நேதாஜி என்று அழைக் கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.
கல்லூரி மாணவர் பருவத்திலேயே வீரமிக்க இளைஞராக அரும்பியவர்.
ஒரு கட்டத்தில் காந்தி யாரா? நேதாஜியா? என்று பேசப்பட்டவர். காங்கிரஸ் தலைவராக நேதாஜிக்கும் - பட்டாபி சீத்தாராமய்யா வுக்கும் போட்டி ஏற்பட்ட நிலையில், பட்டாபியின் பக்கம் காந்தியார் நின்றார்.
நேதாஜி வெற்றி பெற்ற நிலையில், பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என்று காந்தியாரே ஒப்புக் கொண்டார் என்றால், நேதாஜியின் செல்வாக்கை மதிப்பிட்டு விடலாம். இளை ஞர்களின் நம்பிக்கை நட் சத்திரமாக ஒளி வீசியவர் அவர்.
வெள்ளையர் ஆட்சி சாம்ராஜ்ஜியத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி யவர்.
1941 ஜனவரி 16 ஆம் நாள் மாறுவேடத்தில் வெள் ளையர்களின் புலனாய்வுத் துறைக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு இந்தியா விலிருந்து தப்பிச் சென் றவர்.
சிங்கப்பூர் சென்று ஜப் பான் நாட்டின் துணை யோடு இந்தியர்களைக் கொண்ட இராணுவத்தை நிறுவினார். பிரிட்டீஷ் இராணுவத்தை எதிர்ப்பது என்ற ஒரு திட்டத்தை வகுத்தவர். ஜெர்மனியிலி ருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் 91 நாள்கள், 24,000 கிலோ மீட்டர் பயணம் செய்தார் நேதாஜி என்றால், இதனை நம்புவதுகூட கடி னமான ஒன்று என்றாலும், அதனைச் சாதித்துக் காட்டியவர்.
அவர் உயிருடன் இருக் கிறாரா? கொல்லப்பட் டாரா? என்ற சர்ச்சை இன்றுவரை இருக்கத்தான் செய்கிறது.
நேதாஜியைப்பற்றி இந் தத் திசையில் செய்திகள் உலா வந்தாலும், அவரு டைய சமுதாயச் சிந்தனை எவ்வளவு தெளிவானது - கூர்மையானது என்பது எத்தனைப் பேர்களுக்குத் தெரியும்?
காந்தியாரின் பல்வேறு கருத்துகளில், அணுகு முறைகளில் மாறுபட்டது போலவே, சமுதாயப் பார் வையிலும், அடிப்படையில் வேறுபட்டவர்தான்.
ஜாதியை ஒழிப்பதில் அதிதீவிர நம்பிக்கை உடையவன். அது சம்பந்த மாக என்னாலான பிரச் சாரமும் செய்து வருகி றேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கை களையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப் படும் புதிய சமூகம் சுதந்திர இந்தியாவுக்குரியதாகும். சிலர் தீண்டாமையை மாத் திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத் தையும், கலப்பு மணத்தை யும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண் டவனல்ல. நாம் எல்லோரும் ஒன்று என்றால், மனி
தனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருத்த லாகாது.
(குடிஅரசு, 26.10.1930)
(குடிஅரசு, 26.10.1930)
இப்படி சொன்ன நேதா ஜியையும் வெளிச்சத்துக் குக் கொண்டு வரவேண் டாமா?
- மயிலாடன்
No comments:
Post a Comment