து நீண்ட கால சுலப தவணையில் கட்டுமான செலவீட்டிற்கான கட்டணத்தை வசூல் செய்யலாம், மக்களைப் பாதுகாக்கவல்ல திட்டமாகவும் அமையும் இச்சீரிய திட்டத் திற்கு உலக வங்கியின் கடனையும் பெற்றிடலாம்.

விவசாயக் கடன்.... ரத்து செய்திடல் வேண்டும்......

தானே புயலானது, செல்வந்தர், ஏழை என்கிற வித்தியாசம் பாராட்டாமல் அனைவரது உடமைகளுக்கும் பாதிப் பினை உண்டாக்கியிருப்பதால் பாதிப்பிற் குள்ளான மாவட்டங்களின் வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றோரின் கடன் தொகையை, தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் முழுவதுமாக ரத்து செய்திடல் வேண்டும், இதற்கான ஆணையை, மத்திய அரசும் மாநில அரசும் உடனடியான பிறப்பித் திடல் வேண்டும்.

மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயினை நிவாரண நிதியாக ஒதுக்கி வழங்கிடல் வேண்டும்.....

தேசிய இடர்ப்பாடாக உருவெடுத்து விட்ட தானே புயல் பாதிப்பு பெருமளவில் இருப்பதாலும், புனர்வாழ்வுக்கான திட்டப் பணிகள் தொடரவேண்டி இருப்பதாலும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயினை நிவாரண நிதியாக ஒதுக்கி வழங்கிடல் வேண்டும். வீடு மனைகளை முழுமையாக இழந்தோருக்கும், பகுதி பாதிப்பிற்குள்ளானோருக்கும்; வாழ்வா தாரத்திற்கான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதம். கரும்புத் தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், பூந்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், சவுக்குத் தோப்புகள், மா, பலா, முந்திரி, கொய்யா மரத் தோப்புகள். இன்னபிற காய்-கனி தரும் மரம் செடி, கொடிகள் பாதிப்பு போன்றவற்றிற்கெல்லாம் நிவா ரணத் தொகைகளைத் தாராளமாகவே அளித்திடுவதற்கு ஆளும் பொறுப்பிலுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள்தான் அறிவித்திடல் வேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்டோருக்கு அரசு அளிக்கின்ற நிவாரண உதவி எந்த வகையிலும் ஈடு கொடுக்கமுடியாது என்பது அனைவரது கருத்து மட்டுமன்று; கணிப்பும் கூட, இத் தருணத்தில் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவது பொருத்தமாக இருக்கும்:
மாற்றுப் பயிரிடுவதற்கான நிலங்கள் தயார் செய்திடுவதற்கு...
புனர்வாழ்வு கிடைப்பதற்கு...

அதாவது, வாழ்வாதாரத்திற்கு அடிப் படையாக அமைந்து தொடர்ந்து பயனளித்து வந்த, பயனளிக்கக்கூடிய மா, பலா, முந்திரி, தென்னை போன்றவற்றை நட்டு வளர்த்து - வளர்ந்து பலன் தருவதற்கு; பலன் பெறுவதற்கு சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக பயிர் செய்யவல்ல மணிலா (வேர்க்கடலை), கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், தினை, துவரை போன்ற மாற்றுப் பயிரிடுவதற்கான நிலங்கள் தயார் செய்திடுவதற்கு அரசு கேந்திரம் பெரு மளவில் உதவிடவேண்டும். கூடவே, மா, பலா, முந்திரி, தென்னை போன்றவற்றிற் கான கன்றுகளையும் நட்டு வளர்த்து வருவதற்கும் வழிவகை செய்யலாம், குறிப்பிட்ட அரசு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தால் சீர்குலைந்து நிற்கும் மக்களுக்கு புனர்வாழ்வு கிடைப்பதற்கு பெரிதும் உதவிடும் அதற்காக பொக்ளின் புல்டோசர் பேன்ற இயந்திரங்களை பயன்படுத்தி பாழ்பட்ட மரங்களை அப் புறப்படுத்தி விளைநிலங்களாக் கிடலாம், தேவையான இடங்களில் போர் வெல் எனும் ஆழ்த்துளைக் கிணறுகள் அமைத் துப் பாசன வசதி செய்து தரலாம். மனத் தால் நிலை குலைந்து போயிருக்கும் மக்களும் மன உறுதியோடு எழுந்து நிற்க வேண்டும். எதையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே இருந்திடல் வேண்டும். மாற்று வழியிலும் கடுமையான உழைப்பிலும், திட்ட மிடுதலும் மார்க்கம் இல்லாமலா போய் விடும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...